3-சுஜாதாவைப் பற்றி திருமதி சுஜாதா…


Sujatha_9

வேலையிலே ரொம்ப சின்சியரா இருப்பார். மாசக் கணக்கில் வெளியூர் டூர் போய்டுவார். சில சமயம் காலங்கார்த்தால 4 மணிக்கு எல்லாம் இன்ஸ்டலேஷனுக்குப் போக வேண்டியிருக்கும். ஆளுங்க வரலைன்னா இவரே மண்வெட்டியை எடுத்துக்கொண்டு தோண்ட ஆரம்பிச்சுடுவார். மத்த தொழிலாளிங்க என்ன சாப்பிடுவாங்களோ அதையேதான் இவரும் சாப்பிடுவார். யார்கிட்டயும் எந்தத் தனி மரியாதையையும் எதிர்பார்க்க மாட்டார். வேலைக்கு அஞ்ச மாட்டார். ரொம்ப நேர்மையான அதிகாரின்னு அவருக்குப் பேர் இருந்தது. அதுனாலயே அவரோட ப்ரோமோஷன் எல்லாம் ரொம்ப தாமதமாச்சு. வடக்கு தெற்கு பாகுபாடு வேற. இவருக்கு நியாயமா கிடைக்க வேண்டிய  அங்கீகாரம் எதுவும் கிடைக்கலே. அதான் அந்த வேலைய விட்டுட்டு பாரத் எலெக்ட்ரானிக்ஸ்ல வந்து ஜாயின் பண்ணினார்.

தொடரும்…

Sujatha_0

? சோம்பேறித்தனத்தைக் கைவிடுவது எப்படி ?

! என் முறை இது. எடுத்த காரியத்தை ஒத்திப் போட மாட்டேன். இன்று இதெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு சிறு பட்டியல் எழுதி வைத்து, மறு தினம் அதில் செய்து முடித்தவைகளை அடித்து விடுவேன்.

? வயதானதால் ஞாபக சக்தி குறையுமா சார் ?
! ஞாபகங்கள் கூடும். ஞாபக சக்தி குறையும்.

? ஒருவன் எப்போது வயதாகி விட்டது என்பதை அப்பட்டமாக உணர்கிறான் ?
! பக்கத்து வீட்டுப் பெண் பதற்றமில்லாமல் பக்கத்தில் உட்கார்ந்து பேசும்போது!

? நீங்கள் சிகரெட் பிடிக்க ஆரம்பித்ததற்கும், அதை விட்டதற்கும் என்ன காரணங்கள் ?
! ஆரம்பித்ததற்கு இளமை காரணம்; விட்டதற்கு இதயம் காரணம்.

? பக்கத்து வீட்டுப் பெண் பார்க்கும்போதெல்லாம், ஒரு மாதிரி ஆகி விடுகிறதே, அது ஏன் ?

! வீடு மாற்றுங்கள்.

Advertisements

3 thoughts on “3-சுஜாதாவைப் பற்றி திருமதி சுஜாதா…

 1. ரசிக்க வைக்கும் பதில்கள் – என்றும்…

  • BaalHanuman March 1, 2014 at 5:09 AM Reply

   உண்மைதான் தனபாலன் 🙂

 2. R. Jagannathan March 1, 2014 at 7:42 AM Reply

  //? நீங்கள் சிகரெட் பிடிக்க ஆரம்பித்ததற்கும், அதை விட்டதற்கும் என்ன காரணங்கள் ?
  ! ஆரம்பித்ததற்கு இளமை காரணம்; விட்டதற்கு இதயம் காரணம்.//

  The great Sujatha style in answers too! How short and to the point!

  -R. J.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s