2-சுஜாதாவைப் பற்றி திருமதி சுஜாதா…


Sujatha_19

70-கள்லேயே அவருக்குப் பெரிய ரைட்டர்ங்கிற பேர் வந்துடுச்சு. அவர் எப்பவும் நிறைய படிச்சுட்டே இருப்பார். எப்பவாச்சும்தான் எழுதுவார். பாப்புலரானதுக்கு அப்புறம்தான் ஞாயிற்றுக்கிழமைகள்ல உட்கார்ந்து தொடர்கதைகள் எல்லாம் எழுதிட்டு இருப்பார். அவர் சில சமயம் நாலைஞ்சு தொடர்கதைகள் கூட ஒரே சமயத்தில் எழுதியிருக்கார்… எல்லோரும் நினைச்சுப்பாங்க அவர் தினமும் எழுதுவார்னு… அப்படியில்லை… தினமும் ஆஃபீசில் இருந்து வருவார்… வந்துட்டு க்ளப்புக்குப் போய்டுவார். இவர் சீட்டாட மாட்டார்… ஆடுறவங்களை வேடிக்கை பார்த்துட்டு இருப்பார். வீட்டுக்கு வந்து படிச்சுட்டு இருப்பார். ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழுநேரம் இருந்து எழுதுவார். அப்படி எழுதினதுதான் நிறைய கதைகள். மத்தபடி வெளியே போனா புஸ்தகக் கடைக்குத் தான் போவார். ஃப்ரெண்ட்ஸ்… சொந்தக்காரங்க யார் வீட்டுக்கும் அவ்வளவா போக மாட்டார்.

தொடரும்…

Sujatha_0

? நிறைய எழுதுவது – அதிகமாகப் படிப்பது இதில் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் ?

! நிறைய எழுத அதிகமாகப் படிக்க வேண்டும்.

? நீங்கள் கவனிக்கும் விஷயங்களை எழுதுகிறீர்களா ? அல்லது எழுதுவதற்காக கவனிக்கிறீர்களா? இரண்டாவது என்றால் விஷயங்களை இயல்பாய் ரசிக்க முடியாமல் போய்விடுமே?

! கவனிக்கும்போது இரண்டுமே இயங்கும். எங்காவது ஒரு மூலையில் மூளையில் பதிவாகும். பிறகு எழுத்தாகும்.

? நீங்கள் எப்படி இன்றும் தொடர்ந்து ஃபீல்டில் இருக்க முடிகிறது ?

! தொடர்ந்து படிப்பதால்.

? ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான, முக்கியமான அடிப்படைக் ‘குணம்’ என்ன ?

! கூர்மையான பார்வை, காது, படிப்புத் திறன்.

? ஓர் எழுத்தாளன் எப்போது உயர்வான் ?

! தன் எழுத்தின் குறைகளை அறியும்போது.

One thought on “2-சுஜாதாவைப் பற்றி திருமதி சுஜாதா…

  1. முடிவின் பதில் தான் உயர்விற்கு காரணம்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s