நான் கர்வம் பிடித்தவனா? – இசைஞானி


சமீபத்தில் ஆனந்த விகடனில் வெளியான இசைஞானி இளையராஜாவின் நேர்காணல், மிகச் சிறந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பத்மபூஷன் விருது பெற்ற ராஜாவுக்கு மரியாதை செய்ய திருமாவளவன் போயிருந்தார். அந்த சந்திப்பில் இளையராஜா கூறியுள்ள ஒவ்வொரு பதிலும் அந்த மனிதரின் உண்மையான உள்ளத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்திருந்தன.

அந்த நேர்காணலில், ராஜாவின் பதில்களை மட்டும் தனியாக இங்கே தருகிறோம்…

பத்மபூஷன் விருது காலம் தாழ்த்தி கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதற்கு ராஜா சொல்லியிருக்கும் பதில்:

“சாதிக்காகவா விருது கொடுப்பான்? சாதிச்சதுக்காகத்தானே தருவார்கள். காலத்தால் கிடைத்த விருது, காலம் கடந்த விருது என்றெல்லாம் எதுவும் இல்லை. தருணம் ஏற்பட்டால், பரிசுகள் கிடைக்கும். உள்ளே இருக்கும் குஞ்சுக்குச் சிறகு முளைத்தால், முட்டையில் விரிசல் விழும். அதுதான் கோழியின் தருணம். அது மாதிரி இப்போது எனக்குப் பரிசு கிடைக்கும் தருணம்’.

தனது அரசியல் அனுபவத்தை இப்படிச் சொல்கிறார் இளையராஜா:

‘சின்ன வயசிலயே எனக்குக் கட்சி, அரசியல், உலகம், பிரச்னைகள் எல்லாமே தெரிய ஆரம்பிச்சது. ஏன்னா, கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்பு இருந்தது. ஆனா, இசை ஆர்வம் அதைவிட அதிகமா இருந் தது. ஏதோ ஒரு பொருளை வித்து 400 ரூபாய் பணத்தை என்னோட அம்மா கொடுத்தாங்க. அதை வெச்சுக்கிட்டுதான் சென்னைக்கு வந்தேன். இன்றைக்கு இருக்கிற இசை அனுபவம் அன்றைக்கு இருந்தா, நிச்சயமா சென்னைக்கு வந்திருக்கவே மாட்டேன்!

இசையில் ஒரு சிகரம் என்று தன்னைப் புகழ்வதைப் பற்றி ராஜா கூறியுள்ள பதில் அவரது ஆழ்ந்த புலமை மற்றும் சொல்லாட்சியின் உச்சம்…

‘நிலம் தாழ்ந்ததாக இருப்பதால் நீர் அதன் மீது ஓடுகிறது. எனவே, என் மீதுதான் நீர் ஓடுகிறது என்று நிலம் பெருமைப்பட முடியுமா? அதுபோல இசை, என்னைத் தேர்ந்தெடுத்து என் மீது ஒடுகிறது. அவ்வளவுதான். அதற்காக இசை அறிவு என்னிடம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம் அல்ல. இசை என்னும் புள்ளியை நோக்கி நான் நாட்டம் செலுத்தினேன். அது என்னைத் தேர்ந்தெடுத்தது. நீங்கள் உங்களது நாட்டத்தை அரசியலில் செலுத்தினீர்கள். அரசியல் அறிவு உங்களைத் தேர்ந்தெடுத்தது.’

‘நான் என்னுடைய கடமையை, எனக்குத் தெரிந்ததைச் செய்கிறேன். அதனால், யார் என்னைப் புகழ்ந்தாலும் அதை நான் பெரிதாக நினைப்பது இல்லை. அதைப் பார்த்துத்தான் சிலர் என்னைக் கர்வம் பிடித்தவன் என்கிறார்கள்’

‘நான் புத்தகம் எதுவும் படிக்கிறது இல்லை. அதுக்கு நேரமும் இல்லை. அதில் நாட்டமும் இல்லை..’ என்று முடித்துள்ளார் ராஜா.

–நன்றி என்வழி

Advertisements

3 thoughts on “நான் கர்வம் பிடித்தவனா? – இசைஞானி

  1. nandhitha February 7, 2014 at 5:11 AM Reply

    வணக்கம்
    இசை ஞானி நிறைகுடம். அளவாகப் பேசுவார், இனிமையாகப் பழகுவார்,தமிழகத்தின் பொக்கிஷங்களில் அவர் ஒருவர். இன்னும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  2. எவ்வளவு உயரம் சென்றாலும் இந்தப் பணிவு யாருக்கு வரும்…? ஒரு சிலருக்கே… இசைக்கு வாழ்த்துக்கள்…

  3. Xavier February 7, 2014 at 5:44 AM Reply

    Nice & Humble Answers..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s