சுஜாதாவின் சிவந்த கைகள் / கலைந்த பொய்கள் — சுரேஷ் கண்ணன்


சிவந்த கைகள்Photoகலைந்த பொய்கள்

நினைவிலிருந்து எழுதுகிறேன். சுஜாதாவின் ‘சிவந்த கைகள்’ என்கிற நாவலின் sequel-தான் ‘கலைந்த பொய்கள்’.

முதல் பகுதியில் ஒரு பாத்திரம் அறிமுகப்படுத்தப்படும்.

சில பல கனவுகளுடன் புதிய அலுவலகத்தில் நுழையும் ஒருவன். அங்கிருக்கும் பழமையான சூழல் உள்ளூற அவனை வெறுப்புறச் செய்யும். ஆனால் மிக மாறுதலாக அவனுடைய immediate boss ஓர் உற்சாக இளம் புயல் போல் இருப்பான். நவீனயுலகின் அடையாளம். அறவுணர்ச்சி பற்றிய பிரக்ஞையெல்லாம் அவனுக்கு கிடையாது. வெற்றி என்ற ஒரு விஷயமே அவனுடைய பிரதான குறிக்கோள். அதற்காக எது தடையாக இருந்தாலும் அதை உடைத்துக் கொண்டு போய்க் கொண்டேயிருப்பான். அவனும் பழமையை வெறுப்பவன். அந்த அலுவலகத்தின் பழமையை கிண்டலடித்துக் கொண்டேயிருப்பான்.

புதிதாக வந்தவனுக்கு அவன் செய்யும் அட்டகாசமான கெட்ட உபதேசத்தால் புதியவனும் அந்த டிராகுலாவால் கடிக்கப்பட்டவனைப் போல் மாறிவிடுவான். ஏறக்குறைய அவனுடைய மனோநிலையையே உபதேசம் செய்வதால் அவனை மிகவும் பிடித்து விடும். அவனையே தன்னுடைய ரோல் மாடலாக நினைக்கத் துவங்குவான். அவனையே தாண்டிச் செல்வதையே தன் கனவாக மாற்றிக் கொள்வான். அதற்காக நாவலின் இறுதியில் ஒரு கொலையையும் செய்யத் துணிவான்.

சுஜாதாவிடமுள்ள ஒரு சிறந்த விஷயம் என்னவெனில் பாத்திரங்களின் மனோநிலையை அங்குள்ள சூழலை மிக நுட்பமாகவும் வலுவாகவும் துல்லியமாகவும் வாசகனுக்கு கடத்தி விடுவார். இதில் அவர் ஒரு மாஸ்டர். புதிதாக சேர்பவனின் அப்பாவித்தனமான குறுகுறுப்பையும் நேர்மை, மண்ணாங்கட்டி என்று எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு தன்னுடைய கனவை அடைய விழையும் அவனுடைய ஆழ்மன ஆவலையும் அதை பெரிதான ஜ்வாலையாக மாறுமளவிற்கு உபதேசம் செய்பவன் ஊதிப் பெருக்குவதையும் அவனுடைய வித்தியாசமான ஆளுமையையும் அற்புதமாக சில பக்கங்களிலேயே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்.

வெகுஜனத்தன்மையைக் கொண்ட நாவல்கள்தான் என்றாலும் அதில் உள்ள, பிரமிப்பை ஏற்படுத்தும் craft-க்காக எழுத விரும்புபவர்கள் அனைவருமே சுஜாதாவை வாசிப்பது நல்லது. அதில் இந்த இரண்டு நாவல்களும் அடங்கும்.

தெவச தினங்கள் போன்று பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் நினைவு கூராமல் அவர்களுடைய சாதனைகளின் மூலம், ஆழ்மனங்களில் புதைந்திருக்கும் இந்த ஆளுமைகளை அவ்வப்போது இம்மாதிரி நினைவுகூர்வதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

***

எதற்காக இப்போது இது ஞாபகம் வந்தது என்றால், … The Wolf of Wall Street.… -ன் துவக்கப்பகுதியில் வரும் இரு பாத்திரங்களைக் காணும் போது, தவிர்க்கவேயியலாமல் இந்த நாவல்களும் அச்சு அசலாக அந்த திரைப்படத்திற்கு பொருந்திப் போகும் பாத்திரங்களும் நினைவிற்கு வந்தன.

ஸ்கார்ஸஸி திரையில் சாதித்திருப்பதை எழுத்திலேயே சில வருடங்களுக்கு முன்பேயே சாதித்திருக்கிறார் சுஜாதா எனும் மாஸ்டர்.

சிவந்த கைகள்கலைந்த பொய்கள்

சுஜாதாவின் மாத நாவல் விளையாட்டுகளில் “சிவந்த கைகள்” ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் காடர் போஸ்டில் வேலைக்கு நுழையும் இளைஞனொருவன் எளிதில் அடைய முடியாத அதன் உச்சபட்ச உயர் பதவி நோக்கி அதிர்ஷ்டவசமாக முன்னேறுகிறான். துரதிருஷ்டவசமாக அவன் மறைத்து வைத்திருக்கும் ஒரு சின்னக் களங்கம் அவனது லட்சியத்துக்கு முட்டுக்கட்டையாக வர நேரும்போது திடுக்கென அவன் தேர்ந்தெடுக்கும் வழிமுறை, செயல்பாடு, பிராயச்சித்தம் என சுனாமி வேக சுழல் கதை.

Advertisements

3 thoughts on “சுஜாதாவின் சிவந்த கைகள் / கலைந்த பொய்கள் — சுரேஷ் கண்ணன்

  1. R. Jagannathan January 28, 2014 at 10:56 AM Reply

    Ahaa. I have missed so many of Sujatha novels / stories. The Sujatha fans’ – as Mr. Suresh Krishnan – deserve a big ‘Thank you’ for their sharing their feelings on reading Sujatha and expressing them beautifully. Thanks, of course, are also due to Balhanuman for publishing these articles here. – R. J.

  2. R. Jagannathan January 28, 2014 at 10:57 AM Reply

    Sorry for the error Mr. Suresh Kannan! (By mistke I typed Suresh Krishnan.) – R. J.

  3. gopinath February 1, 2014 at 9:17 AM Reply

    மிக அருமையான கதைகள் இரண்டும்! 1980 அல்லது 1981-ல் வந்திருக்கலாம். ஆனால் அதில் வரும் ஆரம்ப கட்ட வர்ணனை மற்றும் கேரக்டர் வசனங்களை கொஞ்சம்கூட விவஸ்தை இல்லாமல் இந்துமதி என்ற ஒர் பெண் எழுத்தாளர் தன் வேறொரு கதையில் கள்ளக்காப்பியடித்தார். ஆனால் நம் வாத்யார் அதனை பொருட்படுத்தவில்லை!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s