2-சுஜாதா பற்றி பாலு மகேந்திரா…


இதன் முந்தைய பகுதி…

sujatha33

என் ரங்காவை நான் கடைசியாப் பாத்தது அன்னிக்குத்தான்.

“Be happy that you are alive Balu” ன்னு சொன்ன என் ரங்கா இப்போ இல்லை.

அவர் இறுதிச் சடங்குகளுக்குப் போய் வந்ததோட சரி. அதுக்கப்புறம் அவர் வீட்டுக்குப் போகல்ல. அந்தம்மாவைப் பாக்கற தைரியம் இன்னும் வரல்ல. ஆறுதல் சொல்றதுக்குன்னு போய், அவங்க முன்னாடி நானே உட்கார்ந்து அழுதிட்டு வர இஷ்டமில்லை.

நேத்து ஆஃபீஸ்ல எதையோ தேடுறப்ப மிம்மியோட இந்த ஃபோட்டோஸ்
கண்ல பட்டுது. ‘மிம்மி’ ங்கறது ரங்கா வீட்டில் வளர்ந்த செல்லப் பிராணியின் பெயர். பெண் நாய், டேஷ் ஹவுண்ட் ஜாதி.

அவரை விட மிம்மி மேல அந்தம்மாவுக்குப் பாசம் அதிகம். செல்லம் அதிகம். ‘மிம்மி’யோட முதல் பிரசவம் அவங்க மடியிலேயே நிகழ்ந்ததுன்னா பாருங்களேன். பழைய பெட்ஷீட் ஒண்ணை மடியில விரிச்சுப் போட்டு, பிரசவ வலி கண்ட மிம்மியைத் தூக்கி மடியில வெச்சுக்கிட்டாங்க.

ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயம்… மிம்மியை வீட்ல தனியே விட்டுட்டுப் போகணுமேங்கறதுக்காகவே, அமெரிக்காவில் இருக்கற மகன்களைப் பார்க்கப் போறதைத் தள்ளிப் போட்டுக்கிட்டு வந்தாங்க.

விஷயம் தெரிஞ்சதும் நான் சொன்னேன்:

“நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா அமெரிக்கா போய் பசங்களைப் பாத்திட்டு வாங்க. நீங்க வர்ற வரைக்கும் மிம்மியை நான் என் வீட்ல வெச்சுப் பாத்துக்கறேன்.”

ரங்காவும், மாமியும் அமெரிக்கா போய் வர்ற வரைக்கும் ஆறு ஏழு மாசம் மிம்மி எங்க வீட்லதான் இருந்திச்சு. எங்க சுப்பிரமணியோட சேத்து மிம்மியையும் பாத்துக்கிட்டோம்.   சுப்பிரமணி-ன்னா – ‘மூன்றாம் பிறை’ சுப்பிரமணி. வளர்ந்து பெரியவனாகி எங்க கூடத்தான் இருந்தான்.

மிம்மி பெண் நாய் என்கிறதால சண்ட சச்சரவில்லாம நல்ல சிநேகிதமாகவே இருந்துச்சுங்க. சுப்பு இவளைப் பாலியல் கண்ணோட்டத்தில் அணுகாமல் பார்த்துக் கொள்வதே எனக்கும் அகிலாவுக்கும் பெரிய வேலையாகி விட்டது.

ரங்காவும், மாமியும் அமெரிக்காவில் இருந்து வந்ததுக்கப்புறம், மிம்மியை அவங்களுக்குத் திருப்பிக் குடுக்க என் அகிலாவுக்கு மனசே இல்லை.

ஒருபடியா அவளைச் சமாதானப்படுத்தி மிம்மியைக் கொண்டு போய்க் குடுத்திட்டு வந்தேன்.

இப்போ என் ரங்கா இல்லை. சுப்பிரமணி இல்லை. மிம்மியும் இல்லை. முதல்ல போனது சுப்பிரமணி. அதுக்கப்புறம் மிம்மி. போன ஃபிப்ரவரியில ரங்கா…

நிறைவடைந்தது.

Advertisements

One thought on “2-சுஜாதா பற்றி பாலு மகேந்திரா…

  1. ஸ்ரீராம் February 23, 2014 at 12:57 AM Reply

    அமுதவன் எழுதிய என்றென்றும் சுஜாதா வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகம் பார்க்கவில்லை. படிக்க வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s