11-தோசையம்மா தோசை


கர்நாடக ருசி! - Karnataka Rusi!

அவரைக்காயை வைத்து ஏகப்பட்ட உணவுகளைச் சமைக்கிறார்கள் கர்நாடக மக்கள். பெங்களூர் பசவனக்குடியில் ‘அவரை மேளா’ என்று தனியாக ஒரு திருவிழாவையே நடத்துகிறார்கள். தைமாதம் முதல் சனிக்கிழமை அன்று ராம்நகர் பகுதி அவரைச் சாகுபடியாளர்கள் அனைவரும் அறுவடை செய்த காய்களோடு பசவனக்குடியில் உள்ள வெங்கட்ரமணர், ஆஞ்சநேயர் கோவில்களில் சங்கமிக்கிறார்கள். அவரையைச் சமைத்து இறைவனுக்குப் படையலிட்டு ‘அவரை மேளா’வைத் தொடங்குகிறார்கள். இந்த மேளா பத்து நாட்கள் நடைபெறும். அவரையை மூலமாக வைத்து லட்டு, பாதுஷா, மில்க்கேக், சோன்பப்டி, மைசூர்பாகு, பெங்காலி ஸ்வீட் என முப்பதுக்கும் மேற்பட்ட பதார்த்தங்களைச் செய்து அசத்துகிறார்கள். இந்த மேளா வருஷத்துக்குப் பத்து நாள் என்றால், பெங்களூர் வி.வி.சஜ்ஜன்ராவ் சர்க்குலர் சாலையில் உள்ள வாசவி காண்டினெண்டல் இனிப்பகத்தில் ஆண்டு முழுவதும் அவரை மேளா தான். இதன் உரிமையாளர் கீதா, அவரையில் விதவிதப் பதார்த்தங்களைச் சமைத்து லிம்கா சாதனை செய்தவர்.

அவரைக்காய் தோசை ராம்நகரின் ஸ்பெஷல் உணவு. அங்குள்ள எல்லா உணவகங்களிலும் கிடைக்கிறது. நம்மூர் பருப்பு அடையை ஒத்திருக்கும் இந்தத் தோசை, ஈர்க்கும் சுவை கொண்டது.

ராம்நகர் பகுதியில் மிளகாய்ச் சட்னி, புதினாச் சட்னி. அவரைக் குருமா என மூன்று சைடிஷ்கள் தருகிறார்கள். அவரையைப் பொரியலும், துவட்டுலுமாகச் சாப்பிட்டுப் பழகிய நமக்கு அதையே தோசையில் வைத்துச் சாப்பிடுவது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.

கர்நாடக ருசி! - Karnataka Rusi!

கர்நாடகத்தின் எல்லா இடங்களிலும் ராகிக்களி கிடைக்கிறது. அகன்ற தட்டில், பெரிய களி உருண்டைகளை உருட்டி வைத்து பஸ்ஸாரு என்ற கீரைச்சாறை
ஊற்றித் தருகிறார்கள். அக்கி ரொட்டிக்கும், கேப்பை ரொட்டிக்கும் கியூவில் நிற்கிறார்கள்.
பாண்டவபுரா கோதி அல்வா, சாம்ராஜ்நகர் போண்டா சூப், ஸ்ரீரங்கப்பட்டினம் அக்கிரொட்டி, பெல்காம் குந்தா, மத்தூர் வடை, தாவணகெரே
பென்னாதோசை, மைசூர் பாகு, மங்களூர் கப் இட்லி, கார்வார் பலா இலை இட்லி, பிடதி தட்டே இட்லி, தார்வார் பேடா என கர்நாடகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பாரம்பரிய உணவு உண்டு.
இந்த நூல் வேண்டுவோர், உடனே தொடர்பு கொள்க.
மின்னஞ்சல்:    blackholemedia@gmail.com      செல்பேசி:   9600123146,  
விலை ரூ-75/-
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s