1-சுஜாதாவைப் பற்றி திருமதி சுஜாதா…


Sujatha_18

எங்களுக்குத் திருமணம் நடந்தது 1963 ஜனவரி 28. அப்ப அவர் எஸ்.ரங்கராஜன்ங்கிற பேரில் குமுதத்தில் சில கதைகள் எழுதியிருக்கார்னு தெரியும். நான் படிச்சதில்லை. கல்யாணத்துக்கு முன்னால அவரை நான் நேர்ல பார்த்ததில்லை. நல்லா படம் வரைவார், கிடார் வாசிப்பார்னு  கேள்விப்பட்டிருக்கேன்…கல்யாணம் ஆனவுடன் அவர் ஆஃபீஸ் விஷயமா ஒரு டூர் போய்ட்டார். என்னை என் மாமனார் டெல்லிக்கு அழைத்துக்கொண்டுபோய் குடித்தனம் வைத்துவிட்டு வந்தார். 63-ல இருந்து 69 வரை டெல்லியிலிருந்தோம். கவர்மெண்டில் டெக்னிகல் ஆஃபீசராக இருந்தார். டெல்லியில இருந்தப்ப பாஷை தெரியாம கொஞ்சம் கஷ்டப்பட்டேன். குழந்தைகள்  அங்கதான் பிறந்தாங்க… 69-ல் பெங்களூர் வந்துட்டோம்…அப்புறம் அவர் 93-ல் ரிட்டையர் ஆகற வரைக்கும் பெங்களூரில்தான் இருந்தோம்.

தொடரும்…

Sujatha_0

‘சுஜாதா’ன்னு ஆரம்பத்திலேயே இந்தப்பெயரை வைத்து எழுத ஆரம்பித்து விட்டீர்களா?

கல்யாணத்துக்கு முன்னாடி, எஸ்.ரங்கராஜன்ற பெயர்ல ஒரு வருஷம் எழுதிக்கிட்டு இருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறம்தான் ‘சுஜாதா’ங்கற பெயர்ல எழுத ஆரம்பிச்சேன்.

? மனைவியர் தினத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

! என்னைப் பொறுத்த வரையில் மனைவியர் தினம் இல்லை. மனைவி தினம்தான்.

? புனைபெயரில் பிரபலமாய் இருப்பதை விடச் சொந்தப் பெயரில் பிரபலமாக இருந்திருக்கலாமே என்று என்றாவது எண்ணியதுண்டா…?

! உண்டு. இதனை பிரபலமாகியிருப்பேனா என்கிற சந்தேகமும் உண்டு.

? திருமணம் செய்தால் சுதந்திரம் பறி போய்விடும் என்கிறார்களே, அப்படியா ?

! ஆமாம். தீயவை செய்யும் சுதந்திரம் பறி போய்விடும்.

? நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். எனக்கு உங்கள் அறிவுரை என்ன ?

! இப்போதே பேச விரும்புவதையெல்லாம் பேசி விடுங்கள்.

Advertisements

3 thoughts on “1-சுஜாதாவைப் பற்றி திருமதி சுஜாதா…

 1. R. Jagannathan February 27, 2014 at 8:08 AM Reply

  Have you / any of your readers, any access to stories of Sujaathaa written before his marriage in his own name? Intereted to see if his style changed later! – R. j.

  • BaalHanuman March 1, 2014 at 5:16 AM Reply

   அன்புள்ள R.J,

   கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்…

 2. Raju Iyer February 27, 2014 at 2:51 PM Reply

  நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். எனக்கு உங்கள் அறிவுரை என்ன ?

  ! இப்போதே பேச விரும்புவதையெல்லாம் பேசி விடுங்கள்.

  Really good one… 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s