1-சுஜாதா பற்றி பாலு மகேந்திரா…


https://balhanuman.files.wordpress.com/2010/05/logotimepass.jpg?w=300

“போன டிசம்பர்னு நெனைக்கறேன். மனசளவில் நான் ரொம்பவும் உடைஞ்சு போயிருந்த ஒரு நாள். அந்த மாதிரி சமயங்கள்ல நேரா என் ரங்காகிட்டப் போய் நிக்கறதுதான் என் வழக்கம். உங்கள் எல்லாருக்கும் அவர் சுஜாதா. எனக்கு அவர் ரங்கா.”

‘எனது பால்யகால நண்பர்களெல்லாம் என்னை ரங்கான்னுதான் கூப்பிடுவானுங்க. அவனுங்கெல்லாம் செத்துப் போயிட்டானுங்க. இப்போ பாலு மட்டும்தான் என்னை ரங்கான்னு கூப்பிட்டுக்கிட்டிருக்கிராரு.’ ‘கற்றதும் பெற்றதும்’ தொடர்ல இப்படிப் பதிவு பண்ணியிருந்தார்.

முப்பது வருஷ நட்பு. ரொம்ப நெருக்கம். அவரை என் கூடப் பொறந்த அண்ணனாத்தான் நான் நெனைச்சேன்.

‘பாலுவுக்கும் எனக்குமான நட்பு வாழ்வின் சுக துக்கங்களுக்கு அப்பாற்பட்டது’ அப்படின்னு இன்னுமொரு கட்டுரையில் எழுதியிருந்தார்.

மனசு நெறைஞ்ச துக்கத்தோட அவர் முன்னாடி போய் நின்னது தான் தெரியும். உடைஞ்சு அழுதிட்டேன். குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதுக்கிட்டிருந்த என் கையைப் புடிச்சுத் தன் கைக்குள்ள பொத்தி வெச்சுக்கிட்டு அழுது முடியட்டும்னு அமைதியா உட்கார்ந்திருந்தார்.

என் அழுகை கொஞ்சம் நின்னதும், ரொம்பவும் கனிவான குரல்ல என் முகத்தைப் பார்த்துக் கேட்டார். ‘என்னப்பா ஆச்சு ?’

சொன்னேன்.

ரொம்ப ரொம்ப நம்பிக்கையான ஒருத்தர் எனக்குச் செய்திருந்த வஞ்சனை, ரங்காவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கணும். ஆனா அத வெளிக்காட்டிக்கல்ல. அவர் கைக்குள்ள இருந்த என் கையை இன்னும் கொஞ்சம் இறுக்கிக்கிட்டுச் சொன்னார்…

“பாலு, நீ பார்க்காத பிரச்சினையா? நீ அனுபவிக்காத துக்கமா ? எல்லாத்தையும் கடந்து வந்தவனில்லையா நீ ? அதெல்லாத்துக்கும் முன்னாடி இது ஜுஜுபி… This is nothing… தூக்கிக் கடாசிட்டுப் போயிட்டே இரு. Don’t let this unworthy person ruffle you. நீ செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.

ஒரு Heart Problem ஒரு Stroke. இது ரெண்டுக்கப்புறமும் நீ ஜம்முன்னு நடமாடிக்கிட்டிருக்கே. Isn’t this wonderful ? Be happy that you are alive Balu. உன்னை நெஞ்சுக்குள்ளே வெச்சுப் பூஜிக்கற நிறையப் பேர் இருக்காங்க. அவங்களுக்காக நீ செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. You still can create Magic.

உன் ‘வீடு’, ‘சந்தியா ராகம்’ மாதிரி நீ இன்னும் அஞ்சாறு படங்களாவது பண்ணணும். So don’t let these stupid things bother you. You are a king Balu. Don’t you ever forget that.”

அதுக்கப்புறம் அவரோடு ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து, மாமி போட்டுக் குடுத்த டிகிரி காபி சாப்பிட்டுத் திரும்பி வர்றப்போ மனசு ரொம்ப லேசாயிட்ட மாதிரி ஒரு feeling.

இதன் இறுதிப் பகுதி நாளை…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s