சுஜாதாவிடம் கற்றதும் பெற்றதும் – கே.ஜி.ஜவர்லால்


sujatha33

NLP யில் உன்னதத்தை அடைவதற்கான வழிமுறைகளில் முக்கியமானதாக Copying Excellence என்பது சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது நான் எந்தத் துறையில் உன்னதம் அடைய விரும்புகிறேனோ அந்தத் துறையில் உன்னதமான ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவர் என்ன செய்தாலும், எப்படிச் செய்தாலும் அதைக் கள்ளாங் காப்பி அடிக்க வேண்டும். ஹேர் ஸ்டைல், மீசை, சட்டை அணியும் விதம், நடை, பேசுகிற முறை, எழுதுகிற முறை, கையெழுத்துப் போடும் ஸ்டைல், படிக்கிற புஸ்தகங்கள், பார்க்கிற மனிதர்கள், ரசிக்கும் பாட்டுக்கள் என்று சகலத்தையும் தட்ட வேண்டும்.

அதற்குப் பிறகு நான் அடைய விரும்பும் விஷயத்துக்குத் தொடர்பில்லாதவைகளை ஒவ்வொன்றாக நீக்க வேண்டும். மீதமிருப்பது Value Adding Feature கள் மட்டுமே.

கொஞ்சம் அனுபவப்பட்டால் ஒரு மனிதரின் Value Adding Feature-கள் என்னென்ன என்பது முதற் பார்வையிலேயே தெரிந்து விடும். அதை மட்டும் தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதையே கொஞ்சம் மேம்படுத்தி ஒரு நபரின் உன்னதத்திற்கு பதில் அத்தனை உன்னதங்களையும் உறிஞ்சிக் கொள்ளும் திறமை இருந்தால் எப்படி இருக்கும்?

சுஜாதா இதில் விற்பன்னர். உலக அரங்கில் இருந்த அத்தனை எழுத்தாளர்களின் உன்னதத்தையும் கிரகிக்கவும் அதைத் தன் எழுத்தில் கொண்டு வரவும் திறமை படைத்தவராக இருந்தார்.

சுஜாதாவின் எழுத்துக்கள் ஸ்டான்லி கார்ட்னர், ஃப்ரெட்ரிக் ஃபோர்ஸித், சிட்னி ஷெல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர், ஓஹென்றி, ஜெயகாந்தன், பிச்சமூர்த்தி, கல்கி, ஜானகிராமன், தேவன் எல்லாரையும் உள்ளடக்கி அவரது சுய அறிவு, அனுபவம், சிந்தனை இவைகள் பெரும்பகுதியாக உருவான Compound. அதில் எந்த Element இன் குணாதிசயமும் இருக்காது. முற்றிலும் புதிய பௌதிக, இரசாயன குணங்கள் கொண்ட ஒரு Compound அது.

இதுதான் நான் சுஜாதாவிடம் கற்றது.

KGJ

2 thoughts on “சுஜாதாவிடம் கற்றதும் பெற்றதும் – கே.ஜி.ஜவர்லால்

  1. R. Jagannathan March 2, 2014 at 7:13 PM Reply

    மிகச் சரியான கணிப்பு! எழுதியவர் ஜவஹர்லாலா இல்லை ஜவர்லாலா?! – ஜெ

    • BaalHanuman March 3, 2014 at 2:24 AM Reply

      அவர் ‘ஜவர்லால்தான்’ 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s