8-எண்ணுகிறேன்.. எழுதுகிறேன்… – திருமதி சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

_MG_2251

வளர்ந்துவரும் மேலைநாட்டு கலாச்சாரத்தை நாம தடுக்க முடியாதுன்னாலும் அதனால கெட்டு சீரழியும் அடுத்த தலைமுறையினரைப் பார்த்தா கவலைப்படாம இருக்க முடியல. அதுக்கு முக்கிய காரணம் வெளியில இருக்கற விஷயங்கள் இல்லை. அவங்களைப் பெத்தவங்கதான்.

முதல்ல இந்தக் காலத்து குழந்தைங்க ஆரோக்கியமா இல்லைங்கறதை நாம ஒப்புக்கணும். அவங்கள்ல யாருமே ஆரோக்கியமா இல்லைங்கறது ரொம்ப வருத்தமான விஷயம். அவங்களோட அம்மா ஆரோக்கியமா இருந்தாதானே குழந்தை ஆரோக்கியமா இருக்கும். எங்களோட உணவு முறையை எடுத்துக்கிட்டீங்கன்னா, வருஷத்துக்கு ஒருமுறை தீபாவளிக்குதான் பட்சணம். நடுவுல நொறுக்குத் தீனி எல்லாம் இல்லவே இல்ல. படிப்போம். வீட்டு வேலை செய்வோம். எம்பிராய்டரி பண்ணுவோம். ஓய்வு நேரங்கள்ல உறவினர் வீடுகளுக்கு போவோம். அங்கேயும் ஏதாவது வேலை இருக்கும். கதை, நாவல்களைப் படிப்போம். அதான் எங்களுடைய பொழுதுபோக்கு. அப்போலாம் உணவுமுறையில ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஆனா இப்போ…?

தெருவுக்குத் தெரு பட்சணக் கடைகள், ஜங்க் ஃபுட்ஸ், டி.வி. பார்த்துக்கிட்டே சாப்பிட நொறுக்குத் தீனிங்க.. அதுக்கும் மேல ஞாயித்துக் கிழமைன்னாலே வெளியே ஏதாவது ஒரு மாலுக்கு போயே ஆகணும்னு ஒத்தைக்கால்ல நிக்கிறாங்க. போனா அங்க ஃபுல்லா ஃபாஸ்ட் ஃபுட்ஸ்தான். அவங்களால வீட்டு வேலைகளை செய்ய முடியுதா? முடியாது. ஏன்னா உடம்புல வலிமை சுத்தமா இல்லை. அவங்களுக்கு பொறக்கும் குழந்தை எப்படி ஆரோக்கியமா இருக்கும் சொல்லுங்க?

Young boy imitating father

ஒரு குழந்தை நல்ல பையனாவோ, பொண்ணாவோ சமுதாயத்துல வளரணும்னா அவங்களோட முதல் ரோல் மாடல் அவங்க பெற்றோர்கள்தானே! ஒரு வீட்ல ரெண்டு பேரும் கண்டிச்சு வளர்த்தாலும் அந்தக் குழந்தை நல்லா வளராது. ரெண்டுபேரும் கண்டுக்காம விட்டாலும் அந்தக் குழந்தை நல்லா வளராது இல்லையா? அப்படி இருக்கும்போது அப்பா கண்டிச்சா அம்மா என்ன பண்ணனும்? ‘அப்பா சொல்றாங்கள்ல இது வேணாம். நான் வேற வாங்கித்தரேன்’னு பிள்ளைய சமாதானம்தானே பண்ணனும். ஆனா இப்போ என்ன நடக்கிறது? ‘பிள்ளை கேட்டா வாங்கித்தர வேண்டியதுதானே. நீ கஷ்டப்பட்டேன்னு என் பிள்ளையும் எதையும் அனுபவிக்காம இருக்கணுமா’ன்னு அம்மா, அப்பாகிட்ட சண்டை போடறாங்க. இந்தக் குழந்தைகளுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. வளர்ந்ததுக்கப்புறம் தன்னோட துணைக்கிட்ட இதேமாதிரி சண்டை போடறாங்க.

இப்போலாம் எட்டு வயதுக் குழந்தைகூட மாடிப்படில நடக்கமாட்டேங்கறது. போய் லிஃப்ட் பட்டனைத்தான் அமுக்கறது. அவங்க அப்பா, அம்மாவே, ‘நாமதான் காசு குடுக்கறோமே வா லிஃப்ட்ல போலாம்’ன்னு சொல்றாங்க. முன்னாடி தனியா மாலுக்கு போனாங்க. இப்போ குழந்தைகளையும் அழைச்சுட்டு வாரா வாராம் போறாங்க. குழந்தை எது கேட்குதோ அதை வாங்கித் தர்றாங்க. அதனால் அவங்களுக்கு காசோட அருமையே தெரியறது இல்லை. ஒரு மாசத்துக்கு 20 படம் ரிலீஸாகுதுன்னா அத்தனையும் பார்க்கணும்னு நினைக்கிறாங்க. இதெல்லாம் யாரால வந்தது? பெற்றோர்களால்தானே?

Shoping Mall

எங்க காலத்துல குடிகாரங்கன்னா என்னன்னே தெரியாது. குடிச்சுட்டு கீழே விழுந்து கிடப்பாங்கன்னுலாம் தெரியாது. ஆனா இப்போ இருக்கற பசங்க டி.வி.ய பார்த்து எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிறாங்க. இதனால அஞ்சு வயசுப் பையன் ஃபேன்ஸி ட்ரெஸ் காம்படீஷன்ல குடிகாரன் மாதிரி அப்படியே நடிக்கிறான். ஆசிரியர்களும் ஒண்ணும் சொல்லாம கைதட்றாங்க. என்னா இப்போ குடிக்கறதோ.. சிகரட் பிடிக்கறதோ ஒரு கெட்ட விஷயமாவே தெரியறதில்லை. ஏன் மேல்தட்டு பெண்களே குடிக்கிறாங்களே! அதனால அந்தக் குழந்தைகள் பெரியவனானா குடிக்கறது ஒரு அத்தியாவசியமான விஷயம்னு நினைச்சுக்கிறான். அப்படியே குடிக்கு அடிமையும் ஆகிடுறான். கொஞ்சம் பணக்காரனா இருந்தா குடும்பத்துல நிம்மதி போயிடும். அதுவே அவன் கொஞ்சம் ஏழையா இருந்தா குடும்பமே நடுத்தெருவுலதான் நிக்கும். வெளிநாட்டுக்காரன் குடிக்கறான்னா, அங்க அவனுக்கு இருக்குற குளிருக்கு கத்திரிக்கா, வெண்டைக்கால்லாம் விளையாது. அதனால மாமிசம்தான் சாப்பிட்டாகணும். மாமிசம் சாப்பிட்டா செரிக்கறதுக்கு அந்தக் குளிருக்கு அவன் ஒயின் குடிக்கிறான். அவனப் பார்த்து நாமளும் குடிச்சா எப்படி?

இந்தக் காலத்து குழந்தைகளுக்கு பணத்தோட அருமை தெரியல. நேரத்தோட அருமை தெரியல. பெரியவங்ககிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியல. வெளிய ஆயிரம் கெட்ட விஷயங்கள் இருக்கட்டுமே, நம்ம குழந்தைகளுக்கு நல்ல விஷயத்தை நாம விதைச்சா, அவங்க மத்தவங்களுக்கு சொல்லிக் குடுப்பாங்க இல்லையா?

-அடுத்த வாரம் சொல்றேன்…

தொகுப்பு: ராஜவிபீஷிகா

–நன்றி சைரன்

Advertisements

One thought on “8-எண்ணுகிறேன்.. எழுதுகிறேன்… – திருமதி சுஜாதா

  1. ஸ்ரீராம் February 23, 2014 at 12:54 AM Reply

    சொல்வதெல்லாம் உண்மை. மிகச் சமீபத்தில் எங்கள் அருகாமையில் நடந்த இரு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s