8-தோசையம்மா தோசை – பா.ராகவன்


முதலில் கிருஷ்ணர் கோயில் பிரசாதமாகத்தான் இது வழங்கப்பட்டது. உடுப்பியில் கிருஷ்ணர் கோயில் எழுப்பப்பட்டது கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு என்பதால் தோசையின் தோற்றமும் அப்போதுதான். [சங்க இலக்கியத்திலெல்லாம் தோசை குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். அதெல்லாம் அநேகமாக புருடா. யாராவது உரிய பாடலை எடுத்துக் கொடுத்தால் மட்டுமே நம்புங்கள்.] கோகுலத்தில் வெண்ணை தின்று வளர்ந்த கிருஷ்ணர் உடுப்பிக்கு வந்தபிறகு தோசை சாப்பிட்டு வாழ ஆரம்பித்தார்.

மாவு என்பது ஏற்கனவே இருந்த வஸ்து. இட்லிக்கு அரைத்தது. சமையல் முறையைச் சற்றே மாற்றி வெகு எளிதாக உலகின் முதல் தோசையை உருவாக்கிப் பார்த்து விட்டார்கள், உடுப்பி கோயில் மடைப்பள்ளி வித்தகர்கள். ஆனால் தொடக்க காலத்தில் தோசையை எண்ணெய் விட்டு வார்த்ததில்லை. வெண்ணை அல்லது நெய்தான்.

AzhagarDosai2

தவிரவும் இன்றைய இடை மெலிந்த தோசைகள் ஆதியில் கிடையாது. தோசை என்றால் நல்ல தடிமனாக, திக்காக இருக்கும். ஒரே ஒரே தோசை சாப்பிட்டு விட்டு அரை நாள் ஓட்டி விடலாம். இன்றைக்கும் கோயில் தோசைகள் அரை விரற்கடை அளவுக்கு கனமாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அது பாரம்பரியம். ஆதியில் தோசையில் மிளகு மற்றும் சீரக சேர்மானம் நிறைய இருந்திருக்கிறது. காலப்போக்கில் தோசைக்கு மிளகு சீரகம் தேவையில்லை என்று உடுப்பியிலேயே எடிட் செய்து விட்டார்கள். ஆனால் கனத்தில் மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

உணவின் வரலாறு

Advertisements

2 thoughts on “8-தோசையம்மா தோசை – பா.ராகவன்

  1. ramakrishnan6002 January 18, 2014 at 2:14 AM Reply

    Reblogged this on Gr8fullsoul.

  2. rjagan49 Jagannathan January 18, 2014 at 11:56 AM Reply

    Srirangaththil ippothu Vaikunta Ekadasi special ‘Sambaara Dosai’ (Sambar dosai alla!) oru centimeter thick!. – R. J.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s