6-மின்னல்-மழை-Motivation – ஜெயராமன் ரகுநாதன்


இதன் முந்தைய பகுதி…

Note from BalHanuman:

இந்தப் பதிவில் ரகு குறிப்பிடும் -Dr நிர்மலா ப்ரசாத் சுஜாதாம்மாவின் சகோதரர் ப்ரசாதின் மனைவி. 35 வருட அபார சேவைக்குப்பிறகு சமீபத்தில் ரிடயர் ஆன எம் ஓ பி வைஷ்ணவா காலேஜின் ப்ரின்சிபால். She is a legend in the education field of Chennai.

என் பெண்ணையும் பாதி ராஜ்யத்தையும் விரும்புவோர் அந்த கல்கியையும் சாவியையும் தேட, நான் மின்னல், மழை தாண்டி Motivation-க்குள் நுழைகிறேன்.”நான் தீபாவளிக்கு சென்னை வருகிறேன். சந்திக்கலாம்” என்று முதலிலும், பிறகு தேதி குறிப்பிட்டு “ நாலு மணிக்கு வரலாம்” என்றும் செய்தி அவரிடமிருந்து.
நானும் நண்பன் சங்கரும் (இப்போது சி வி சங்கர் IAS. (சின்னக்குயிலி கதையில் சுஜாதா இவருக்கு ஸ்பெஷலாக நன்றி சொல்லியிருப்பார்!) மூன்றரைக்கே லஸ்ஸில் உள்ள அவரின் மாமனார் வீட்டிற்கு வந்துவிட்டோம்.
“யாரு?” கேட்டவரோடு நான் பின்னாளில் நட்பாகப் போகிறேன் என்றோ, அவரின் திருமதி என் மீது, சுஜாதா போலவே அளவில்லாத பாசம் வைக்கப்போகிறார் என்றோ தெரியாத தினங்கள்.
“காமராஜ் அவின்யூ ரகுனாதன்”
ஓ! நீங்களா? வந்தால் உட்காரச்சொன்னார். வந்துவிடுவார்”
காத்திருந்தோம்.
நாலரை மணிக்கு அவசர அவசரமாக வந்தார். வெராண்டாவில் குவிந்திருந்த செருப்புக்கூட்டத்தில் தன் ஷூக்களை கழற்றிவிட்டு, “ எப்படி இருக்கே” விஜாரித்தார்.
“நிர்மலா! காபி குடுத்தியா?”
பத்து நிமிடங்கள் பேசிவிட்டு, “கிளம்பறேன்யா. நிழல்கள் ஸ்பெஷல் ஷோவுக்கு பாரதிராஜா கூப்ட்ருக்கார். எப்போதும்போல லெட்டர் எழுது”. பாத்துப்போ”.கிளம்பிவிட்டார்.-காபி குடித்து முடித்தவுடன், “அப்படியே நிழல்கள் ஷோவுக்குப் போறதா இருந்தது. ஒங்கள வரச்சொல்லிட்டதுனால வந்துட்டு போனார்” – மைத்துனர் ப்ரசாத் சொல்ல, எனக்கும் சங்கருக்கும் வாயடைத்தது.சொன்ன வார்த்தையை காப்பாத்து என்கிற முதல் மானேஜ்மெண்ட் பாடம் எனக்கு.

“முடிவு பண்ணிட்டியா, இல்ல, யோசிக்கிறயா?

”கிட்டத்தட்ட முடிவு பண்ணினா மாதிரிதான்..”

“அப்புறம் வந்து யோஜனை கேக்கறியா?”

“ டெக்னாலஜி ஆச்சே? நீங்க ஏதானும் DOs and DONTs சொன்னா..”

”லதாவிடம் சம்மதம் வாங்கிட்டியா?”

ஓ! – புளுகினேன்.

இருபது நிமிடங்கள் பேசினார். முடிவாக “Keep it simple” என்பதுதான் சாராம்சம்.

நான் முதன் முதலில் சுயமாக சாஃப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கும்போது நடந்தது.

அவர் சொன்னதை நான் எவ்வளவு கடைப்பிடித்தேன், எவ்வளவு கோட்டை விட்டேன், அந்தக் கம்பெனியை விற்கும்போது எப்படி நெகோஷியேட் பண்ணீனேன் போன்ற சமாச்சாரங்கள் என்னுடைய சுய சரிதையில் இடம் பெறும்போது படித்துக் கொள்ளுங்கள்!

1997-ல் சகோதரி பவானி (Bhavani Anantharaman) அவளின் வருடாந்திர நாட்டிய நிகழ்ச்சிக்கு (Annual event of her dance School Prasannalaya) அவரை தலைமை தாங்க கூப்பிடலாம் என்ற ஒரு அற்புதமான யோஜனை தெரிவிக்க, இருவருமே ஆழ்வார்ப்பேட்டைக்கு ஓடினோம்.

‘என்னை விட்டுடு. சுஜி! நீ போய் தலைமை தாங்கு. நான் கூட வேணா வரேன்”

அந்த நீல கலர் மாருதியை ஒட்டிக்கொண்டு ம்யூசிக் அகாடெமிக்கு வந்தார். பொறுமையாக குழந்தைகளின் ஆட்டத்தை இருந்து பார்த்தார். சுஜாதாம்மாவின் தலைமையுரைக்கு சோகையாய் கை தட்டிவிட்டு “சமோசா வேண்டாம்” என்று மறுத்து, காபி மட்டும் குடித்துவிட்டுப் போய்விட்டார்.

காரை ஸ்டார்ட் செய்தவாறே, “பவானி! கல்யாணம் ஆய்டுத்துன்னு வெறும வீட்டுல இருக்காம ஒனக்கு தெரிஞ்ச ஆர்ட்டை வேஸ்ட் பண்ணாம சொல்லிக்குடுக்கறது இஸ் சம்திங் குட்”

பவானியின் மனஸில் நடந்த வர்ண ஜாலங்களை அவள்தான் இங்கே எழுத வேண்டும்!.

தலைமை தாங்க வேண்டிய பாபுலர் ஆசாமி இவர்தான். தான் ஒதுங்கி, மனைவியை முன்னுக்குத் தள்ளி…..

இன்னொரு மானேஜ்மெண்ட் பாடம்!

தொடரும்…

 

2 thoughts on “6-மின்னல்-மழை-Motivation – ஜெயராமன் ரகுநாதன்

  1. Rishaban Srinivasan January 31, 2014 at 2:37 AM Reply

    கீழ அடையவளஞ்சான் வீதியில் ஒரு வீட்டின் திண்ணையில் சற்று அருகருகே அவரது மூச்சுக் காற்று என் மேல் படுகிற தூரத்தில் நான்.. ‘படிச்சிருக்கேன்..’ என்றார்.. நானும் கதைகள் எழுதுவதாய்ச் சொன்னதும் ! ‘சிறுகதை நாட் ஒரு மாதிரி புரியுது.. ஆனா நாவல்.. தொடர் வடிவம் குழப்புது’ என்றதும் அரை மணி விளக்கினார் ! சுஜாதா என்கிற எளிமை அறிமுகமானது எனக்கு அப்போதுதான் !

  2. Bhavani Anantharaman January 31, 2014 at 2:42 AM Reply


    The “varna jaalam” (aptly described by my brother JR )is still continuing in my mind n heart. That in fact is keeping me away from face book for the past 2 weeks!!……..my students of dance n music are performing on the 25th jan at Batinda, Punjab! Rehearsals in full swing n no time for fb….. I still cannot forget how Sujatha Ma’m’s kind n humble speech floored the entire audience. THANK YOU SUJATHA SIR, THANK YOU MA’M, THANK YOU ANNAAAA (OREO SISTER !! )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s