2-மின்னல்-மழை-Motivation – ஜெயராமன் ரகுநாதன்


இதன் முந்தைய பகுதி…

Note from BalHanuman:

இந்தப் பதிவில் நண்பர்  JR குறிப்பிட்டுள்ள ‘ஒரு அரேபிய இரவு’ சிறுகதை விசா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள ‘சில வித்தியாசங்கள்‘ சிறுகதைத் தொகுப்பில் இடம் பிடித்துள்ளது. இந்தப் புத்தகத்தில் இருக்கும் பதினாறு கதைகளும் சுஜாதா சுமார் மூன்று வருடங்களில் குமுதம், தினமணி கதிர், ஆனந்த விகடன், தீபம் பத்திரிகைகளில் எழுதியவை.

“என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?

photo (4)

ஆம், அது ஒரு புதன் கிழமை. அப்போதெல்லாம் புதன் கிழமைதான் தினமணி கதிர் வரும். சாவிதான் எடிட்டர். அது பார்ப்பதற்கு இப்போதைய துக்ளக் போல சைசில் பெரிசாக இருக்கும், ஆனால் ஒல்லிப்பத்திரிகை. ந்யூஸ்ப்ரிண்ட் கோட்டாவில் அச்சடிக்கிறார்கள் என்று விஷயமறிந்தவர்கள் சொல்லிக்கேட்டிருக்கிறேன்.

நான் அப்போது ஒன்பதாவதுதான் படித்துக்கொண்டிருந்தேன், இந்த விஷயமெல்லாம் பின்னால்தான் அறிந்துகொண்டேன்.

ஜோக், சிறுகதை என்று படித்துக்கொண்டிருந்தவன் கண்ணில் பட்டது அந்த வினோத படம்.

ஒரு ஹெரால்ட் கார், கடைத்தெரு, மக்கள் நடமாட்டம், ஸ்டைலாக உடையணிந்த இளைஞன் என்கிற ரீதியில் கோட்டுச்சித்திரம்.கவர்ச்சியான ஒரு பெண்ணின் படம் கூட!

சட்டென்று எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு அரேபிய இரவு” என்ற தலைப்பில் இப்படி ஆரம்பித்து இருந்த சிறுகதை…….

“அவன் என்னைத்தான் பின் தொடர்ந்து கொண்டிருந்தான். பஸ் ஏறி, பஸ் இறங்கி, மாறின பிற்பாடும் அதே தூரத்தில், அதே மீசையுடன் என்னைப்பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்”.

“உஸ்! அப்பாடா! என்று நாகராஜ சர்மா ஈஸிசேரில் உட்கார்ந்து கொண்டார். வாசலில் “சார்! போஸ்ட்! குரல் கேட்டது” என்றேல்லாம்(வாத்யாரே சொன்னது போல) கதைகள் தொடங்கின அந்தக்காலத்தில் மேற்படி தொடக்கம் என்னை என்ன, பலரையும் ஈர்த்தது என்பது சரித்திரம்!

மேலும் கதை சென்ற விதம் தமிழில் அதுவரை இல்லவே இல்லாதது.

“….மறுபடி மூலைக்கு வந்து நின்றேன். சிகரெட்டை வாயில் ஒட்ட வைத்துக்கொண்டேன் (ராத்மன்ஸ் கிங் சைஸ்)…

….லைட்டரை ஏற்றினான். ஜோதியைக்கவர்ந்து கொண்டு…..

…எதற்க்காக என்னைத்தொடருகிறாய்? பொசுக்கி விடுவேன், துப்பாக்கி வைத்திருக்கிறேன், பெரெட்டா லைஸென்ஸுடன்….

இதெல்லாம் அப்போதைய தமிழில் கிடையவே கிடையாது.

வீட்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்தவன் கண் கொட்டாமல் கதை முழுவதும் படித்து முடித்தேன்.

அதிசயித்தேன் என்றால் மிகையாகாது, ச்சே! வாத்யார் பற்றி எழுதும்போது மிகை அது இதுவென்றால் அவரின் ஆவி கூட என்னை மன்னிக்காது!

1971-ல் எழுதின கதை இது. உங்களில் பாதிப்பேர் பிறந்துகூட இருக்க மாட்டீர்கள்.

தொடரும்…

முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய சிறுகதைகளை இப்போது மறுபடி நோக்கும்போது கதையின் கவலைகள் எதையும் திருத்தத் தேவையில்லை என்பது திருப்தி அளிக்கிறது. முப்பது வருடங்களில் விலைவாசி தான் உயர்ந்திருக்கிறது முப்பது மடங்காக.

– சுஜாதா (16, அக்டோபர் 2001 – புதிய விசா பதிப்பின் முன்னுரை)

Advertisements

3 thoughts on “2-மின்னல்-மழை-Motivation – ஜெயராமன் ரகுநாதன்

  1. ramakrishnan6002 January 24, 2014 at 1:19 AM Reply

    Reblogged this on Gr8fullsoul.

  2. ஏறத்தாழ அதே பீரியட் ல கதிர் வாசகன் நானும் ..8th STD என்று நினைவு .சுஜாதா நில் கவனி தாக்குல ஆரம்பிச்சது பைத்தியம் நீங்க சொன்ன அரேபிய கதை நினைவில்லை.மத்தபடி வானமென்னும்வீதியிலே மாயா(அத்தியாயம் 1.ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவள் இறந்திருந்தாள் ) ரோஜா சொர்க்கத்தீவு….சான்ஸே இல்ல சாவி விலகினதும் சுவாரஸ்யமும் போச்சே …சுஜாதா வாசகர்கள் சந்திப்பு நினைவிருக்கா?இதே பாணில புஷ்பா தங்கதுரை வேறு வந்து அது வாசகர்களின் பொற்காலம்

  3. Siva Krishnamoorthy January 30, 2014 at 1:50 AM Reply

    “IX B செக்ஷன்” exciting! நீங்க சொல்லும் இந்த கால கட்டங்களில் கணையாழியின் கடைசிப்பக்கங்களில் வேறு “ரங்கராஜனாக” பின்னிக்கொண்டிருந்தாரே, அதையும் வாசித்தீர்களா? துப்பறியும் கதைகள் போலவே அந்த பகுதியும் ஒரு மாணவ மனதிற்கு பிடித்திருந்ததா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s