6-எண்ணுகிறேன்.. எழுதுகிறேன்… – திருமதி சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

_MG_2251

பத்துநாள் முன்னாடி என் பையனோட வியட்நாம் போயிருந்தேன். அந்த நாட்டைப் பத்தி நிறைய நல்ல விஷயங்களை உங்களோட பகிர்ந்தே ஆகணும்னு தோணுச்சு. ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் சீனாவின் கன்ட்ரோல்லதான் இருந்திருக்கு இந்த நாடு. அதுக்கப்புறமா விடுதலை அடைஞ்சு நிறைய ராஜாக்கள் வியட்நாமை ஆட்சி செஞ்சு நல்ல வளமையா ஆக்கியிருக்காங்க.


கிளைமேட் டெல்லி குளிர் மாதிரி இருக்கு. பொருளாதார பிரச்னை காரணமா ரெண்டு குழந்தைங்களுக்கு மேல பெத்துக்கக்கூடாதுன்னு சட்டமாம். ஊரப்பார்த்தா நம்ம ஊர் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்துச்சோ அப்படி இருக்கு. சிட்டியில கூட காருங்க ரொம்ப கம்மி. பைக்தான் ஜாஸ்தி. சில பேர்தான் செல்போன் யூஸ் பண்றாங்க. அவங்களோட முக்கிய தொழில் டூரிஸம்தானாம். அப்புறம் அங்கே விலைவாசி ரொம்ப கம்மி. அங்க இருக்கற ஸ்கூல்ல இங்கிலீஷ்லாம் சொல்லித் தர்றது இல்ல. அவங்க பேச்சு வழக்குல இருக்கற மொழியைத்தான் கத்துக் குடுக்கறாங்க. இங்கிலீஷ் படிக்கணும்னா அதுக்குன்னு பிரைவேட் ஸ்கூல் உண்டாம். ஆனா அங்கெல்லாம் பணக்காரங்கதான் படிக்க முடியுமாம்.


அங்க என்ன ரொம்ப நல்ல விஷயம்னா நான் ஒருத்தரைக் கூட குண்டா பார்க்கவே இல்லை. எல்லாரும் குச்சி குச்சியா இருக்காங்க. ஆண்கள், பெண்கள் ரெண்டுபேரும் வேலைக்குப் போறாங்க. அங்க போர் நடந்துச்சு இல்லையா.. அதனால 50, 60 வயசுக்காரங்க ரொம்பக் கம்மியாதான் இருக்காங்க. 20, 30 வயசுக்காரங்களும் 70, 80 வயசுக்காரங்களும், குழந்தைகளும்தான் நிறைய இருக்காங்க. அதனால பெண்கள் கூட்டம் ஜாஸ்தியா இருக்கு. பல வேலைகள் பெண்கள் செய்யறாங்க.

பெண்கள் வேலைக்குப் போனதும் வீட்டு வேலைகளை அந்த வீட்டு பாட்டிங்க செய்யறாங்க. யாரும் தெருவுல ஒரு நிமிஷம்கூட வெட்டியா பேசி நான் பார்க்கவே இல்லை. அப்புறம் நம்மளைவிட எல்லாவிதத்துலயும் அவங்க பின்தங்கி இருக்காங்க. ஆனா ட்ராஃபிக் ரூல்ஸை ஸ்டிரிக்டா ஃபாலோ பண்றாங்க. தெருவுல ஒரு குப்பைகூட இல்லை. குழந்தைங்க கூட குப்பைத் தொட்டியிலதான் குப்பையை போடறது.


பெரும்பாலும் வீட்டு வேலையையும், குழந்தைகளையும் அந்த வீட்டு பெரியவங்கதான் பாத்துக்கறாங்க. வெளியில வேலைக்குப் போயிட்டு வந்ததும் பெண்கள் எம்ப்ராய்டரி செய்யறாங்க. எல்லா வீடும் குடிசை மாதிரிதான் இருக்கு. ஆனா உள்ளே போய் பார்த்தா பண்டில் பண்டிலா நூல் கண்டுகளா அடுக்கி வச்சிருக்காங்க. அவங்க செய்யற எம்ப்ராய்டரிகளையெல்லாம் டூரிஸ்ட் நிறைய பேர் வாங்கிட்டு போறாங்க. அவங்க அரசாங்கத்துல இலவசப் பொருட்கள் ஒண்ணுமே கிடையாதாம். கல்வியை மட்டும்தான் இலவசமா சொல்லித் தர்றாங்க.

அங்க வயசானவங்க நிறைய நாள் உயிர் வாழறதனால அரசாங்கம் அவங்களுக்கு மட்டும் பென்ஷன் மாதிரி கொஞ்சம் பணம் தருது. என்ன ஆச்சரியம்னா அங்க இருக்கற வயசானவங்களும் பணம் வருதேன்னு வீட்ல சும்மா உட்கார்ந்து இருக்கறது இல்ல. ஆதரவு இல்லாத முதியோர்களெல்லாம் வேலைக்குப் போய்தான் சம்பாதிக்கறாங்க.

அங்க ஒரு ஏரியில நிறைய மலைகளா இருக்கு. அந்த மலைகளுக்கு நடுவுல குகைகள் இருக்கு. நம்மளை ஒரு படகுல உட்கார வைச்சுகிட்டு அந்த குகை வழியா கூட்டிட்டு போறாங்க. ரொம்ப நல்லா இருக்கு. நீங்க நம்பமாட்டீங்க… என்னயும் என் கூட வந்தவங்களையும் அறுபத்தஞ்சு வயசு பாட்டிதான் படகுல கூட்டிட்டுப் போனாங்க. அவங்களுக்கும் பென்ஷன் வருமாம். ஆனாலும் அவங்க படகு ஓட்றாங்க. இத்தனைக்கும் அது ரொம்ப ஏழ்மையான நாடா இருக்கு. நாங்க படகு ஓட்டின அம்மாவுக்கு கொடுத்த சொற்ப காசுக்கே அந்த அம்மா முகத்துல ஆயிரம் ரூபா கிடைச்ச மாதிரி சந்தோஷம்.

அவங்களோட உணவு முறையும் வித்தியாசமா இருக்கு. வியட்நாம்ல காய்கறிகளும் பழங்களும் ஃப்ரெஷ்ஷா கிடைக்குது. அதனால, காலையில காய்கறி சூப் குடிச்சிட்டு வேலைக்குப் போறாங்க. அப்புறம் மத்தியானம் கொஞ்சமா சாதம். நிறைய வேகவைத்த காய்கறிகள்னு ரொம்ப சத்தான உணவுகள் சாப்பிடறாங்க. முக்கியமா பீட்ஸா, பர்கர் கடைகள் எல்லாம் கிடையாது. அப்படியே இருந்தாலும் அங்கல்லாம் டூரிஸ்ட்டுங்க கூட்டம்தான். அங்கங்க சின்ன சின்ன தள்ளுவண்டியில காய்கறி சூப் செஞ்சு விக்கிறாங்க. அதைத்தான் மக்கள் வாங்கி சாப்பிட்டு போறாங்க.


எனக்கு என்ன ஆச்சரியம்னா வேலைக்குப் போயிட்டு மருமக வந்ததும் எம்ப்ராய்டரி போட உட்கார்ந்துடுறா. அவளோட வயசான மாமியார்தான் சமைச்சு, வீட்ட பெருக்கி, குழந்தைகளையும் பார்த்துக்கறாங்க. இதுவே நம்ம ஊரா இருக்கட்டும், என்ன நடக்குன்னு யோசிங்க. கண்டிப்பா ஈகோ பிரச்னை வந்து மாமியாருக்கும் மருமகளுக்கும் தினமும் சண்டை வரும். ஆனா அங்க யார் யாருக்கு என்ன வேலைன்னு பிரிச்சு, புரிஞ்சு செய்யறாங்க. பெண்கள் தங்களோட ஓய்வு நேரத்தை சீரியல் பார்த்தோ… பக்கத்து வீட்டுல புரளி பேசியோ… செலவழிக்கறது இல்ல. ஏன்னா அதுக்கு அவங்களுக்கு நேரமே இல்ல.

போன பதிவில் கட்டுரையை முடிக்கறப்போ வாழ்க்கைய சந்தோஷமா வச்சுக்க ஒரு சீக்ரெட் சொல்றேன்னு சொன்னனே…! அது இதுதான். வாழ்க்கைய சந்தோஷமா ஆக்கறதுக்கான ஒரு சின்ன டிப்ஸ். உங்களுக்கு உங்க வேலை செய்யறதுக்கே நேரம் கரெக்டா இருந்தா நீங்க ஏன் அடுத்தவங்களப் பத்தி யோசிக்கப் போறீங்க. ஏன் அடுத்தவங்கள பத்தி இன்னொருத்தங்ககிட்ட புரளி பேசப் போறீங்க.

வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு சும்மா இருந்தீங்கன்னா உங்களுக்குன்னு ஒரு ஹாபி இருக்கும் இல்லயா? அத வளர்த்துக்கோங்க. கோலம் நல்லா போடுவீங்கன்னா அதுல இன்னும் எப்படி பெரிசா சாதிக்கணும்னு பாருங்க. நல்லா எழுதுவீங்கன்ன ஒரு எழுத்தாளரா ஆகறதுக்கு என்ன செய்யணும்னு பாருங்க. இல்ல நல்லா சமைப்பீங்கன்னா அந்த துறையில எப்படிப் பெரிய ஆளா வர்றதுன்னு பாருங்க. நமக்கான வாய்ப்பை நாமதான் தேடிக்கணுமே தவிர அதுவா எதுவும் வராது.


என் கணவரையே எடுத்துக்கோங்களேன். அவர் யார்கிட்டயும் தேவையில்லாம பேசவே மாட்டார். வேலைக்குப் போற நேரம் தவிர நல்லா படிப்பார். நல்லா எழுதுவார். எப்படி தன்னோட ஒரு நாளை உபயோகமா ஆக்கறதுன்னு அவருக்கு தெரியும். வேலையில இருந்து ரிட்டயர்ட் ஆனதும் சும்மா இல்லயே…! எழுத்தை முழுநேரமாக்கினார். பத்திரிகை ஆசிரியரா இருந்தார். படத்துக்கு வசனம் எழுதினார். எல்லாமே ஹாபியா ஆரம்பிச்சதுதானே…! அதான் சொல்றேன் நாம மனசு வச்சா நம்ம வாழ்க்கையில எது வேணா நடக்கும்.

அடுத்த பதிவில்… 

–நன்றி சைரன்

Advertisements

2 thoughts on “6-எண்ணுகிறேன்.. எழுதுகிறேன்… – திருமதி சுஜாதா

  1. ஸ்ரீராம் February 21, 2014 at 12:29 AM Reply

    குப்பை இல்லாத ஊர், போக்குவரத்து விதிகளை மதிக்கும் ஊர் என்றெல்லாம் வெளிநாடுகளைப் பற்றிக் கேள்விப்படும்போது இந்தியாவில் மட்டும் ஏன் தனிமனித ஒழுக்கம் குறைந்து விட்டது என்ற குறை வருகிறது. கல்வியை மட்டுமே இலவசமாக் கொடுக்கற அரசாங்கம்… ஹ்ம்ம்ம்ம்ம்…

  2. Srinivasan S. February 23, 2014 at 2:38 PM Reply

    A vivid description about Vietnam. Many things we have to learn from Vietnam. Thank you Madam.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s