2-எண்ணுகிறேன்.. எழுதுகிறேன்… – திருமதி சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

suj_MG_2238

‘‘போன பதிவில் மீடியா பத்தி பேசிட்டு இருந்தேன் இல்லயா? எப்பவுமே வாழ்க்கையில நல்லது கெட்டது எல்லாம் சேர்ந்துதான் வரும். அதுல நாம நல்ல விஷயத்த மட்டும் எடுத்துக்கணும். அடுத்தவங்க வாழ்க்கை எல்லாத்தையும் வெளிச்சம் போட்டு காட்டணும்ன்னு நினைச்சா ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் டிப்ரஷன்லதான் முடியும். எனக்குக் கூட அந்த அனுபவம் நடந்திருக்கு. எனக்கு அழகா கோர்வையா பேச வராது. மனசுல பட்டத அப்டியே சொல்லிடுவேன். ஒரு பத்திரிகை பேட்டியில நான் சொன்ன ஒரு கருத்தை, அவங்க வேற மாதிரி போட்டுட்டாங்க! அவங்களுக்கு 100 காப்பி அதிகமா விக்கணும்ன்னு அடுத்தவங்கள கஷ்டப்படுத்தறது ரொம்ப தப்பு!

என் கணவர்கிட்ட இருக்கற நல்ல விஷயம் என்னன்னா, அவருக்கு படிக்கிறதுன்னா அவ்ளோ இஷ்டம். ஒரு சின்ன பேப்பரக் கூட படிச்சிட்டுதான் கீழ போடுவார். தமிழ் பற்றும் ரொம்ப ஜாஸ்தி. நேரத்தை வீணடிக்கவே மாட்டார். இருபத்திநாலு மணிநேரத்தையும் பயனுள்ளதா உபயோகிக்கணும்னு நினைப்பார். ஆனா அலுவலக நேரத்துல வேற எதுவும் எழுத மாட்டார். அலுவலகம் முடிஞ்சு வீட்டுக்கு வருவார். கொஞ்ச நேரம் ரெஸ்ட். வெளில வாக்கிங் போய்ட்டு நண்பர்கள பாத்துட்டு வந்து ஏதாச்சும் எழுதுவார். நிறைய படிப்பார். ரொம்ப வேகமா எழுதுவார்! டி.வி. பார்க்கறது ரொம்ப அபூர்வம். ஏதாச்சும் நல்ல ப்ரோகிராம்னா கொஞ்ச நேரம் பார்ப்பார். ஒரு பத்து பத்தரைக்கெல்லாம் தூங்கப் போய்டுவார்.

ரிட்டயர்டு ஆனதுக்கப்புறம் நாங்க மெட்ராஸ் வந்துட்டோம். ஒரு பத்திரிகையில அவர் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார். மத்தியானம் வந்ததும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, ராத்திரி கொஞ்ச நேரம் எழுதுவார். ராத்திரியெல்லாம் கண்ணு முழிச்சு எழுதற பழக்கம்லாம் அவருக்கு கிடையாது. அதே மாதிரி சாப்பிடற விஷயத்துலயும் இது வேணும்னு கேட்க மாட்டார். எது சமைச்சாலும் சாப்பிடுவார். நீல கலர் ட்ரெஸ்னா பிடிக்கும். பெரும்பாலும் நீல கலர்தான் போடுவார்.

டி.வி.தான் ரொம்ப பார்க்கமாட்டாரே தவிர, அவருக்கு சினிமான்னா ரொம்ப பிடிக்கும். அப்போ அவங்க வீடு தி.நகரில் தணிகாசலம் தெருகிட்ட இருந்துச்சு. திருமணம் முடிஞ்சு அங்க பக்கத்துல இருக்கற ராஜகுமாரி தியேட்டர்ல ஒரு இங்கிலீஷ் படத்துக்கு கூட்டிட்டுப் போனார்! நாங்க டெல்லில இருக்கும்போது சனிக்கிழமை செகண்ட் ஷோவெல்லாம் போவோம். பசங்க வந்ததுக்கப்புறம் மூணு வருஷம் நான் போகலை. அப்புறம் அவங்களையும் கூட்டிட்டு போக ஆரம்பிச்சிட்டோம். எங்க வீட்ல ஒரு பழக்கம் உண்டு. அதாவது நாங்க பிறந்தநாள், திருமணநாள்னு எதையும் கொண்டாட மாட்டோம். ஆனா அவர், அவரோட பிறந்தநாள் அன்னைக்கு காலையில திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு போய்டுவார். அதே மாதிரி வருஷத்துக்கு ஒரு தடவை ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் போவார்.

எப்படி ஒரு எழுத்தாளர புரிஞ்சிட்டு அவரோட இருக்கீங்கன்னு கேப்பாங்க. அதுக்கு என்னோட பதில் ‘அதுக்குப்பேர் புரிஞ்சுக்கிறது இல்லீங்க.. அட்ஜஸ்ட்மெண்ட்டுன்னு சொல்லுவேன். ஒரு குடும்பம்னா ரெண்டு பேரும் அட்ஜஸ்ட் பண்ணனும் இல்லயா? அவரோட தனிமைய நான் தொந்தரவு பண்ணினா, அவரால எழுத முடியுமா? நான் அவரை அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். அதே மாதிரி அவரும் என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்குவார்.

அவரோட பர்ஸனல் விஷயத்தை நான் நோண்டவே மாட்டேன். அவரோட கம்ப்யூட்டர தொடறது, அவர் எழுதி வச்சிருக்கிறத எடுத்து படிக்கிறதுன்னு எதையும் நான் தொடவே மாட்டேன். அவரோட பாஸ்புக்குல எவ்ளோ பணம் இருக்குன்னு கேட்க மாட்டேன். எனக்கு அவர் பணம் தருவார் வீட்டு செலவுக்கு. என்ன செலவுன்னு கூட அவர் கேட்க மாட்டார். ஆனா, நானே சொல்லிடுவேன். அதனால் அவர் எங்கிட்ட கோவப்படறதுலாம் ரொம்ப கம்மி.

நீங்க சுஜாதா சாரோட மனைவியா? அது நீங்கதானான்னு எல்லோரும் ஆச்சரியமா கேட்பாங்க. பக்கத்துல இருக்கும்போது எவ்ளோ பெரிய விஷயமானாலும் அதோட அருமை தெரியாது இல்லையா? அந்த மாதிரிதான் எனக்கு என் கணவரும். அவர்  கடைசிவரைக்கும் என்னோட கணவராத்தான் தெரிஞ்சார். நான் எல்லா எழுத்தாளர்களோட கதைகளும் படிப்பேன். இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், இந்துமதி, சிவசங்கரின்னு நிறைய படிப்பேன். அப்படித்தான் என் கணவர் எழுதுனதையும் படிப்பேன்.

நாங்க பெங்களூர்ல இருக்கும்போதெல்லாம் நிறைய ரசிகர்கள் வருவாங்க. ராத்திரி பத்து மணிக்குமேல வந்து அவர பார்த்துட்டு இனிமே பஸ் கிடையாதுன்னு சொல்லுவாங்க. நாங்க ராத்திரி அவங்களை தங்க வச்சி காலையில காப்பி போட்டு குடுத்து அனுப்புவோம். அந்த மாதிரி நிறைய நடக்கும். பெங்களூர்ன்னதும் ஞாபகம் வருது. நான் அவர் எழுதின ஸ்கிரிப்ட்டுக்கு நடிச்சிருக்கேன் தெரியுமா?

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்…

–நன்றி சைரன்

Advertisements

2 thoughts on “2-எண்ணுகிறேன்.. எழுதுகிறேன்… – திருமதி சுஜாதா

  1. ஸ்ரீராம் February 19, 2014 at 12:30 AM Reply

    முதல் பாரா மிகப்பெரிய நிம்மதியையும் ஆறுதலையும் தந்தது. தொடர்ந்து படிக்கிறேன். அருமையான பகிர்வு.

    • BaalHanuman February 19, 2014 at 12:37 AM Reply

      நன்றி ஸ்ரீராம். தொடர்ந்து வருகை தாருங்கள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s