1-மின்னல்-மழை-Motivation (புதிய மினி தொடர்) – ஜெயராமன் ரகுநாதன்


”என்னடா புது ஜல்லி” என்று கேட்பவரா நீங்கள்?

எதிரே பாராமல் என்னை வாத்யார் தொடர்பு கொண்டதை மின்னல், எனவும், அதற்கப்புறமான தொடர்புகளை என் காலேஜ் தினங்கள் வரை அனுபவித்து சிலிர்த்த மழை எனவும், அதன் பின்னால் என்னை பல சமயங்களில் ஊக்குவித்தும், வழி நடத்தியும் செய்த அனுபவங்களை மோடிவேஷன் எனவும் தலைப்பாய்க்கொடுத்ததை நீங்கள் வரவேற்பீர்கள் என்று நம்பி ஆரம்பிக்கிறேன்.

அது ஒரு புதன் கிழமை.

தொடரும்…

Advertisements

6 thoughts on “1-மின்னல்-மழை-Motivation (புதிய மினி தொடர்) – ஜெயராமன் ரகுநாதன்

 1. Praveen January 23, 2014 at 9:56 AM Reply

  May be you can try your own style like Sujatha Desikan, but never ever bring back our Vathiyar’s Pasanga Ganesh & Vasanth please.

 2. RAJAGOPAL January 23, 2014 at 11:06 AM Reply

  சீக்கிரம் ஆரம்பியுங்கள் சார்.

 3. Vijayaraghavan Krishnan January 29, 2014 at 2:20 AM Reply

  ஸ்ரீரங்கம் வந்த போது நீங்கள் தாங்கள் பள்ளிக்கூடத்தில் படித்த போதே அவருக்கு கடிதம் எழுதி பின்பு .. பல முறை சந்தித்து .. வெறும் ரசிகனாக இல்லாமல் ஒரு குரு சிஷ்ய பாவத்தை உண்டாகிகொண்டு இருந்தாதை சொல்லி இருக்கிறீர்கள் ..

  சுஜாதா போன்ற நூற்றண்டின் புருஷர்கள் ஆயுள் பரியந்த தொடர்பு .. (சுஜாதா அவர்களின் விஞ்ஞான சோதனைக்கு மாறாக) ஜென்மாந்தர .. பல பிறவி தோறும் உண்டான பந்தம் என்றே அன்றே நினைத்தேன் ..

  எட்டாம் வகுப்பு (சரி என்று நினைக்கிறேன் ) படிப்பதில் இருந்து அவர் மறையும் சில நாள் வரை ஒரு தொடர்பு .. தெய்வம் உண்டாக்கிய பிணைப்பே !!!

 4. Siva Krishnamoorthy January 29, 2014 at 2:23 AM Reply

  சுதாகர் உங்களை, சுஜாதா எழுத்துகளை கரைத்துக்குடித்தவர் என்று கொஞ்ச நாட்களுக்கு முன் பேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்துவிட்டு ஒரு குட்டி க்விஸ் கூட போடலாம் என்று நினைத்திருந்தேன்

  (“உங்கள் தந்தி சற்று முந்திதான் வந்தது” என்றார் தற்செயலான எதுகையில்” – எந்த படைப்பிலிருந்து, இது?!)

  முன்னர் ஒருமுறை பாலஹனுமான் அவர்களிடம் இப்படி விளையாடிக்கொண்டிருந்தேன்!

  உண்மையான வாசகர்கள் எழுத்தாளனை தொடர்பு கொள்ளமாட்டார்கள் என்று எந்த சந்தர்ப்பத்திலோ சொன்னதை ஏதோ மாதிரி அர்த்தம் செய்து கொண்டதாலோ என்னவோ கல்லூரி காலங்களில் இருந்து ஸ்ரீரங்கத்தாழ்வாரைத் தொடர்ந்திருந்தாலும் அவரைத் தொடர்பு கொள்ளவே இல்லை.

  ஒரே ஒரு முறை மெரினாவில் எனது பொடியனை, அப்போது உண்மையிலேயே பொடியன்தான் – மூன்று வயதிருக்கும் – முன்னே விட்டு பின்னால் போய் கொண்டிருந்தப்போது சட்டென எதிரில் நடந்து வந்துகொண்டிருந்தார். தளர்வான நடை. பொடியனைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே கடந்து போய்விட்டார். மெதுவாகத்தான் கடந்தார். எனக்கு ஒன்றுமே சொல்ல தோன்றவில்லை. ஏதாவது போய் பேசலாம் என்றால் கண்டிப்பாய் உளறுவேன். பின் வரும் வார “கற்றதும் பெற்றதுமில்” நக்கலாக ஏதாவது எழுதிவிடுவாரோ என்று பயம், கூச்சம்! மனைவி அதோதான் போய்க்கொண்டிருக்கிறார் போய் பேசுங்களேன் என்றார். இருந்தும் இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்றுவிட்டேன்.

  பின் சர்.சி.பி.ராமசாமி சாலையில் இருந்த அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது நண்பர்கள் இதோ பக்கத்திலிருக்கும் ஓட்டலில் காபி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார் என்றெல்லாம் சொல்வார்கள், கூச்சம் காரணமாக தள்ளி போட்டுவிடுவேன்.

  …ஆனால் அப்புறம் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை…வாழ்க்கையில் பெரிய பாடம் -தள்ளிப் போடக்கூடாது. போட்டால் பின்னால் வருமென நிச்சயமில்லை…

  பின்னர் அவரை ஏதாவது சந்தித்தவர்களை பற்றி, சந்திப்புகளை பற்றிபொறாமை கலந்து படித்துக்கொண்டிருப்பேன்.

  உங்கள் அனுபவங்களை சாதாரண மொழியில், நடையிலேயே எழுதுங்கள்,

  சப்ஜெக்ட்டிற்கு இருக்கும் அழகே போதும்…அது அசத்தும்!

 5. Jayaraman Raghunathan January 29, 2014 at 2:25 AM Reply

  மிக நன்றாகச்சொன்னீர்கள். ஆனால் வாத்யார் சகஜமாக சிரிப்பார். அதிகம் பேச மாட்டார். ஆனால் ஒரு சின்ன மரியாதைக்குறைவு கூட ஏற்படுத்தும் வண்ணம் அவர் யாரிடமும் நடந்து நான் பார்த்தது இல்லை. நன்கு பழகினால்தான் கொஞ்சமே கொஞ்சம் உரிமையோடு பேசுவார். எனக்குத்தெரிந்து அவர் “என்னையா” என்றால் நீங்கள் அவருடன் ஓரளவுக்கு நெருங்கி விட்டீர்கள் என்றுதான் அர்த்தம்!!

 6. Mahalingam Natarajan January 29, 2014 at 2:28 AM Reply

  “உண்மையான வாசகர்கள் எழுத்தாளனை தொடர்பு கொள்ளமாட்டார்கள்” என்று எந்த சந்தர்ப்பத்திலோ சொன்னதை ஏதோ மாதிரி அர்த்தம் செய்து கொண்டதாலோ என்னவோ கல்லூரி காலங்களில் இருந்து ஸ்ரீரங்கத்தாழ்வாரைத் தொடர்ந்திருந்தாலும் அவரைத் தொடர்பு கொள்ளவே இல்லை.

  சத்தியமாக எனக்கும் இது நடந்தது. என்ன மனைவி கொஞ்சம் காட்டமாக பேசினாள் – எப்ப பாரு அவரைப் பத்தி பேசிண்டு இருந்துகிடடுவிடடு – எதிரில் வரும்போது பேசாமல் ஒளிஞ்சுக்கிறீங்க – என்று…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s