சுஜாதாவுக்கு சுதாகர் எழுதிய கடிதம்…


சுஜாதா அவர்களுக்கு நான் எழுதிய கடிதம்(25/3/2003) ஒன்று கிடைத்தது. அதற்கு அவரிடமிருந்து பதிலெல்லாம் ஒன்றும் வந்துவிடவில்லை. அவரது வாசகனான நான், எனது கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ள விரும்பினேன் அவ்வளவுதான். TSCII -ல் அடித்த கடிதம். யூனிகோடில் மாற்றியிருக்கிறேன்.

மதிப்பிற்குரிய திரு.சுஜாதா அவர்களுக்கு,

நான் தங்களுடைய “கற்றதும் பெற்றதும்‘ பகுதியை ஒன்று விடாமல் விரும்பிப் படிப்பவன். கடந்த வாரம் தாங்கள் எழுதியிருந்த பகுதியில் “பாகிஸ்தானுடன் ஏன் இத்தனை வெறுப்பு?” என்பதற்கு தாங்கள் கூறியிருந்தவற்றில் எனது கருத்துக்களைக் கூற விரும்புகிறேன்.

1. பாக்-குடன் வெறுப்பு காஷ்மீரத்தில் தொடங்கியதல்ல.. அதற்கு முன்பே 40-களில் ஏற்பட்ட இந்து முஸ்லிம் வன்முறைகள் ( பெரும்பாலும் மூல்தான்போன்ற இப்போதைய பாக் பகுதிகளிலும், முன்றைய கிழக்குப் பாக்கிஸ்தான் பகுதிகளிலும்), பெருவாரியாக இந்தியாவில் குடிபெயர்ந்த மக்களிடம் ஆறாத ரணத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது. அந்தத் தலைமுறைகளிடம் வரலாறு கேட்டு வளர்ந்த இப்போதைய இளைஞர்கள் அந்த வெறுப்பைக் கொண்டிருப்பது ஆச்சரியமல்ல.

2.டெல்லி, கல்கத்தா, மும்பை நகரங்களில் இப்போதும் முதியவர்கள், பிரிவனை பற்றிப்பேசும் போது உணர்ச்சிவசப்படுவதைப் பார்க்கலாம். காஷ்மீர் வன்முறைகளும், பயங்கரவாதச் செயல்களும் பாக்கின் மீதுள்ள வெறுப்பை மேலும் வளர்க்கின்றனவே தவிர, அதுவே மூலச்செயல்களல்ல. கிரிக்கெட் மேட்ச் ஆராவாரங்கள் பிரதிபலிப்புகளே.

3. காஷ்மீர் பற்றி நீங்கள் மேலும் எழுதவேண்டும். நீங்கள் எழுதியது ஏதோ இந்தியா அனாவசியமாக காஷ்மீரில் அத்துமீறி ஆக்ரமித்துக் கொண்டிருப்பது போலவும், சர்தார் படேல் ஒரு காரணமாக இருந்தது போலவும், நாம் அதற்கு குற்ற உணர்வு கொள்ளவேண்டுமென்று சொல்வது போலவும் உள்ளது. நேருவின் காஷ்மீர் குறித்தான பாரபட்சம், சரியான முடிவு எடுக்க தயக்கம் காட்டியது போன்ற அரசியல் அந்தர்பல்டிகளை மக்கள் தெளிவாக உணர நீங்கள் எழுதுவதுதான் முறையாக இருக்குமென கருதுகிறேன்.

உங்கள் “கற்றதும் பெற்றதும்” மக்களிடையே நல்ல மதிப்பைப் பெற்றிருக்கிறது. இதனை எல்லோருக்கும் பயன்படுமாறு நமது சரித்திரத்தின் அவலமான பாக் பிரிவினை பற்றி நீங்கள் சரிநோக்குடன் எழுதுவது மிகக் பொருத்தமாக இருக்கும்.

போர், ரத்தம்,பிரிவினை பார்க்காத சாதாரணத் தமிழனால் பஞ்சாபிகள், பெங்காலிகள், சிந்திகள், குஜராத்திகள் அனுபவித்த கொடூரங்களை மேல்போக்கான செய்திகளால் உணர முடிவதில்லை. எனது தாயார் பாக் பிரிவினை சமயத்தில்,பங்களாதேஷ் எல்லையில் இருக்கும் மால்டாவில் வாழ்ந்தவர். அங்கிருந்து, மிகக் கஷ்டப்பட்டு, தமிழ்நாடு மீண்டவர். அவரிடம் கேட்ட கதைகள் இன்னும் என் மனதில் அழுத்தமாக பதிந்திருக்கிறன. மேலும் நான் மும்பையிலும், அகமதாபாத்திலும் வாழ்ந்தவன்.. வாழ்கின்றவன். நான் பார்த்த, பழகிய மக்களிடம் கேட்ட கொடூரச்செயல்களை நினைக்கவே பயமாக இருக்கையில், அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் தீவிரம் புரியும்.

எனவே, இதனைக்குறித்து தாங்கள் விரிவாக எழுதுவது நமது மக்களிடம் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதோடு, உண்மையான “இந்தியத்துவா” குறித்து ஒரு தெளிவையும் ஏற்படுத்தும். விரைவில் உங்களது கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

தங்களன்புள்ள,
க.சுதாகர் (ஸ்ரீ மங்கை)

சுதாகர் குறிப்பிடும் சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்‘ கட்டுரை இதோ…

Katrathum_Petrathum_II

எப்படி வந்தது இத்தனை வெறுப்பு ?

மெரீனாவில் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச். மெகா மகா டி.வி. திரை முன் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி டெண்டுல்கரின் ஒவ்வொரு ரன்னையும் கைதட்டி வரவேற்ற போது, கடற்காற்றில் மின்சாரம் பரவியிருப்பதை உணர முடிந்தது. இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் கிரிக்கெட் ஆட்டமில்லை… யுத்தம். நம் அணி வேர்ல்ட் கப் ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை…பாகிஸ்தானை ஜெயித்து விட்டோம். வாஜ்பாய் வாழ்த்து அனுப்புகிறார். ஜெனரல் விஜ் தந்தி அடிக்கிறார்!

எப்படி வந்தது இத்தனை வெறுப்பு ? பொதுவாகவே நம் நாட்டில் தற்போது நிலவும் ஹிந்துத்வ அலையும் ஒரு காரணமா, கார்கில் ஒரு காரணமா, தீவிரவாதம் ஒரு காரணமா? பாகிஸ்தானை ஏன் இந்த அளவுக்கு வெறுக்கத் துவங்கி விட்டோம்? அந்த வெறுப்புக்கு ஒரு முக்கியக் காரணத்தை நாம் எல்லோரும் மறக்கிறோம். காஷ்மீர் பற்றி நமக்கு இருக்கும் லேசான குற்ற உணர்ச்சி என்று சொல்ல வேண்டும். அதைச் சரியாகப் புரிந்து கொள்ள 1947-க்கு முன் நிகழ்ந்த சம்பவங்கள் தெரிய வேண்டும். வல்லபாய் பட்டேல், கையாலாகாத இந்து ராஜா, முஸ்லீம் பிரஜைகள், அவசரப் போர் போன்ற சரித்திர நிகழ்வுகளை உணர்ச்சி வசப்படாமல் பார்க்க வேண்டும். அதற்குக் காலம் கடந்து விட்டது.

Advertisements

One thought on “சுஜாதாவுக்கு சுதாகர் எழுதிய கடிதம்…

  1. rjagan49 March 4, 2014 at 7:05 AM Reply

    Appreciations to Mr. Sudhakar for his letter to Sujatha. May be Sujatha was busy in many things and felt not acknowledging the same. But I feel he would have felt that he also didn’t know fully what happened before the partition. It is true Tamils / South Indians were insulated from the partition pangs and hence were never able to understand the full impact of the pains and sufferings of people. Compare this with Tamilians – at least politicians – worked up about Srilankan atrocities against Lankan Tamils and this issue doesn’t make a great impact in rest of India. I think both governments want to downplay the sufferings of millions during partition as they want to maintain some peace. – R. J.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s