1-எண்ணுகிறேன்.. எழுதுகிறேன்… – திருமதி சுஜாதா


image_6

ஐம்பது வருடம் அவரோடு குடும்பம் நடத்தியிருக்கிறேன்.. எங்களுக்குள்ளே அடிக்கடி சண்டை வரும்.. நான் கோபமா கத்தினாலும் அவர் அதிர்ந்து பேசமாட்டார்.. ஏதாவது புத்தகம் படிக்க ஆரம்பித்துவிடுவார். கொஞ்ச நேரம் கழித்து ‘ஒரு கப் காபி கொடு’ என்பார். அவ்வளவுதான்.. சண்டை முடிந்துவிடும்.

அவருக்கு மறதி ஜாஸ்தி. நோட் பேடில் எல்லாவற்றையும் குறித்துக் கொள்வார். அது அவர் நிறைய விஷயங்களை மிஸ் பண்ணாமல் அவரை சரியாகச் செய்ய வைத்தது.

சின்ன வயசிலேயே சமையலில் நான் எக்ஸ்பர்ட். அந்த காலத்தில் ஃப்ரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் எல்லாம் கிடையாது. தினமும் காய்கறி ஃப்ரெஷ்ஷா வாங்கி சமைப்போம். சாம்பார் பொடி, ரசப் பொடி, இட்லி மிளகாய் பொடி எல்லாம் உரலில் இடித்து உபயோகிப்போம். ‘அரோமோ’ மாறாம நல்ல வாசனையா இருக்கும்.

அவர் தன் பாட்டிகிட்டதான் ரொம்ப வருஷம் வளர்ந்தார். பாட்டி சுவையா சமைச்சு போட்டதால அந்த டேஸ்டையே எதிர்பார்த்தார். கீரை, சுட்ட அப்பளம். வெந்தய குழம்பு, சீரக ரசம், மோர் மிளகாய் இப்படிப்பட்ட அயிட்டங்கள்தான் அவருக்கு பிடிக்கும்.. அதனால என் கிச்சன் வேலை ரொம்ப ஈஸியா போச்சு.

அவருக்கு சாப்பாட்டை விட புத்தகங்களும், எழுதுவதும்தான் உலகம்.. நண்பர்களுடன் அரட்டை, சீட்டு கச்சேரி அதெல்லாம் கிடையாது.

வீட்டு நிர்வாகத்தில் தலையிடவே மாட்டார்.

புடவை வேணுமா, நகை வேணுமா, சினிமா, டிராமா போகணுமா ஹோட்டலுக்கு போகலாமா என்றெல்லாம் கேட்கவே மாட்டார்.. என் போக்கில் விட்டுவிடுவார். என் மீது இருக்கிற அன்பை அதிகம் வெளிக்காட்ட மாட்டார். அவர் புனைபெயரே என் பெயர்தானே!

எனக்கு ஒரு சமயம் கடுமையான ஜுரம். அவர் தன் ஏராளமான வேலைகளை தள்ளி வைத்துவிட்டு வேளாவேளைக்கு எனக்கு மருந்து மாத்திரைகளை கொடுத்து அக்கறையாக பார்த்துக் கொண்டார்.

அதேசமயம் அவருடைய விஷயங்களில் என் குறுக்கீடு கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

இப்பவெல்லாம் நாம் ரெண்டு கிலோ தூக்கிக்கொண்டு நடக்க சிரமப்படுகிறோம். நாற்பது வருஷத்துக்கு முன்பெல்லாம் அப்படி கிடையாது. எங்கள் வீட்டுக்கு தினமும் ஒரு காய்கறிக்காரி வருவா. ஒல்லியான உடல்வாகு.. ஆனா ஐம்பது கிலோ, அறுபது கிலோ காய்களை தலைச்சுமையா தூக்கிட்டு அவள் நடந்து வருவது ஆச்சர்யமா இருக்கும்.. எப்படி தங்கம்மா இவ்வளவு கனம் சுமக்க முடியுதுன்னு கேட்டேன்.. ‘குடும்ப பாரத்தையே சுமக்கும்போது இதெல்லாம் பெரிசே கிடையாது’ என்றாள் தத்துவமாக! அது இன்னிக்கும் நெஞ்சிலே இருப்பதால கஷ்டமெல்லாம் பெரிய விஷயமா தோன்றதில்லை.

சொல்லப்போனா பெங்களூருவில் நான் இருக்கறச்சே இவர் ஆபீஸ் போனதும், பசங்களை ஸ்கூல் அனுப்பிட்டு எம்.ஏ., சைக்காலஜி ஈவினிங் காலேஜுக்கு அரக்கப் பரக்க ரெண்டு பஸ் பிடித்து ஓடுவேன். அஞ்சு மணிக்கு திரும்பி வந்து கிச்சன்… எனக்கு அடுத்த செட் ஜெயலலிதா எம்.ஏ. பொலிடிகல் சயின்ஸ் எழுதினாங்க.

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் வேலூரில்தான். வேலூர் கிளைமேட் மகா கொடுமை. இருந்தாலும் பழகிவிட்டது.

டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, இப்ப சென்னைன்னு அவர் பணியில் இருந்த நிறைய ஊர்களில் இருந்திருக்கேன்.. எனக்கு பிடிச்ச ஊர் பெங்களூருதான். ஊரே ஏசி போட்டாற்போல் நல்லா சில்லுன்னு இருக்கும். அவர் கூட ஒரு நாவல்ல ‘பெங்-குளிரு’ என்று எழுதியிருக்கார்னு நினைக்கிறேன். கார்டன் சிட்டி பெங்களூரு மாதிரி சென்னையும் மாறணும்னு ஆசை.. ஆனா இங்கே மரங்களை வெட்டிகிட்டே இருக்காங்க.. அடிக்கடி பேப்பர்லயும் போட்டோவோடு நியூஸ் வரும்போது ரொம்ப வருத்தமா இருக்கு.

நான் பல வெளிநாடுகளுக்கு என் கணவரோடு போயிருக்கேன். அங்கேயெல்லாம் இவருடைய நண்பர்கள் தமிழுக்காக ரொம்ப மெனக்கெடுவாங்க.. கலிபோர்னியால ஒருத்தர் அவருடைய ஃப்ரெண்ட்… அமெரிக்காவிலேயே பிறந்து படித்து சிவில் இன்ஜினீயரிங் டாக்டரேட் வாங்கியவர். தன் கிறித்துவ பெயரை ‘தமிழ்மணி’ என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.. தன் பணி முடிந்ததும் இந்திய குழந்தைகளை தேடிப்போய் தமிழ் பேச, எழுத கற்றுக் கொடுக்கிறார்.. என் பேரக் குழந்தைகளுக்கும் அவர்தான் தமிழ் டீச்சர். இலவச சேவை.. ஆனால், மதப் பிரச்சாரம் எதுவும் செய்வதில்லை.

பொதுவா வெளிநாட்டுப் பெண்கள் ரொம்ப கம்பீரம். அவரவர் வேலையைப் பார்த்து போயிட்டேயிருக்காங்க.. ஊர்வம்பு பேசிக் கொள்வதில்லை.. இந்தியாவிலும் பெண்கள் அப்படியிருந்தா நல்லாயிருக்கும்.

முன்பெல்லாம் ஃபாரின்ல இந்திய உணவுகளுக்கு வழியில்லாம இருந்தது.. இப்ப எல்லா நாடுகளிலும் இந்தியன் ரெஸ்டாரண்ட்கள் திறந்துட்டாங்க.. சமீபத்தில் சீனா டூர் போயிருந்தேன்.. ‘சீனாவா? பாம்புக்கறிதான் கிடைக்கும்…’ என்று நிறையபேர் பயமுறுத்தினார்கள்.. ஆனால், அங்கே தமிழ்நாட்டு ரெஸ்டாரண்ட்கள் இருந்தன. சாம்பார், ரசம், கூட்டு, அப்பளம், பொரியல்னு சூப்பரா சாப்பாடு கிடைக்கிறது..

உலக அதிசயமான சீனப் பெருஞ்சுவரை பார்த்தேன்.. எப்படி இவ்வளவு பிரமாண்டமா கட்டியிருக்காங்கன்னு மலைப்பா இருந்தது..

சீனாவில் மக்கள் எல்லாம் ரொம்ப சுறுசுறுப்பு.. கணவன், மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போறதால குழந்தையை அக்கம்பக்கம் இருக்கிற வயசானவங்களிடம் விட்டுட்டு போறாங்க.. வயசானவங்களுக்கும் உட்கார்ந்த இடத்தில் வருமானம்.

சீனாவில் டி.வி. சேனல்கள், பத்திரிகைகள் அதிகமா கிடையாதாம். மீடியா சுதந்திரம் ஒரு லிமிட்தான். இங்க மீடியா சுதந்திரம்னு ஒரு சிலர் தனிப்பட்டவர்களை கொச்சைப்படுத்துவது அதிகமாகிட்டு வர்றது.. இது கவலை அளிக்கக்கூடிய ஒன்று. ஆனா மீடியா சுதந்திரத்தால நல்ல விஷயங்களும் நடக்கிறது. அது…

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்…

–நன்றி சைரன்

Advertisements

2 thoughts on “1-எண்ணுகிறேன்.. எழுதுகிறேன்… – திருமதி சுஜாதா

  1. Srinivasan S. February 18, 2014 at 4:29 PM Reply

    Exciting! As a fan of Sujatha, in those days, now I have become a fan of Mrs. Sujatha. Please keep writing.

  2. reader February 19, 2014 at 3:48 AM Reply

    // எனக்கு அடுத்த செட் ஜெயலலிதா எம்.ஏ. பொலிடிகல் சயின்ஸ் எழுதினாங்க.//

    Is it a fact? CM is known to be passed only the matric.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s