8-மின்னல்-மழை-Motivation – ஜெயராமன் ரகுநாதன்


இதன் முந்தைய பகுதி…

sujatha33

2007

அந்தப்பெரிய க்ரூப்பில் வைஸ் ப்ரெசிடெண்டாக இருந்தேன். ஒரு சில பாலிடிக்சில் மனம் உளைச்சலாக இருந்த சமயம் அவரிடம் பேசினேன். ரொம்ப நேரமெல்லாம் இல்லை, அரை மணிதான். நெறயக்கேள்விகள் கேட்டார்.

“சரி, விட்டுடு” அடுத்தது என்னன்னு யோசிச்சியா?”

”மறுபடி சொந்தமா கம்பெனிதான் சார்”

”ஓகே. ஆல் த பெஸ்ட்”
.
மீட்டிங் முடிந்துவிட்டது.

#

சந்தோஷமாக Right Fields ஆரம்பித்தேன்!

மள மள வென்று முன்னேற முடிந்தது. அபார டீம் அமைந்தது. போன தரம் பண்ணின தப்பெல்லாம் அவாய்ட் பண்ணி வெகு சீக்கிரம் வளர்ந்தோம். என்னுடைய ப்ராப்ளம் இந்த வேகமான வளர்ச்சியை எப்படி சமாளிப்பது எனபதுதான். அவருடன் பேசும்போது இதைப்பற்றி சொல்ல, அவர்,” It is a nice problem to have” என்று சொல்லி, ”ஒரு நிறுவனம் அதன் மனிதர்களை விட உயர்ந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்” என்ற ஒரு தாயமும் போட்டார்.

வருடாந்திர வளர்ச்சி 60%, வாடிக்கையாளர்கள் சேர்ப்பு இரு மடங்கு, டாலர் பில்லிங் இந்திய ரூபாய் பில்லிங்கை விட மூன்று மடங்கு, ஊழியர்கள் எண்ணிக்கை ஆறு மாதத்துக்கு ஒரு முறை இரு மடங்கானது…ஆனாலும் கம்பெனியை ஒரு மிகப்பெரிய Microsoft Partner கம்பெனிக்கு விற்றோம்.

ஏன்?

ஒரு நிறுவனம் அதன் மனிதர்களை விட உயர்ந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்” – வாத்யார்!

நண்பர்களே! சுவாரஸ்யமாக எழுதிக்கொண்டே வந்துவிட்டேன். 2008-ஐ நெருங்கிவிட்டோம் என்பதை உணருகிறேன்.

இனி என்ன எழுதுவது?

என்னுடைய கோயமுத்தூர் பயணம் பற்றித்தான்.

எட்டு ஐம்பதுக்கு புறப்படும் நீலகிரி எக்ஸ்ப்ரஸில் டிக்கட் செக்கிங்குக்காக காத்திருந்த அந்த நேரத்தில் வந்த SMS:

”எழுத்தாளர் சுஜாதா இறந்து விட்டார். சன் டீவியில் கீழே வார்த்தைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. என்னால் நம்பமுடியவில்லை”.

ரகு! என்ன ஆச்சு?” – நாராயணன் ராமஸ்வாமி.

எப்படி அந்த இரவை டிரயினில் கழித்தேன். எப்படி அடுத்த நாள் என் வேலையைக் கவனித்தேன்.

சென்னை இறங்கினவுடன் சிவி சங்கருடன் பேசிவிட்டு இருவரும், லதாவும் காரில் ஓடினோம்.

Marvel Jus என்னும் அந்த அபார்ட்மெண்ட் ப்ளாக் எப்போதும்போலவே வெட்கமேயில்லாமல் அமைதியாக இருந்தது ஆத்திரத்தை வரவழைத்தது. வாசல் காக்கும் அந்த வயதானவன் சர்வ சாதாரணமாக தெருவில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். ஒன்றுமே நடக்காதது போல தெருவில் எல்லோரும் போய் வந்து கொண்டிருந்தார்கள்.

வாசல் ஹால் அப்படியே தான் இருந்தது. டீபாயின் மேல் பலதரப்பட்ட பத்திரிக்கைகள். எதிரே சீலிங் வரை உயர்ந்த கண்ணாடி அலமாரியில் நினைத்தாலே இனிக்கும் முதல் அளிக்கப்பட்ட சினிமா மற்றும் கணக்கிலடங்காத விருதுகள். டீவி பொட்டி அதெ இடத்தில். கார்ட்லெஸ் போன் அனாதையாக.. பின்னால் டைனிங் டேபிளில் தூவிக்கிடந்த பூக்களின் சிதறல்.ஆங்காங்கே சில காபி டம்ளர்கள். ஒன்றிரண்டு பேர் நடமாட்டம்.

சுஜாதாம்மா பக்கவாட்டு சோபாவில்.

டீவிக்கு நேர் எதிரே அந்த ஒற்றை சோபாவில் தொள தொள வென சட்டையும் தரையைப்பெருக்கும் பாண்ட்டும் அணிந்து, முன் நெற்றியில் வந்து விழும் அரை நரை தலை முடியுடன், கையில் ரிமோட்டுடன், “ சொல்லுய்யா! இப்ப என்ன அக்கப்போர்” என்னும் என் ஆதர்ஸ மனுஷனைத்தான் காணவில்லை.

இன்று மட்டும் இல்லை, இனி எப்போதுமே…

முடிந்தது.

“என்னைப் பொறுத்த வரை இப்போது என்றில்லை.  ஆரம்பம் முதலே குறைவான வசனங்களையே எழுதி வருகிறேன்.  நான் கதை-வசனம் எழுதி, கே.பாலசந்தர் இயக்கிய ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தைப் பாருங்கள்…  மிக மிகக் குறைவான வசனங்களே அதில் இருக்கும்.”அப்போது ‘ABBA ‘ என்றொரு ஆங்கிலப் படம் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த நேரம்.  அதுபோல நாமும் ஒரு படம் பண்ணலாம் என்று பாலசந்தர் விரும்பியதால்,  அதே போன்ற ஒரு சுப்ஜெக்ட்டை ரெடி செய்தோம்.  ‘ABBA ‘  போலவே ஒரு இசைக் குழுவை வைத்துக் கதை பண்ணினோம்.  காட்சிகளும்,  பாட்டும்தான் அதிகம் வைத்தோம்.  வசனம் மிகக் குறைவாகவே இருந்தது.  அது மாபெரும்  வெற்றி பெற்றது.

இந்தப் படத்தில் சுஜாதாவின் சில வைர வரிகள்…

1.இந்த சிரிப்பு வெட்கமா, விஷமமா ?

2.இங்கே ஆட்டோகிராஃ ப் வேணும்.
ச்சீய், அங்க எல்லாம் பேனா எழுதாது. வேணும்னா கைநாட்டு போடவா ?

3.மிஸ். உங்க கைரேகை பார்த்து பலன் சொல்லவா?
ம். PTO னு போட்டிருக்கு. அந்தக் கைய குடுங்க.

4.நான் உங்க கைல கிடார் ஆகணும்…

5.என்னங்க, தம்பட்டம் அடிப்பவர் வந்திருக்கார்…
ஹய்யோ, அது ட்ரம்ஸுங்க.

6.மிஸ், சிங்கப்பூரா போறீங்க ?
நோ, பாதிலேயே இறங்கிக்குவேன்.
எங்கே ?
பே ஆஃப் பெங்கால்.

7.கைரேகை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஏன்னா, என் எதிர்காலம் என்னன்னு எனக்கு அல்ரெடி தெரியும்.

8.எப்பவோ நாம் வரப்போகும் இடத்துக்கு இப்பவே ஏன் கூட்டி வந்தே ?
சுடுகாட்டுக்குத் தான் யாரும் வர மாட்டாங்க. ஃப்ரீயா பேசிட்டு இருக்கலாம்.

9.நான் பயங்கர முட்டாள்ங்க…
அதான் நான் லவ் பண்ணேன்.
அப்போ புத்திசாலியா இருந்தா ?
மேரேஜ் பண்ணி இருப்பேன்.

10.சிக்கன் நீங்க சாப்பிடலே?
அல்ரெடி சாப்ட்டாச்சு. இன்னும் சாப்ட்டா அல்ரெடி உள்ளே இருக்கும் சிக்கன் கூட இது போய் சண்டை போடும்.

11.இங்க என்ன பண்றீங்க ? (முதலைப் பண்ணை)
முதலைக் கண்ணீர் வடிக்க கத்துக்கிட்டு இருக்கேன்.

12.மறக்காம இந்தக் கடிதத்தை குடுக்கச் சொன்னார். அதான் மறந்துட்டேன்..

–நன்றி சி.பி.செந்தில்

Advertisements

One thought on “8-மின்னல்-மழை-Motivation – ஜெயராமன் ரகுநாதன்

  1. வணக்கம்

    சிறப்பாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s