5-எண்ணுகிறேன்.. எழுதுகிறேன்… – திருமதி சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

_MG_2245image_2

புது வருஷம் வந்தாச்சு. கொஞ்ச வருஷமாத்தான் இந்த நியூ இயர் கொண்டாட்டம் எல்லாம். பெங்களூர்ல இருக்கறப்ப நியூ இயர் பார்ட்டின்னு அவரை கூப்பிடுவாங்க. சாயங்காலம் போயிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் வந்துடுவோம். நான்தான் பன்னிரெண்டு மணி வரைக்கும் டி.வி. பார்த்துட்டு இருப்பேன்.

என் கணவர் சீக்கிரமே தூங்கப் போயிடுவார். சென்னை வந்து கொஞ்ச வருஷம் கமல் சார் மாதிரி சில வி.ஐ.பி.க்கள் கூப்பிடுவாங்க. அதுவும் அவருக்கு உடம்பு சரியில்லாமப் போனதுக்கு அப்புறமா எங்கயும் போறது இல்ல. அதெல்லாம் அவர் விரும்பவும் மாட்டார். நான் தமிழ் புத்தாண்டு அன்னைக்குதான் பூஜையெல்லாம் பண்ணுவேன். ஆனா என் கணவருக்கு அதுகூட எதுவும் கிடையாது. ஏன் அவருக்கு வீட்ல பூஜை அறைகூட எங்க இருக்குன்னு தெரியாதுன்னா பாத்துக்கோங்களேன்.

ஆனா கோவிலுக்கு அப்பப்போ போயிட்டு வருவார். ஏன்னா பல நூறு வருஷத்துக்கு முன்னாடி நம்ம முன்னோர்கள் நடமாடிய தெய்வீகமான இடம் அதுன்னு சொல்லுவார். ஆனா இதுவரைக்கும் அவரோட முன்னோர்களுக்கோ அம்மா அப்பாவுக்கோ அவர் திவசம் எல்லாம் செஞ்சதே கிடையாது. உயிரோட இருக்கறவங்கள அவமதிச்சு, கடைசி காலத்துல நல்லா பாத்துக்காம இறந்ததுக்கப்புறமா பூஜை பண்ணி என்ன பிரயோஜனம்னு கேட்பார்.


அவர் சொன்னமாதிரி கடைசி வரைக்கும் வாழ்ந்தும் காண்பிச்சார். அவருக்கு பெரியவங்களை மதிக்கலைன்னா சுத்தமா பிடிக்காது. அவங்க அப்பா, அம்மா என்ன சொல்றாங்களோ அதான் கேட்பார். அப்போ எனக்கு டெலிவரி டைம். நான் ஊருக்கு வந்துட்டேன். நான் வர்றவரைக்கும் அவங்க அம்மாவும், அப்பாவும் ஸ்ரீரங்கத்துலேர்ந்து அவரைப் பார்த்துக்க டெல்லி போயிருந்தாங்க. அப்போ அவர் அவங்களை காசி, பத்ரிநாத், ஹரித்வார்ன்னு எல்லா புண்ணிய ஸ்தலங்களுக்கும் கூட்டிட்டு போனார். அவங்களுக்கும் அவருன்னா ரொம்பப் பிரியம். கடைசிவரைக்கும் என் மாமனார் அவரோட பென்ஷன்லதான் வாழ்ந்தார்.

ரெண்டுபேருமே அது வேணும், இது வேணும்னு கேட்கவே மாட்டாங்க. என் கணவரா ஏதாச்சும் வாங்கிக் குடுத்தாதான் உண்டு. பெத்து, வளர்த்து, ஆளாக்கி, படிக்க வைச்சு, தன்னோட வாழ்கையையே பசங்களுக்காக அர்ப்பணிச்சவங்களை கடைசி காலத்துல கஷ்டப்படுத்தறது எவ்ளோ கொடுமையான விஷயம். அதுவும் இப்பல்லாம் ஓல்ட் ஏஜ் ஹோம் ஏகப்பட்டது வந்துடுச்சு. கைவிடப்பட்ட பெரியவங்களை ஹோம்ல பார்த்துக்கறது நல்ல விஷயம்தான். ஆனா, பெத்தவங்களை பிள்ளைங்களே கொண்டுபோய் விடறது மகா பாவம்.

தங்களோட பேரன் பேத்திகளுக்கு அவங்களவிட ஒரு நல்ல வழிகாட்டி இருக்க முடியுமா? இல்லை.. அந்த வயசானவங்களுக்கும் இந்தக் குழந்தைகளைவிட வேற சந்தோஷம் இருக்க முடியுமா? முன்னாடி மாதிரியெல்லாம் மாமியாருங்க எல்லாரும் போய் மருமகள்கிட்ட சண்டை போடறது இல்லையே..? இப்பல்லாம் எல்லோரும் படிச்சிருக்காங்க.

தவிர, மருமகள்கிட்ட சண்டை போட்டு அவங்க என்னத்தை சாதிக்கப் போறாங்க சொல்லுங்க? பணத்துக்காக அவங்களோட சொத்தைப் பிரிச்சு, கடைசி காலத்துல அவங்களை கஷ்டப்படுத்தி அப்புறம் அவங்க இறந்தபிறகு தர்ப்பணமும் திவசமும் எதுக்கு? ஒரு சில பெரியவங்க கொஞ்சம் அடமண்ட்டா நடந்துப்பாங்கதான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா இப்படி யோசிச்சுப் பாருங்களேன். அந்த வீட்டு மாட்டுப்பொண்ணோட அம்மாவோ அப்பாவோ இந்தமாதிரி அடமண்ட்டா இருந்தா அந்தப் பொண்ணு பொறுத்துதானே போவா. அதேமாதிரி தன்னோட கணவரை பெத்தவங்க, நாமதான் அவங்களுக்கு ஆதரவுன்னு யோசிச்சு அவங்களை கவனிச்சிகிட்டா அவளோட சந்ததி அத்தனையும் நல்லா இருக்கும்.


இப்ப இந்த சீரியல் வந்தபிறகு வீடுகள்ள கொஞ்சம் கொஞ்சமா விஷம் கலந்தமாதிரி இருக்கு. எந்த சீரியலைப் பார்த்தாலும் அடுத்தவங்க குடும்பத்தை எப்படி கெடுக்கறது, அதுவும் கூட்டுக் குடும்பங்களா வாழ்ந்த நம்ப வீடுகள்ல சொந்த அண்ணனை எப்படி கெடுக்கறது, எப்படி அண்ணியை பிரிச்சு வெளியில அனுப்பறது, பக்கத்து வீட்டுல என்ன பண்ணுனா அவங்க நாசமா போவாங்கன்னுதான் காமிக்கறாங்க. அதைப்பார்த்து பார்த்து என்ன ஆகும்? எல்லார் வீட்லயும் இதுதான் நடக்குதுபோல, நாம மட்டும் ஏன் மாமியார் மாமனாரை வச்சிகிட்டு கஷ்டப்படணும்னு நினைப்பு வந்துடும்.
ஏன் நீங்க சீரியல் பார்க்கறீங்க? அவன் டி.ஆர்.பி.யை ஏத்தறதுக்கு கண்டதைப் போடறான். அப்பதான் அவன் பொழைப்பு ஓடும். அவங்கவங்க வேலையை ஒழுங்கா பார்த்துட்டு இருந்தா இந்த நினைப்புல்லாம் ஏன் வருது? டி.வி.யில வேற ப்ரோகிராமே இல்லையா? எவ்வளவோ நல்ல விஷயங்களையும் டி.வி.யில போடறானே? அனிமல் பிளானட் பாருங்க. டிஸ்கவரி தமிழ் பாருங்களேன்.

டிராவலர் டி.வி. பாருங்க. சமையல் பிடிக்கும்னா அந்த ப்ரோகிராமை பாருங்க. பொதுவா பயணம் போக ஆரம்பிச்சாலே பல நல்ல விஷயங்களை கத்துக்கலாம்ங்கறது என்னோட நம்பிக்கை.


ஒரு ஊருக்கோ நாட்டுக்கோ போனா அங்க மக்கள் எப்படி வாழறாங்க; வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்; அவங்களோட பழக்க வழக்கம்; காடுகள்ள ட்ராவல் பண்றவங்க.. இதையெல்லாம் பாத்தா… சே.. நாம எவ்ளோ சின்னதா யோசிக்கிறோம்? உலகத்துல எவ்ளோ விஷயங்கள் இருக்கு.

அதை விட்டுட்டு சின்ன சின்ன விஷயத்துக்குப் போய் அடுத்தவங்ககிட்ட சண்டைக்கு போறோமேன்னு உங்களுக்கு கண்டிப்பா தோணும். அதனாலதான் சொல்றேன் வெளியூர் போக முடியாதவங்க கூட இப்படி டிராவலர் டி.வி.களை பாக்கும்போது உங்களுக்குள்ள நிறைய மாற்றம் வரும். புதுப் புது விஷயத்தை தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டுவீங்க. அதுவும் இல்லாம நாம எப்பவும் நல்ல விஷயத்தையே பேசி, நல்ல விஷயங்களை செஞ்சு, நல்ல எண்ணங்களை வளர்த்துக்கிட்டா… எல்லாமே நல்லதாதானே நடக்கும்?


வாழ்க்கையை சந்தோஷமாக ஆக்க இன்னும் ஒரு சீக்ரெட் சொல்லட்டுமா?


சந்திப்பு: ராஜவிபீஷிகா

நன்றி சைரன்

Advertisements

5 thoughts on “5-எண்ணுகிறேன்.. எழுதுகிறேன்… – திருமதி சுஜாதா

 1. ஸ்ரீராம் February 20, 2014 at 12:30 AM Reply

  கணவருடனான அனுபவங்களைச் சொல்லியபடியே தன் எண்ணங்களையும் பகிர்வது சிறப்பு. டிராவலர் டிவி என்று ஒன்று இருக்கிறதா என்ன? பார்க்க வேண்டும்.

  எங்கள் வீட்டில் சீரியல் பார்க்கும் வழக்கம் கடவுள் புண்ணியத்தில் இல்லை! சுஜாதா மேடம் சீரியல்களைச் சொல்கிறார். இப்போதெல்லாம் இன்னொரு நிகழ்ச்சி டீவியில் பிரபலமாகி வருகிறது. வெவ்வேறு பெயர்களில் வந்தாலும் அவை, ஏதோ ஒரு குடும்பத்தை அரங்குக்கு வரவழைத்து அவர்கள் அந்தரங்கத்தை விளம்பரமாக்கி, அவர்களுக்கு நீதி வழங்குகிறேன், நல்லது செய்கிறேன் என்று நாட்டாமை செய்யும் நிகழ்ச்சி. மக்கள் எப்படி தங்கள் வீட்டுக்குள் தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்னைகளை பொது நிகழ்ச்சிகளில் சொல்கிறார்களோ…

 2. vidya (@kalkirasikai) February 20, 2014 at 4:39 AM Reply

  பால்ஹனுமான் தளத்துக்காக திருமதி சுஜாதா சிறப்புப் பேட்டி அளித்துள்ளாரா?

 3. BaalHanuman February 20, 2014 at 5:16 AM Reply

  உங்கள் விருப்பம் வெகு விரைவில் நிறைவேறும் 🙂

 4. Srinivasan S. February 21, 2014 at 1:59 PM Reply

  A good description of the present day life and nice advice to correct. As one of the commentators mentioned, the modern youth is reviving and come to our old Indian culture very soon.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s