4-மின்னல்-மழை-Motivation – ஜெயராமன் ரகுநாதன்


இதன் முந்தைய பகுதி…

sujatha33

ஒரு அரேபிய இரவையும் ரங்கராஜன் என்னும் அந்தக் கதை எழுதிய கிராதகனையும் மறந்து போனேன் என்று சொன்னேனா…

கிட்டதட்ட பத்து நாட்களுக்கு அப்புறம் ஸ்கூலிலிருந்து வந்தவுடனேயே அம்மா, வாய் கொள்ளா சிரிப்புடன், “இந்தா உனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு”

பிரிக்காமல் தான் கொடுத்தாள்.

பச்சையும் லேசுபாசான நீலமும் கலந்த பழுப்பு என்னும் கலரில் அந்தக்காலத்திய இன்லண்ட் லெட்டர். மேலே ஜெ ரகுனாதன் என்று கோழி கிறுக்கலில் நான் அதுவரை அறிந்திராத கையெழுத்து. அதே க்ஷணத்தில் ஃப்ரம்  அட்ரஸ்ஸைப் பார்க்கத் தோணவில்லை எனக்கு!

“அன்புள்ள ரகுனாதனுக்கு

உங்களுக்கு (மரியாதையைக் கவனிக்கவும்!) என்னுடைய கதை பிடித்திருந்தது பற்றி சந்தோஷம். நன்றாகப்படியுங்கள்.

இப்படிக்கு
ரங்கராஜன்

டி 9, பி ஈ எல் காலனி, ஜலஹள்ளி, பங்களுர் – 13

ஒரு குதி குதித்திருக்கிறேன் பாருங்கள் அன்றைக்கு. உப்புமா டிஃபன் கேள்வி கேட்காமல் உள்ளே சென்றது அம்மாவுக்கே அதிசயம்.

”தேவலையே! இனிமே ரகுக்கு லெட்டர் வர நாள்ல எல்லாம் உப்புமாவே பண்ணிடலாம் போல இருக்கே”

சாயங்கால கிரிக்கெட் விளையாடப்போகும்போது எல்லோரிடமும் காட்டினேன்.

“ஓ அப்டியா” என்பதைத்தவிர வேறு பெரிய ரியாக்ஷன் ஒன்றும் இல்லாதது ஏமாற்றமாக இருந்தாலும், நானும் தமிழ் இலக்கிய உலகில் ஒரு நிகரில்லாத இடம் பிடித்துவிட்ட அந்த தினம் இன்று வரை என் சந்தோஷ தினங்களின் லிஸ்டில் இரண்டாம் இடத்திலேயே இருக்கிறது.

இப்போதெல்லாம் வாராவாரம் என்னுடைய டிமாண்ட் பதினைந்து பைசாவாக உயர ஒரே காரணம் இன்லண்ட் லெட்டரின் விலை அதுதான்!

அடுத்த இரண்டு வருடங்களில் வெளி வந்த ஓரு நாள், ராகினி என் வசமாக, சோம்னா, போன்ற கதைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கவே இல்லை. ஒவ்வொரு கதைக்கும் ஒரு லெட்டர். என்னுடைய பாடி க்ளாக் பத்து நாட்களுக்கு ஒரு முறை பதில் எதிர்பார்த்தாலும், அப்படியெல்லாம் அவர் என் எல்லா லெட்டருக்கும் பதில் போட்டது இல்லை.

wcv_1

முக்கியமாக 1973-களில் அவர் எழுதிய ராகவானந்தம் கதைகள் – வாட்டர் கார் விவகாரம், சுல்தான் நீ எங்கிருக்கிறாய், அப்புறம் முன்பே எழுதிய 1000 வருடங்கள் உயிருடன் இருப்பது எப்படி போன்ற கதைகள் அவரின் அபார நகைச்சுவைக்கு உதாரணம். எழுத்து நடை..கேட்கவே வேண்டாம். மனுஷன் ரகளை பண்ணினார்.

“ தேவையே இல்லை, நாந்தானே செந்தில்நாதப்புலவர்”

இதைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு இந்த இடத்தில் உதைத்தது.

“டாக்டர்! கம் அகைன்! என் ஞாபகசக்தியில் பழுது இல்லையென்றால் சுமார் 16 வரிகளுக்கு முன்னால்`செந்தில்நாதப்புலவர் என்பவர் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று சொன்னீர்கள் என்று நினைக்கிறேன்….”

“மாலதி! அப்பா! அந்த பட்சி போய்விட்டாரா” என்று கேட்டாள்.

”நீயும் இந்த கோஷ்டியில் சேருகிறாயா? போன 24 மணி நேரத்தில் அவர் வாங்கிவரச் சொன்ன வஸ்துக்களைக் கேள்:

ஆவாரங்குச்சி 108
இளநீர் 2
நாமக்கட்டி 2
திரிபலை
துமிட்டிக்காய்
ரவீந்த்ரசூர்ணம்

மாலதி! நீயும் வாயேன்

நான் வரலை! நேத்து பாத்ததே ராத்திரியெல்லாம் கெட்ட கனா”

“என் நல்லூழ் ராகவானந்தத்தை சந்தித்தது

இல்லை, இது மனித சமுதாயத்தின் நல்..நல்..” என்றார். டாக்டர்.

நல்லூழ் என்றேன்.”

இந்தக்கதை 1969 என்றால் நம்புவது கஷ்டம். அவரால் டைமை மீறி யோசித்து எழுத முடிந்திருக்கிறது.

ஏழெட்டு கடிதங்களுக்கு ஒரு பதில் வரும். வாத்சல்யத்தோடு எழுதுவார். நிச்சயம், நன்றாகப் படிப்பது பற்றி ஒரு வரி இருக்கும்.

ஒரு சமயம் நான் எழுதின கடிதத்தில்” நான் ஒரு கதை எழுதி அனுப்பினால் திருத்தித் தருவீர்களா என்று கேட்டிருந்தேன்.

பதிலே இல்லை.

நானும் அப்போது எழுதவில்லை. தமிழ் கூறும் நல்லுலகம் தப்பித்தது!

இந்த என் ஸ்கூல் தின மின்னல், மழையாக மாறினது என் காலேஜ் மற்றும் சிஏ வருடங்களில்.

தொடரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s