அடுத்த கட்டம் – என்.சொக்கன்


என். சொக்கன்

ஆங்கிலத்தில் ‘பிஸினஸ் நாவல்’கள் மிகப் பிரபலம். சாதாரணமான சுய முன்னேற்ற விஷயங்களில் ஆரம்பித்து, சிக்கலான மேலாண்மை நுட்பங்கள்வரை, சகலத்தையும் நூற்றுச் சொச்ச பக்கங்களுக்குள் விறுவிறுப்பான கதை வடிவத்தில் விவரிக்கும் நூல்கள் அங்கே தினந்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பிஸினஸ் நாவல்களின் ஸ்பெஷாலிட்டி, அவற்றை வாசிப்பதற்கு அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ போதும். அந்தக் கதையினூடே நாம் தெரிந்துகொள்ளும் விஷயங்கள், அந்தந்தச் சம்பவங்கள், பாடங்களுடன் மனத்தில் அழுந்தப் பதிந்துவிடும். அதனால்தான் பெரிய பேராசிரியர்கள், மேனேஜர்கள், சிஇஓக்கள்கூட, எதையாவது புதிதாகக் கற்றுக்கொள்வதென்றால், முதலில் பிஸினஸ் நாவல், அப்புறம்தான் உரைநடைப் புத்தகங்கள் என்று தேடுகிறார்கள். தமிழில் பிஸினஸ் நாவல்களை அறிமுகப்படுத்திய முதல் முயற்சி, ‘அடுத்த கட்டம்’. குங்குமம் வார இதழில் தொடர்கதையாக வெளியாகி எண்ணற்ற வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.  ஓவியர் ஸ்யாமின் புதுமையான படங்களுடன் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏராளமான உத்திகளைச் சுவையான கதைப்போக்கினுள் பொதித்துவைத்துச் சுவைக்கத் தருகிறது.

Note from BalHanuman

128 பக்கங்களில் தமிழின் முதல் பிசினஸ் நாவல்…

மேலோட்டமாகப் படித்தால் விறுவிறுப்பான கதை. கொஞ்சம் உள்ளே போனால் தங்கப் புதையல்!

மதி நிலையம் வெளியீடு. எண்பதே ரூபாய் விலையில்!

உங்களுக்கு மிக எளிய முறையில் கீழ்க்காணும் பல உத்திகளின் அறிமுகம்…

Six Thinking Hats

ஃபார்முலா டீ

சில சாப்பாட்டு மேஜை ரகசியங்கள்

பணி அழுத்தத்தைக் குறைக்க பத்துக் கட்டளைகள்

உலகப் புகழ் பெற்ற ‘Chicken Soup For the Soul’ வரிசைப் புத்தகங்களை அறிமுகம் செய்த ஜாக் கான்ஃபீல்ட் (Jack Canfield) சுட்டிக் காட்டும் ‘அடுத்த கட்ட’க் கற்பனையின் மூலம் நான்கு நன்மைகள்

வாடிக்கையாளர் சேவைக்கு மிக முக்கியமான அஞ்சு விஷயங்களோட தொகுப்பான – ரேடர் (RATER)

மேலாண்மை நிபுணர், சிந்தனையாளர், எழுத்தாளர் எட்வர்ட் டிபோனோ (Edward deBono) கண்டுபிடித்த (lus) M(inus) I(nteresting) எனும் பிரபலமான Decision Making முறை.

பிரபல மேலாண்மை நிபுணர் வில்லியம் ஆன்கென் (William Oncken) கண்டறிந்த ஆன்கென் ஏணி (Oncken Freedom Scale)

என். சொக்கன்

சொக்கனின் முன்னுரை…

எனது அலுவல் நிமித்தமாகவும், சொந்த ஆர்வம் காரணமாகவும் ஆங்கிலத்தில் பல்வேறு ‘பிசினஸ் நாவல்‘கள் படித்திருக்கிறேன். பல சிக்கலான விஷயங்களைக்கூட, சுவாரஸ்யமான கதை வடிவில் எல்லோருக்கும் புரியும்படி விவரிக்கும் இந்த நாவல்கள் மூலம் நான் அனுபவித்துக் கரைத்த நேரங்களும் நிறைய, கற்றுக்கொண்ட விஷயங்களும் நிறைய.

அனேகமாக, பூமிப்பந்தில் இருக்கும் எல்லா மேலாண்மை, சுயமுன்னேற்றம் சார்ந்த விஷயங்களையும் கதைகளாகச் சொல்லும் இதுபோன்ற நாவல்களைப் படிக்கும்போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி எழும். ‘தமிழில் இப்படி யாரும் முயற்சி செய்யவில்லையே. ஏன் ?’

இந்தக் காலக்கட்டத்தில்தான், குங்குமம் வார இதழுக்காக ஒரு தொடர் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. துணிந்து இந்த ‘பிசினஸ் நாவல்‘ யோசனையை முன்வைத்தேன். ‘தொடர்கதையாக எழுதும்போது, பல வாரங்கள் ஒரே விஷயத்தைச் சொன்னால் கொஞ்சம் போரடிக்கும். அதற்குப் பதிலாக ஒவ்வோர் அத்தியாயத்திலும் புதுசாக, வித்தியாசமாக எதையாவது கதையோடு கலந்து சொல்லலாம்’ என்றேன்.

பொதுவாக, தமிழ்ப் பத்திரிகைகளின் ஃபார்முலாவுக்கு பொருந்தாத இந்த ஐடியாவை ஏற்றுக்கொண்டு அருமையான களம் அமைத்துக் கொடுத்த குங்குமம் ஆசிரியர் குழுவினருக்கு என் நன்றி. குறிப்பாக, தி.முருகன், வள்ளிதாசன் இருவருக்கும், மிக வித்தியாசமான உத்திகளைக் கொண்டு ஓவியங்களை வரைந்து, இந்தத் தொடரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்ற ஓவியர் ஸ்யாமுக்கும், தமிழின் முதல் பிசினஸ் நாவலான இதனைப் புத்தகமாக வெளியிடும் மதி நிலையம் பதிப்பகத்தாருக்கும் நன்றிகள்.

வாய்ப்பிருந்தால் புத்தக வடிவத்தில் வாசித்து எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

என்றும் அன்புடன்,
என்.சொக்கன்,
பெங்களூரு.

என். சொக்கன்

4 thoughts on “அடுத்த கட்டம் – என்.சொக்கன்

 1. என். சொக்கன் January 30, 2014 at 4:12 AM Reply

  சுவையான அறிமுகத்துக்கு நன்றி இளமாருதியாரே 🙂

  • BaalHanuman January 30, 2014 at 4:38 PM Reply

   எண்பதே ரூபாயில் ஒரு தங்கப் புதையலைக் கொடுத்த உங்களுக்கு நான் அல்லவா நன்றி சொல்ல வேண்டும் ?

 2. bganesh55 January 30, 2014 at 6:34 AM Reply

  Shyam varaintha antha oviyangal mathi nilayam book il kidaikkuma anna?

  • BaalHanuman January 30, 2014 at 4:40 PM Reply

   உண்மைதான் கணேஷ். ஸ்யாமின் அந்த வித்தியாசமான ஓவியங்கள் மதி நிலையம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தில் கிடைக்காது தான் 😦

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s