4-சுஜாதாவைப் பற்றி திருமதி சுஜாதா…


sujatha56

பொதுவா அவர் ரொம்ப கலகலப்பா பழகக் கூடியவர். நண்பர்கள் கிட்டயெல்லாம் ஜாலியா பேசிட்டிருப்பார். கதை எழுத ஆரம்பிச்சதும் அவரோட மூட் மாறிடும். சீரியசாயிடுவார். உட்கார்ந்து யோசிச்சுகிட்டே இருப்பார். பசி தாகம் தெரியாது. சாப்பிடக் கூப்பிட்டாலும் வர மாட்டார். வீடு விஷயங்கள் எதுவும் அவருக்குத் தெரியாது. லௌகீகமான விஷயங்களைப் பத்தி அவர் யோசிக்க மாட்டார். நானும் அது பத்தி கம்ப்ளையிண்ட்ஸ் சொன்னது இல்லை. அதனால அவர் இடையூறு இல்லாம தன்னோட வேலைகளைச் செஞ்சுட்டு இருந்தார். பசங்க மேல ரொம்ப அட்டாச்மெண்ட் அவருக்கு உண்டு. ஆனா அவருக்கு ஆஃபிஸ் வேலையும் எழுத்து வேலையும் முழுக்க இருந்ததால குழந்தைங்க விஷயத்தில தனிப்பட்ட கவனம் எடுத்துக்க முடிஞ்சதில்லை. பசங்களை அப்படி ஆக்கணும், இப்படிப் படிக்க வைக்கணும் அப்படீன்னு எல்லாம் அவர் யோசிச்சதில்லை… ‘படிக்கற குழந்தை எந்த ஸ்கூல்ல வேண்டுமானாலும் படிக்கும். நான் ஸ்ரீரங்க திண்ணை பள்ளிக்கூடத்தில்தான் படிச்சேன்’ அப்படீம்பார்.

தொடரும்…

Sujatha_0

? உங்கள் எழுத்து மற்றும் எழுதும் சூழ்நிலை பற்றி…

! எழுத்து எனது மிகத் தனிப்பட்ட சமாசாரம். என் எழுத்து என் வீட்டில், ஒரு மூலையில், ஒரு மேஜை விளக்கின் அடியில், மிகமிகத் தனியான ஒரு சூழ்நிலையில் உருவாவது. அப்போது எனக்கும் வெளிஉலகத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

? எழுதுகையில் உங்களுக்கே உரிய பாணியில் எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதும்போது என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு எழுதுகிறீர்கள் ?

! முதலில் யோசிக்காமல் எழுதுவேன். திருப்பிப் படிக்கும்போது சிந்தித்து திருத்துவேன்.

? தங்களின் எழுத்துலக வாரிசு…?

! எழுத்து என்பது என் பரம்பரைச் சொத்தல்ல. இதற்கெல்லாம் வாரிசுகளை நான் நியமிக்க முடியாது.

? இளம் எழுத்தாளர்களிடம் உள்ள பலம் – பலவீனம் என்ன ?

! பலம் – புதிய புதிய வார்த்தைப் பிரயோகம், நவீன சிந்தனை.
பலவீனம் – மற்ற எழுத்தாளர்களைப் படிக்காமல் எழுதுவது.

? எழுதுவதற்கென்று ஏதாவது விதிகள் உள்ளனவா?

! நல்ல அப்சர்வேஷன் பவர் வேண்டும். எனது கண்களையும் காதுகளையும் எப்போதும் கவனமாகத் திறந்துவைத்திருக்கிறேன். வாசிப்பது எழுதுவதற்குப் பெரிதும் துணை புரிகிறது. எதைப்பற்றித் தெளிவாகத் தெரியுமோ அதைப் பற்றியே எழுதவேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s