ரசனையை உயர்த்தினாரா ராஜா? – அரவிந்த் யுவராஜ்


எழுத்தாளர் சாருநிவேதிதா சமீபத்தில், “இளையராஜா ஒரு இசையமைப்பாளரே இல்லை” என்று சொல்லியிருக்கிறார். இதற்கு முன்னும் அவர் சொல்லி இருக்கிறார். சொல்லலாம்… தவறில்லை, அது அவருடைய கருத்து. இன்னும் சொல்லப்போனால் ஏதோ ஒண்ணு, ரெண்டு பாட்டுத்தான், வேறொண்ணும் சொல்லிக்கிற மாதிரி அவர் எதுவும் செஞ்சிடல” என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதற்கான காரணத்தைக் கேட்கும்போது அவர்கள் கொடுத்த விளக்கத்திலிருந்து அது எந்தவகை ஒவ்வாமை என்று தெரிந்துவிடும். பெரும்பாலும் அதற்கு முந்தைய தலைமுறை இசையமைப்பாளர்களின் மேல் இருக்கும் தீவிர அன்பு அல்லது அடுத்த தலைமுறை இசையமைப்பாளரின் வருகையால் அவர்களின் childhood favorites இன் இசைப் பயணத்தின் வேகமும் அங்கீகாரமும் மெல்ல மெல்லக் குறைவதை, தனக்கு ஏற்பட்ட தோல்வியாகவே கருதி ஏற்படும் வெறுப்பு… இவற்றில் ஒன்றாகத்தான் பெரும்பாலும் இருக்கும். இதே காரணம்தான் இப்போது ஏ.ஆர்.ரெஹ்மானை ஏற்க மறுக்கும் இளையராஜா ரசிகர்களிடமும் தென்படுவதைப் பார்க்கிறோம்.

ஒரு கலை வடிவம் ஒருவரை வசீகரிப்பதன் பின்னால் அந்தக் கலையின் அழகைத் தாண்டிப் பல காரணங்கள் இருக்கின்றன. வளர்ப்புச் சூழல் தொடங்கி மரபியல் காரணங்கள், தாக்கங்கள் என என்னென்னவோ அடுக்கலாம். இதில் இசை இன்னும் நுட்பமான வேறுபாட்டைக் கொண்டது. ஒரே சமூகத்தின் நாகரிக மரபின் வெளிப்பாடுகளுக்குள்ளேயே வெவ்வேறான பிரியங்களை உள்ளடக்கியதாக இருப்பதுதான் அதன் தன்மை. உதாரணமாக ஒரே சமூகத்தின் ஒரு பிரிவினருக்குப் பிடித்தமான தாளக்கட்டு” (rhythm pattern) இன்னொரு பிரிவினருக்குப் பிடிப்பதில்லை.

இப்படி அடிப்படையில் ரசனைக்கே இத்தனை காரணிகள் இருக்கும்போது, ஒருவரைப் பிடிக்காது என்பதைக் காரணமே இல்லாமல் ஏற்றுக் கொள்ளலாம். தவறில்லை… ஆனால் இவர் இசையமைப்பாளரே இல்லை” என்று சொல்வது ரசனை என்பதைத் தாண்டி ‘வித்வத்’ என்பதன் மேல் வைக்கும் கேள்வியாகத்தான் இதைப் பார்க்க முடியும்.

இளையராஜா ஒரு இசையமைப்பாளர் அல்ல” என்பதை நிறுவுவதற்கு அவர் சொல்லிய ‘மனதை உருக்கவில்லை’, ‘ஆன்மாவைத் தொடவில்லை’, போன்ற காரணங்களையும், சாருநிவேதிதா உயிரை உருக்குவதாகச் சொல்லும் வலைதளத்தில் உதாரணம் காட்டும் ஆப்ரிக்க, பெல்ஜியம் பாடல்கள் எல்லாமே அவரின் விருப்பம் சார்ந்ததாக அமைந்திருக்கிறதே தவிர, எந்த ஒரு technical derivations மற்றும் இசைநுட்ப ஒப்பீடுகள் இதுவரை கண்ணில் படவில்லை. அப்படி இருந்து அதை மேற்கோள் காட்டியிருந்தால் சரியாயிருக்கும்.

கேட்க ஆன்மா உருகுகிறது” எங்கேயோ எடுத்துச் செல்கிறது” என்பதை எப்படி நிறுவுதல்” வகையறாக்குள்ளே கொண்டுவர முடியும்? இளையராஜாவின் இசையைக் கேட்கும் எத்தனையோ லட்சம் பேருக்கு இந்த ஆன்மா உருகலும்”, எங்கோ எடுத்துச் செல்லலும்” தினம் தினம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. அப்படி அவரை உருகி ரசிப்பவர்களில் கணிசமானோர் உலக இசையையும் கேட்பவர்களே.

இன்னும் ஒரு உதாரணம் கொடுக்கலாம். சாருநிவேதிதா ஒரு எழுத்தாளரே அல்ல” என்று ஒருவன் சொல்கிறான் என வைத்துக் கொள்வோம். அவனிடம் எந்த வகையில் சொல்கிறாய்” என்று சட்டையைப் பிடிக்கும்போது, உலக எழுத்தாளர்கள் சிலரின் படைப்புகளைக் காட்டி இதைப் படிக்கும்போது ஏற்படும் மனநிறைவு சாருநிவேதிதாவின் எழுத்தைப் படிக்கும்போது வரவில்லை” என்று அவன் சொல்வானென்றால் அது அவனின் ரசனை சார்ந்த விமர்சனமா? வித்வத் சார்ந்த விமர்சனமா?

கடைசியாக, ஏதோ கொஞ்சம் இசையில் ஆர்வமும் புரிதலும் உள்ளவன் என்ற முறையில் ‘இளையராஜா’ என்பவர் இசையில் செய்த சாதனைகளில் முக்கியமான சாதனை என்ன தெரியுமா?

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் தமிழர்களின் இசை ரசிப்பின் தரத்தை உயர்த்தியது”தான். உண்மையாகச் சொல்லுங்கள் ரசனையின் தரத்தை ராஜா  உயர்த்தினாரா? இல்லையா?

– அரவிந்த் யுவராஜ் -திரை எழுத்தாளர்.

–நன்றி கல்கி

Advertisements

6 thoughts on “ரசனையை உயர்த்தினாரா ராஜா? – அரவிந்த் யுவராஜ்

 1. cnsone February 9, 2014 at 11:37 PM Reply

  Ilaya Raaja’s Talent is Not to be recognized by people like Charu Niveditha. He himself has talent but that is overshadowed by his Minus Points – which he has in tons.

  Raaja has humility. He has principles – both are sadly missing with Charu. Charu did not have shame to do so many things in Public just because he painted himself as a ‘radical’ and non conformist. That does not give him any License to Blabber what he likes.

 2. nandhitha February 10, 2014 at 9:24 AM Reply

  குருவிகள் எச்சமிடுவதால் கோபுரங்கள் சாய்வதில்லை

 3. nparamasivam1951 February 10, 2014 at 10:49 AM Reply

  உயர்த்தினார் சந்தேகம் இன்றி உயர்த்தினார்.

 4. charu nivedita February 10, 2014 at 4:33 PM Reply

  இளையராஜா ஒரு இசையமைப்பாளர் அல்ல என்று நான் எந்த இடத்திலும் சொல்லவில்லை. சும்மா பொய் சொல்லி என்னைத் திட்டாதீர்கள்…

  • cnsone February 10, 2014 at 7:57 PM Reply

   If that is true, Charu, I would retract my comments.

 5. ரெங்ககசுப்ரமணி February 12, 2014 at 6:28 AM Reply

  அவரவர் ரசனை அவரவர்க்கு. சாரு எழுதிய ஜீரோ டிகிரியை அனைவரும் பாராட்டுகின்றனர். எனக்கு ஒரு எழவும் புரியவில்லை. அவர் அறிமுகம் செய்யும் பல பாடகர்கள் எனது ஆன்மாவை உருக்கவில்லை. ராஜாவின் அனைத்து பாடல்களும் பிரமாதமாகவா உள்ளது, அவரது பாடல்கள் பற்றி சுகாவின் கட்டுரைகளி நிறைய வரும். அதில் பிரமாதம் என்று கூறப்படும் பாடல்கள் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

  ஒருவரின் ரசனையை அடிப்படையாக கொண்டால், உலகில் ஏகப்பட்ட தலைசிறந்த இசையமைப்பாளர்களும், பாடகர்களும் இருப்பார்கள். ஏ.ஆர். ரகுமானைவிட யுவனின் பாடல்கள் நன்றாக இருக்கின்றது எனக்கு. இசையை விமர்சனம் செய்வது மிகக்கடினம். இசையை நன்கு கற்றவர் வேண்டுமானால் அதை செய்யலாம், அதுவும் ஏதாவது டெக்னிக்கல் விமர்சனம் செய்யலாம், இங்கு சுருதி விலகியது, இந்த ராகம் இங்கு இந்த ராகமாக மாறியது, இந்த ராகத்துடன் இதை கலக்க கூடாது. ஆனால் அது தரும் அனுபவத்தை, (ஆன்மாவை தொடுவது, உள்ளத்தை உருக்குவது, கண்ணீர் வருவது) எல்லாம் வரையறை சொல்ல முடியாது. ஒரு மாதம் முன்பு, ரோட்டில் ஏதோ அம்மன் ஊர்வலம். தப்பு, பறை. சிறிது நேரம் அது என்னை இழுத்துவிட்டது, கண்ணில் கண்ணீர். இதே இசை அங்கு பத்து பேரை உற்சாகமாக ஆட வைக்கின்றது, எனக்கெ வேறு ஏதோ செய்துவிட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s