3-எண்ணுகிறேன்.. எழுதுகிறேன்… – திருமதி சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

image_1 a

எனக்கு அப்போ 40 வயசு இருக்கும். பெங்களூர்ல இருக்கற பி.இ.எல். தமிழ்ச் சங்கத்துல நாடகங்கள்ளாம் நிறைய நடக்கும். அதுக்கு என் கணவர் வசனம் எழுதித் தருவார். அப்போ, அங்க இருக்கறவங்க எல்லாம் என்னை மாமி வேஷத்துல நடிங்கன்னு சொன்னாங்க. எனக்கு அதுலல்லாம் ஆர்வம் இல்லை.

என் மாமனார், மாமியார் இருக்கறவரைக்கும் வெளியே போனதே இல்லை. அதனால வெளியே போறதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சதேன்னு நானும் நடிக்கப் போயிட்டேன். பெங்களூர்ல நாங்க நடிச்சு ஒத்திகை பார்த்த நாடகங்களைத்தான் சென்னையில பூர்ணம் விஸ்வநாதன் குழு போடுவாங்க. ஒரு மூணு, நாலு நாடகம் நடிச்சிருப்பேன். ‘அடிமைகள்’, ‘ஒரு ரயில் பிரயாணம்’னு  சிலது மட்டும் தலைப்பு ஞாபகம் இருக்கு. அப்புறம்தான் நாங்க சென்னை வந்துட்டோமே. அதுக்கப்புறம் நாங்க ரொம்ப வெளில போனது இல்லை. அவருக்கும் உடம்பு சரியில்லாததுனால நானும் அவர் கூடவேதான் இருப்பேன். அவர் இறந்தபிறகு என் பையன், என் தங்கையெல்லாம் அமெரிக்கால இருக்காங்க. அப்பப்போ போயிட்டு வருவேன்.

இப்பல்லாம் பல வீடுகள்ள கணவன் மனைவிக்குள்ள நிறைய ஈகோ பிரச்னை வருதே? கவனிச்சீங்களா.. இங்கதான் ரெண்டுபேரும் வேலைக்குப்போனா வீட்டுக்கு ஒரு வேலைக்காரி வைச்சுக்குறாங்க. அதுவும் நாம வேலைக்காரங்கள நம்பி வீட்ட ஒப்படைக்கவும் பயமா இருக்கு. என் வீட்டயே எடுத்துக்கோங்களேன். வீட்டை கூட்டி குப்பைய அள்ள மாட்டாங்க. அதை கொஞ்சம் அள்ளுங்கன்னு சொன்னாதான் செய்வாங்க. வேலைக்காரி இல்லாத வீட்ல மனைவிதான் எல்லாம் செய்யவேண்டி இருக்கு. இங்க கணவன்மார்களோட பங்கு ரொம்பக் கம்மின்னுதான் சொல்லுவேன். ஆனா அமெரிக்கால அப்படி இல்ல.

என் தங்கையும், அவரது கணவரும் மருத்துவர்கள். அவங்க வீட்ல ஒரு பெண் வேலை செய்யறாங்க. இவங்க வீட்டை பூட்டிட்டு வேலைக்குப் போய்ட்டா, அந்தப் பொண்ணு ஒரு சாவி வச்சுருக்கா. வந்து ஃபிரிட்ஜுல என்ன இருக்கோ, அத எடுத்து சாப்பிடுவா.. முட்டை எடுத்து ஆம்லெட் போட்டு சாப்பிடுவா. நாம ஏன்னு கேட்கக்கூடாது. ஆனா இன்னமும் பல வீடுகள்ல வேலை செய்யறவங்களை ஒதுக்கியில்ல வச்சுருக்காங்க.

அவங்க என்ன வேலை செய்யணும்னு எழுதி வச்சிட்டுப் போயிட்டா, அதுல ஒண்ணுவிடாம சுத்தமா செஞ்சிட்டு போயிடறாங்க. இதுல என்ன ஆச்சர்யம்னா, ஒரு குண்டூசியக்கூட தேவையில்லாம அவங்க தொடமாட்டாங்க. மோதிரம், செயின் எல்லாம் அந்தந்த இடத்துல அப்படியே இருக்கும். அதேமாதிரி ஆறு மணி நேரம் வேலைன்னா அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டாங்க. அவங்க ஏதாச்சும் பொருளை எடுத்தா அவ்ளோதான். லைசன்ஸ கட் பண்ணிடுவாங்களாம். சாகறவரைக்கும் அவங்க அங்க வேலை செய்ய முடியாதாம்! அவ்ளோ கடுமையா அங்க சட்டங்கள் இருக்கறதனாலதான் இதெல்லாம் சாத்தியம்.

Arrest2

ஆனா, நம்ம ஊர் மாதிரி அங்க எல்லோராலயும் வேலைக்கு ஆள் வெச்சுக்க முடியாது. அவ்ளோ காஸ்ட்லி. வேறவழி? அங்க கணவன் மனைவிதான் வீட்டு வேலை எல்லாத்தையும் பிரிச்சு செய்யறாங்க. ஒரு வாரம் கணவன் வீட்டைக் க்ளீன் பண்ணினா அடுத்த வாரம் மனைவி. அந்த மாதிரி ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் இங்க வேலைக்குப் போற தம்பதியினர் வீட்ல வந்துட்டா, சண்டை குறைஞ்சிடும். விவாகரத்துன்னு போய் கோர்ட்லயும் நிக்க வேணாம். இதுல ஒரு சூட்சுமமும் இருக்கு. வீட்டு வேலையை பிரிச்சு செய்யச் செய்ய அவங்களுக்குள்ள ஒரு புரிதல் வந்துடும். விட்டுக் கொடுத்தல் இருக்கும். அன்யோன்யமும் அதிகமாகும். வீட்டு வேலை மாதிரியே நம்ம வாழ்க்கையில வர்ற எல்லா விஷயங்களையும் நாம பகிர்ந்துதான் செய்யணும்னு அவங்க மனசுல பட்டுச்சுன்னா வாழ்க்கை சந்தோஷம்தானே!

அதே மாதிரி சின்ன வயசுலேர்ந்து குப்பையைக்கூட எந்தக் குப்பத்தொட்டியில போடணும்னு சொல்லித் தர்றாங்க. நம்ம ஊர்லயும் ரெண்டு வகை குப்பத் தொட்டி இருக்கு. ஆனா நாம அதை பிரிச்சுப் போடறதில்லை. இங்க இருக்கற இதே மனுஷங்கதான அங்கபோய் சரியா செய்யறாங்க. ஏன்? அங்க ரூல்ஸ்னா ரூல்ஸ்தான். குப்பையை அந்த தொட்டியில போடலைன்னா குப்பை எடுக்கறவன் ஒரு ஸ்லிப் எழுதி, குப்பையை எடுக்கமாட்டேன்னு சொல்லிட்டு போயிடுவான். வேறவழி? அப்போ குப்பையை கரெக்டா போட்டுதானே ஆகணும்.

_MG_2249

அதேமாதிரி, அங்க வீட்டுக்கு வெளியே கார் எல்லாம் நிறுத்தவே கூடாது. போலீஸ் வந்துடும். இதோ இங்க நம்ம மயிலாப்பூர் ரவுண்டானால எவ்ளோ ட்ராபிக் ஜாம் ஆகுது பாருங்க. எல்லோரும் வீட்டுக்கு மூணு கார் வச்சிட்டு, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கார்ல போனா ட்ராபிக் ஜாம் ஆகாம என்ன ஆகும்? அந்த நாட்ல ஒரு வீட்ல மூணு கார் வைக்கதான் பார்க்கிங் இருக்கு. சந்துல ஒரு ரெண்டு கார் வைக்கலாம். நாம ஊர்ல நவராத்திரி, சுமங்கலி விரதம், காரடையான் நோன்புன்னு வந்தா வீட்டுக்கு நாலுபேர கூப்பிடுவோம் இல்லையா? அதேமாதிரி அங்கேயும் அடிக்கடி பார்ட்டின்னு நண்பர்களையெல்லாம் கூப்பிடுவாங்க. இத்தனைக்கும் அங்க நம்ம ஊரைவிட பெட்ரோல் ரொம்பக் கம்மி விலைதான். ஆனா அங்க வீட்டு வாசல்ல காரை  நிறுத்த முடியாது. அப்போ அவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா?

அடுத்த பதிவில்…

–நன்றி சைரன்

Advertisements

3 thoughts on “3-எண்ணுகிறேன்.. எழுதுகிறேன்… – திருமதி சுஜாதா

 1. D. Chandramouli February 18, 2014 at 7:16 AM Reply

  I enjoy reading Mrs’ Sujatha’s writings – common topics but quite interestingly told. Please pass on my good wishes to Mrs. Sujatha and I look forward to more of her articles.

 2. ஸ்ரீராம் February 19, 2014 at 12:36 AM Reply

  சோஃபாவில் எதிரில் உட்கார்ந்து பேசுவதைக் கேட்பது போல இருக்கிறது.

  • BaalHanuman February 19, 2014 at 12:37 AM Reply

   உண்மைதான் ஸ்ரீராம் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s