7-எண்ணுகிறேன்.. எழுதுகிறேன்… – திருமதி சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

image_4

கொஞ்ச நாள் முன்னாடி என் பழைய தோழி ஒருத்திய சந்திச்சேன். அப்போ தன்னோட பையனுக்கு ரொம்ப வருஷமா பெண் தேடுறதாகவும், பெண் வீட்டார் ரொம்ப கண்டிஷன் போடுறதாகவும் கவலைப்பட்டா. அப்படி பெண் பார்க்கப் போனப்ப ஒரு பெண்ணோட அப்பா கேட்டாராம், ‘உங்க வீட்ல எத்தனை டஸ்ட்பின் இருக்கு?’னு. அவளுக்கு ஒண்ணும் புரியல. பொண்ணோட அப்பா டஸ்ட்பின்னு சொன்னது அந்த வீட்ல எத்தன வயசானவங்க இருக்காங்கங்கறதைத்தான். என் தோழி மனசு உடைஞ்சு போயிட்டா.

இன்னொரு சம்பவம் இதைவிட அதிர்ச்சியா இருந்தது!

வீட்ல பொண்ணு பார்த்து, முறையா மண்டபத்துல கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நேரத்துல கல்யாணப் பொண்ணு, ‘அப்பா என் கிளாஸ்மேட் விஷம் குடிச்சு ஹாஸ்பிட்டல்ல இருக்கானாம். நான் போய் பார்த்துட்டு வர்றேன்’னு சொல்லிட்டு போனவதான். திரும்பி வரவே இல்லையாம். அப்புறமா அவங்க அப்பாவுக்கு போன் பண்ணி, ‘என்னை மன்னிச்சிடுங்கப்பா, நான் லவ் பண்ணின பையன் எனக்கு கல்யாணம்னு விஷம் குடிச்சு உயிருக்குப் போராடிகிட்டு இருக்கான். உங்க வற்புறுத்தலாலதான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். நான் விஷயம் குடிச்சவனை விட்டுட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாளாம்.

இதுக்கெல்லாம் காரணம் பொண்ண பெத்தவங்கதான். பொண்ண செல்லமா வளர்க்கறாங்க, ஆனா மத்தவங்ககிட்ட எப்படி அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்ங்கறதை சொல்லிக் கொடுக்கறதில்லை. நல்லா படிக்க வெச்சதும் அவங்க ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்கறாங்க. வெளி உலகம் தெரிஞ்சுக்கிறாங்க. ‘நாங்க ஏன் உன் அம்மா, அப்பாவை வெச்சுகிட்டு கஷ்டப்படணும்?’னு கேட்கறாங்க. ‘நீங்க உங்க மாமியார்கிட்ட கஷ்டப்பட்டீங்கன்னா அது உங்க தலையெழுத்து. நீங்க வீட்டோட இருந்தீங்க. நாங்க வேலைக்குப் போறோம்’னு சொல்றாங்க.

அவங்க மேல தப்பு சொல்ல முடியாது. படிச்ச பொண்ணுங்கன்னா அப்டித்தான் இருப்பாங்க. ஆனா அதுக்கப்புறமும் நான் சொல்ற மாப்பிளையைதான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா.. அதைவிட முட்டாள்தனம் இருக்கா? உங்களுக்கே தெரியும். உங்க பொண்ணு உங்க பேச்சை கேட்கமாட்டான்னு. அதனால பையன் வீட்ல ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடறீங்க. பொண்ணு தனிக்குடித்தனம் தான் இருக்கும். அடிக்கடி வீட்டுக்கு யாரும் வந்துபோகக்கூடாது. பையனும் சமைக்கணும்னெல்லாம் சொல்றீங்க.

எதுக்கு இந்த பிடிவாதம்? உங்க பொண்ணுக்கு நல்லது கெட்டது தெரியாதா? அவளோட மென்ட்டாலிட்டிக்கு எந்த பையன் சரியானவன்னு அவளே முடிவு பண்ணிக்கட்டுமே. பொண்ணை அட்ஜஸ்ட் பண்ணற மாதிரியும் வளர்க்க மாட்டேங்கறீங்க. ஆனா அவளுக்கு புடிச்ச வாழ்க்கையையும் அமைச்சு தரமாட்டேங்கறீங்க. அப்புறம் அவளால எப்படி சந்தோஷமா இருக்க முடியும்? அதே மாதிரி பையனுக்கு புடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணி வைச்சா அவங்க வாழ்க்கையாவது சந்தோஷமா இருக்கும். ஏற்கெனவே 80-கள்ல ஸ்கேன் பண்ணி வயித்துல இருக்கறது பொண்ணுன்னா உடனே அபார்ஷன் செஞ்சுதான் இப்போ பொண்ணுங்களுக்கே தட்டுப்பாடா இருக்கு. அப்பல்லாம் பணக்கார வீடுகள்ல கூட பொண்ணுன்னு தெரிஞ்சா, சொத்து கைவிட்டுப் போயிடும்னு சர்வ சாதாரணமா அபார்ஷன் பண்ணிடுவாங்க. இதுல நீங்க பையனுக்கு புடிச்ச பொண்ணையும் வேண்டாம்னு சொல்லிட்டு நீங்களே ஜாதகம் பார்த்து, உங்களுக்கு புடிச்ச பொண்ணாதான் கல்யாணம் செய்வேன்னு சொன்னா ரொம்ப கஷ்டம்.

ஆனா இதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா இப்பல்லாம் வரதட்சணை கேட்கறது குறைஞ்சிருக்கு. வரதட்சணை நிறைய கேட்டா பொண்ணே போயிட்டு வாங்கன்னு சொல்லிடுறாங்க. அம்பது அறுபது வருஷதுக்கு முன்னாடில்லாம் மாப்பிளை வீட்ல பரிசம் போட்டு பொண்ணுக்கு சீர் செஞ்சுதான் கூட்டிட்டு போவாங்க. அதுக்கப்புறம் பொண்ணுங்க வரதட்சனை குடுத்து கல்யாணம் பண்ணிகிட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல திரும்பவும் பசங்க வரதட்சனை குடுத்துதான் கல்யாணம் செஞ்சுக்கணும் போல.

இன்னமும் பாரம்பரியம் கலாச்சாரம்ன்னு பேசிக்கிட்டு இருக்குறது சரியா படல. ஏன்னா இப்போ மேலைநாட்டு கலாச்சாரம் நம்ம நாட்டுல பரவிக்கிட்டு இருக்கு. அவங்க கலாச்சாரத்துக்கு முழுசா மாறவும் முடியாம.. நம்ம கலாச்சாரத்தை காப்பத்தவும் முடியாம ரெண்டுங்கெட்டான் தலைமுறையா நாம நிக்கறோம். இப்பதான் மேலைநாடுகள்ல கெட்டு சீரழிஞ்சு, பாரம்பரியத்த வளர்க்கணும். திரும்பவும் கூட்டுக் குடும்பங்களா வாழணும்னு சொல்லி நம்மள ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. நாம இப்போ இதுலாம் பழைய விஷயங்கள்னு அவங்களை ஃபாலோ பண்ண தொடங்கியிருக்கோம். இது ஒரு சுழற்சிமுறை. நாம தடுத்தாலும் முடியாது. திரும்பவும் எல்லாம் போனதுக்கப்புறாமா நம்ம கலாச்சாரம்தான் பெஸ்ட்டுன்னு திரும்பி வருவாங்க. அடுத்த தலைமுறையை நினைச்சாதான் கவலையா இருக்கு. அதைப்பத்தி…!

அடுத்த பதிவில் சொல்றேன்…

தொகுப்பு: ராஜவிபீஷிகா

–நன்றி சைரன்

2 thoughts on “7-எண்ணுகிறேன்.. எழுதுகிறேன்… – திருமதி சுஜாதா

  1. ஸ்ரீராம் February 22, 2014 at 12:29 AM Reply

    பெண் அல்லது பெண் வீட்டார் போடும் கண்டிஷன்களால் திருமணம் கூடாத நிறைய பையன்களைப் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். இது போன்ற கண்டிஷன்கள் பற்றி கல்கியிலும் பின்னர் விகடனிலும் கூட கட்டுரையும் வந்தது. மேடம் சொல்வது போல சுழற்சியில் இது(வும்) மாற ஒரு தலைமுறை காத்திருக்க வேண்டும் போல!

  2. D. Chandramouli February 24, 2014 at 6:40 AM Reply

    Shocking and pathetic that old persons are called ‘dust bins’! Anyway, let us imagine a home without any dust bin.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s