1-அவள் அப்படித்தான் – சில நினைவுகள் – வண்ணநிலவன்


–நன்றி http://ilayaraja.forumms.net/

‘அவள் அப்படித்தான்’ படம் வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. அந்தப் படத்தில் பங்கு பெற்ற பல தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு அதுதான் முதல் படம். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் இயக்குநருமான ருத்ரையாவைப் பற்றிச் சொல்லாமல் தீராது.

எனக்கு ருத்ரையாவை 75-லிருந்து தெரியும். அவர் எனக்கு அறிமுகமானபோது அவர் சென்னை அரசு திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை இயக்கத்துக்கான வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அவள் அப்படித்தான் படத்தின் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றிய நல்லுசாமி, ஞானசேகரன், அருண்மொழி, எடிட்டர் கண்ணன் போன்றவர்கள் ருத்ரையாவுடன் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்களே. படத்தின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த பாபுவும் ருத்ரையாவும் வகுப்புத் தோழர்கள்.

டைரக்டர் ஜெயபாரதி தான் எனக்கு ருத்ரையாவை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது நான் ‘அன்னை நாடு’ என்ற தினசரியில் வேலை பார்த்து வந்தேன். நானும் ஜெயபாரதியும் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தோம். இருவரும் அடிக்கடிச் சந்திப்போம். பரங்கிமலை ஸ்டேஷன் படிக்கட்டு அருகே நின்று நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்காக சினிமா, பத்திரிகை, இலக்கியம் என்று பேசிக் கொண்டிருப்போம். ஜெயபாரதி அப்போது தினமணி கதிரில் உதவி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். ‘இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்’ என்ற திரைக்கதை வசனத்தை NFDC-க்குச் சமர்ப்பித்திருந்தார்.

நினைவுகள் தொடரும்…

கமலும், ரஜினியும் அந்தச் சமயத்தில் பல படங்களில் நடித்து வந்தார்கள். ஸ்ரீப்ரியாவும் அன்றைய நம்பர் ஒன் ஹீரோயின். மூவருமே பிஸியான ஆர்ட்டிஸ்ட்கள். இருந்தும் ‘அவள் அப்படித்தான்’ படத்துக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது.

தலைசிறந்த உலகத் திரைப்படங்களைப் பற்றிய ருத்ரய்யாவின் அறிவு அபாரமானது. உலகப்பட இயக்குநர்களைப் பற்றியும், அவர்களது படங்களைப் பற்றியும் அவருக்குச் சொந்தமான அபிப்பிராயங்கள் உண்டு. கமலுடனும் அனந்து சாருடனும் அவர் பல திரைப் படங்களைப் பற்றி விவாதிப்பார். சிற்பம் செதுக்குவது போல் ருத்ரய்யா படத்தைச் செதுக்கினார்.

இளையராஜாவும் கங்கை அமரனும் குமார் ஆர்ட்ஸ் அலுவலகத்துக்கு வந்துவிடுவார்கள். அடுக்கடுக்காக மெட்டுகளை அந்தக் காலத்திலேயே இளையராஜா ஆர்மோனியத்தில் வாசித்துக் காட்டுவார். தீபாவளியன்று படம் திரையிடப்பட்டது. சென்னையில் காமதேனுவிலும் சபையர் வளாகத்தில் அமைந்துள்ள எமரால்டிலோ ப்ளூடைமண்டிலோ ஓடியது. காமதேனுவைவிட சபையர் வளாகத் தியேட்டரில் சற்றுக் கூடுதல் நாட்கள் ஓடியதாக ஞாபகம். பெரும்பாலும் பத்திரிகைகளில் பாராட்டியே விமர்சனங்கள் வெளிவந்தன. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுவிட்டது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s