5-மின்னல்-மழை-Motivation – ஜெயராமன் ரகுநாதன்


இதன் முந்தைய பகுதி…

Note from BalHanuman:

இந்தப் பதிவில் ரகு தனது மனைவி லதாவைப் பற்றி போகிற போக்கில் குறிப்பிட்டுச் செல்கிறார்…

Jayaraman Raghunathan

இந்த என் ஸ்கூல் தின மின்னல், மழையாக மாறினது என் காலேஜ் மற்றும் சிஏ வருடங்களில்.

எப்போது?

நினைத்தவுடனே நினைவில் நிரடுவது 1979.

அது நான் லதாவைச் சந்தித்த வருடம் என்பது உபரி தகவல்!

இரண்டு வீடு தள்ளி இருக்கும் சுரேஷ் வீட்டில் கல்கி வாங்குவார்கள். நாங்கள் குமுதம், ஆனந்தவிகடன்.

எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்வோம்.

ஆஃபீசிலிருந்து வரும்போதே வழியில் சுரேஷ், ரகு! உன்னைப்பத்தி சுஜாதா கல்கியில எழுதியிருக்கார்”

“என்னைப்பத்தியா?’

பரபரப்புடன் அப்போதே சுரேஷ் வீட்டுக்கு ஓடிப்போய் பார்த்தேன்.
.
கல்கியில் அப்போது ப்ரபலங்களிடம் அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத கடிதங்கள் பற்றி கடைசி பக்கத்தில் கேட்டு வாங்கிப்போட்டார்கள்.

அந்த முறை சுஜாதா.

“எந்தக் கடிதத்தை எனறு எழுதுவது?

“சின்ன கையெழுத்தில் “உடம்பைப்பார்த்துக்கொள்? வாராவாரம் எண்ணை தேய்த்துக்குளி” என்று எழுதும் அம்மாவின் கடிதத்தையா?’

“என்னுடைய “சசி காத்திருக்கிறாள்” படித்துவிட்டு வவுச்சரின் ஓரத்தில் “அடிக்கடி எழுதுங்கள்” என்று எழுதியிருந்த எஸ் ஏ பியின் கடிதத்தையா?”

கரையெல்லாம் செண்பகப்பூ

கரையெல்லாம் செண்பகப்பூ படித்துவிட்டு ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் எனக்கு எழுதிய மூன்று பக்க கடிதத்தையா?”

“பதிலையே எதிர்பாராமல் எனக்கு எழுதும் ரகுனாதன் கடிதங்களையா?”

பாருங்கள், என்னை, என் கடிதத்தை எந்த லிஸ்டில் சேர்த்திருக்கிறார் மனுஷன்?

இவரின் மீது எனக்கு வாழ்நாள் கடந்த அன்பு ஏற்படுவதில் ஆச்சரியமே இல்லைதானே?

இன்னொரு மழை….

 ரத்தம் ஒரே நிறம்

சில குயுக்தி மனிதர்களால் அவரின் அபார சரித்திரக்கதை கறுப்பு, வெளுப்பு, சிவப்பு நின்று போயிருந்த நேரம். ஒரு ஆடிட்டுக்காக பெங்களூர் போன நான் அவரின் வீட்டில் இருந்தேன். வேறு சிலரும் அன்று வந்து பேசிக்கொண்டிருந்தனர்.

மிக ப்ரமாதமாக வந்திருக்க வேண்டிய ஒரு சரித்திரக்கதை அகாலமாக முடிவுற்றதில் வெறுத்துப்போய், பேச்சு வாக்கில் நான், “ நமக்கெல்லாம் உறையூரை நோக்கிப் புரவியைச் செலுத்தினார் பெரும்பிடுகு முத்தரையர்” போன்ற கதைகளே சாஸ்வதம்” என்று சொன்னதை அங்கு வந்திருந்த சாவி நிருபர் கேட்டு, அடுத்த இதழ் சாவியில் என்னை மேற்கோள் காட்டி எழுதியிருந்தார்.

ஆங்கிலேய சரித்திரம் அதிகம் தமிழில் எழுதப்படாத களம் என்கிற நினைப்பில் சொன்ன கருத்து அது. அதே சமயத்தில் குங்குமத்தில் சாண்டில்யன் எழுதும் விலை ராணி என்றொரு சரித்திரக்கதை வெளியாகிக்கொண்டிருந்தது. அதை நான் படிக்கவில்லை. ஆனால் அதில் வரும் ஒரு காரக்டர் பெரும்பிடுகு முத்தரையர்!

என்னுடைய வார்த்தைகளினால் கோவப்பட்ட சாண்டில்யன் அடுத்த இதழ் சாவியில் சுஜாதாவை வம்புக்கு இழுத்தது, அதற்க்கு சுஜாதா பதிலடி கொடுத்ததும் தனி சுவாரஸ்யம்!

என்னுடைய unintentional வார்த்தைகளினால் சுஜாதாவுக்கு, சாண்டில்யனோடு அனாவஸ்ய மனவேறுபாடு வந்துவிட்டதே என்று மன்னிப்பு கேட்டேன்.

“விடுய்யா! உம்மேல தப்பேயில்ல” என்று தள்ளிவிட்டார்.

அடிமையின் காதல்  |  adimain kathal  |  

(இந்த ஆங்கிலேயப் பின்னணியில் ரா கி ரங்கராஜன் எழுதிய ”அடிமையின் காதல்” ஒரு அபார கதை )

அந்த இதழ் கல்கியும் சாவியும் கண்டெடுத்து எனக்குக்கொடுத்தால் சுஜாதா சொன்னது போலவே, என் ராஜ்ஜியத்தில் பாதியும் என் பெண்ணையும் கொடுப்பேன்!

தொடரும்…

கரையெல்லாம் செண்பகப்பூ

கரையெல்லாம் செண்பகப்பூ’ ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்னையிலிருந்து திருநிலம் என்கிற கிராமத்துக்கு வருகிறான் கல்யாணராமன்.அங்கு ஒரு பழைய ஜமீன் மாளிகையில் தங்குகிறான். கிராமத்துப் பெண் வெள்ளியை நேசிக்கிறான். ஆனால் வள்ளி விரும்புவது அவள் மாமன் மருதமுத்துவை.அந்த மருதமுத்துவை சலனப்படுத்த வந்து சேருகிறாள் நகரத்து நாகரிகப் பெண் சினேகலதா. ஜமீன் வம்சத்து வாரிசாக வருபவள் கல்யாணராமனுடன் அதே ஜமீன் மாளிகையில் தங்குகிறாள். அவள் வந்த பிறகு ஜமீன் மாளிகையைச் சுற்றி நடக்கும் சில அமானுஷ்ய, மர்ம விவகாரங்கள் கல்யாணராமனை பயமுறுத்துகின்றன. உச்சகட்டமாக ஒரு கொலையும் நடைபெறுகிறது. கிராமத்து சூழ்நிலையே தடம் புரண்டு சிக்கலாகிறது. விறுவிறுப்பான இந்தக் கிராமத்து திரில்லர் சினிமாவாகவும் எடுக்கப்பட்டது.
Advertisements

One thought on “5-மின்னல்-மழை-Motivation – ஜெயராமன் ரகுநாதன்

  1. R. Jagannathan January 28, 2014 at 11:05 AM Reply

    //இவரின் மீது எனக்கு வாழ்நாள் கடந்த அன்பு ஏற்படுவதில் ஆச்சரியமே இல்லைதானே?// Absolutely no Aachcharyam! Koduththu vaiththavar niingal!

    eppadiyo rendu iyengargalai motha vittu vittirkal. vivaramaaga antha mothalai ezutha mudiyumaa?

    -R. J.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s