7-தோசையம்மா தோசை – சுஜாதா தேசிகன்


தோசைக்கு சிறந்த இடம் பெங்களூரு. சென்னை தோசை மெல்லிசான வாயில் புடவை மாதிரி என்றால், பெங்களூரு தோசை கனமாக பட்டு புடவை மாதிரி. மசால் தோசைக்கு பூர்வீகம் மைசூர். தோசைக்கு நடுவில் உருளைக்கிழங்கை வைத்தால் நமக்கு மசால் தோசை ஆனால் பெங்களூர்/மைசூரில் தோசையில் சிகப்பு சட்னி தடவி பிறகு உருளைக்கிழங்கு வைத்தால் தான் மசால் தோசை. சிகப்பு சட்னிக்கு தான் மசாலா!.

தாவங்கரே பென்னே தோசை பற்றி சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். பெங்களூரு ‘புல் டெம்பிள்’ ரோட்டிலும், பனசங்கரியில் ஏதோ ஒரு சந்திலும், ராஜாஜி நகர் நேஷனல் ஸ்கூல் பக்கமும் இந்த கடை இருக்கிறது.

பெண்கள் முகத்துக்கு கிரீம் பூசிக்கொள்ளும் போது பார்த்திருக்கலாம்- நெற்றியில் கொஞ்சம், இரண்டு கன்னத்திலும் கொஞ்சம், மோவாக்கட்டையில் கொஞ்சம் கடைசியாக மூக்கில் கொஞ்சம் தடவிய பின் முகம் முழுக்க பூசிக்கொள்ளுவார்கள். தாவங்கரே தோசையில் கிரீமுக்கு பதில் வெண்ணை மற்றபடி எல்லாம் அதே மாதிரிதான்.

படம்: தேசிகன்

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் புள்ளையார் கோயில் பக்கம் திடீர் என்று இரண்டு வாரத்துக்கு முன்பு தள்ளுவண்டியில் தோசைக் கடை ஒன்று முளைத்தது. ஹோண்டா சிட்டியும், ஆட்டோக்களும் க்யூவில் நிற்க பின்னாடி நான் போய் செர்ந்துக்கொண்டேன்.
ஒரு கரண்டி மாவில் தோசை. நாற்பது வகைகள் செய்கிறார்கள்.

ஒரு தள்ளுவண்டி, இரண்டு கரி அடுப்பு, அதற்கு மேல் தோசைக் கல். கல் என்றால் நிஜ கல் இரும்பு கிடையாது. பன்னீர் ஊத்தப்பம் ஆர்டர் செய்தேன். ஊத்தப்பத்தை ஏதோ பிட்சா மாதிரி வெட்டி தந்தார்கள். எப்படி தோசைக்கு நடுவில் பன்னீர் ஸ்டஃப் செய்தார்கள் என்று அடுத்த முறை கவனிக்க வேண்டும். எப்போதும் சிரித்த முகத்துடன் இந்த கடையை நடத்துபவர் சதீஷ். மாலை நாலு மணியிலிருந்து இரவு பத்து மணி வரைக்கும் இவர் 60-70 தோசைகளை விற்கிறார். இப்போது எல்லாம் இரவு வாக்கிங் போய்விட்டு வருகிறேன் என்றால் வீட்டில் எனக்கு பர்மிஷன் கொடுப்பதில்லை.

Desikan Narayanan

–நன்றி கூடு தமிழ் ஸ்டூடியோ

6 thoughts on “7-தோசையம்மா தோசை – சுஜாதா தேசிகன்

 1. இதே போல் (இதே க்ரூப்தான் என்றுதான் நினைக்கின்றேன்), என் வீட்டருகே ஒரு கையேந்திபவன். 99 வகை தோசை. கரி அடுப்பு, தோசைக்கல் புகைப்படத்தை பார்த்தால் இதுதான் அது. ஒரு இன்ச் தடிமன். பழுப்பு கலர் தோசை மாவு. எண்ணைக்கு பதில் வெண்ணை, உருகிய வெண்ணையுடன் தக்காளி ஜூஸ் கலந்திருப்பார் என்று நினைக்கின்றேன் சிவப்பாக இருக்கும்.

  அனைத்து தோசைக்கும் ஒரே மூலப்பொருள் உருளைக்கிழங்கு மசாலா, 90 வகை தோசைக்கும் அதனுடன் விதவிதமான சேர்க்கை. பன்னீர் தோசை என்றால் பன்னீரை தூவி, மசாலாவை வைத்து, தோசை முழுவதும் தேய்த்து, ஒரு சுருட்டு, சுருட்டி, தோசைக்கரண்டியை வைத்து வெட்டி தட்டில் தூக்கி போட்டுவிடுவார். சீஸ் தோசை என்றால், பன்னீருக்கு பதில் சீசை துருவி போட்டு விடுவார்.

  ஆச்சர்யம் தோசையில் கொஞ்சம் முறுமுறுப்பு மிச்சமிருக்கும். பத்து நிமிடத்திற்கு சூடு குறையாது. முக்கிய விஷ்யம் ஒரு வாரத்திற்கு தொடர்ச்சியாக விதவிதமாக முயற்சி செய்தேன். வயிற்றிற்கு பாதிப்பில்லை.

  இத்தோசைக்காரர்களின் மூலம் மல்லேஸ்வரத்தில் இருக்கும் ஏதோ ஒரு கடை.அக்கடையின் உதவி மூலம், அவர்கள் ப்ராண்டில் செயல் படுகின்றது.

  கடை ஒரே மாதத்தில் கடை கட்டிவிட்டது. காரணம், பக்கத்தில் ஒரு ஃப்ரைட் ரைஸ் கடை.அதோடு இது முழு சைவம்.

 2. N.Paramasivam January 15, 2014 at 4:54 AM Reply

  உங்கள் பதிவு தோசை மேல் ஒரு காதல் ஏற்ப்படுத்துகின்றது.

 3. Brahmanyan January 15, 2014 at 5:21 AM Reply

  பெங்களூரில் விச்வெச்வரபுரம் பகுதியில் ஒரிஜினல் அய்யங்கார் பெகரிக்கு (V R Bakery ) அருகில் உள்ள சந்து முழுவதும் கையேந்தி பவன் கடைகள்தான் மாலை 4 மணியிலிருந்து இரவு 12 மணி வரை சுறுசுறுப்பாக இயங்கும் இங்கே கிடைக்காத சிற்றுண்டிகள் இல்லை . பல கடைகளில் தோசை வகைகள் பிரபலம். பலர் கார் போட்டுக்கொண்டு குடும்பத்துடன் வந்து நின்று சாப்பிடுவது சாதாரணமாக காணலாம். இங்கு எல்லா கடைகளுமே சுத்தமும் சுகாதாரமாகவும் செயல்படுகின்றன. நமக்கு எதிரிலேயே அவர்கள் உபயோகிக்கும் பொருட்கள் எண்ணை நெய் முதலியவை காண்பதால் ஒரு திருப்தி ஏற்படுகிறது. இங்கு மற்றொரு விசேஷம் என்னவென்றால் எல்லா உணவுவகைகளும் சைவ உணவே . பெங்களூருக்கு வருபவர்கள் இங்கு அவசியம் ஒரு முறை சென்று பார்க்கவெண்டும்.
  ப்ரஹ்மண் யன்
  பெங்களூரு.

 4. Varagooran Narayanan January 15, 2014 at 6:42 AM Reply

  செய்முறை-பக்குவம் விளக்கினால் நன்றாக இருக்கும்.

 5. rjagan49 January 15, 2014 at 7:33 AM Reply

  // இப்போது எல்லாம் இரவு வாக்கிங் போய்விட்டு வருகிறேன் என்றால் வீட்டில் எனக்கு பர்மிஷன் கொடுப்பதில்லை.// – வீட்டுக்குப் பக்கத்தில் பிள்ளயார் கோயில் பக்கத்தில் தானே தோசை வண்டி! கோயில் நடை சாத்துவதற்குமுன் ஒரு நடை கோயிலுக்குப் போவதாகச் சொல்லிப் போய்வரலாம்! இல்லை, ஆத்துக்காரியையும் கூட்டிக்கொண்டுபோய் வாங்கித் தரலாம்! அப்புறம் சேர்ந்தே வாக்கிங் போகலாம்!

  என் சமீபத்திய அனுபவம் – வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் ‘ID’ என்ற இட்லி தோசை ரெஸ்டாரன்ட்டில் குடும்பத்தோடு (பையன்கள் 2 பேரும் பேத்தியும் வந்திருக்கிறார்கள்!) சாப்பிட்டோம். என்ன ஏமாற்றம்! காலிப்ளவர் மசாலா, செட்டிநாடு மசாலா, மஷ்ரூம் மசாலா எல்லாம் ஒரே டேஸ்ட்! ரவா இட்லியில் உப்பு இல்லை. சட்னிகளில் காரம் இல்லை. அதைவிட கொடுமை, அக்கார வடிசில் என்று போட்டுவிட்டு கன்னங்கரேல் என்று வெல்லச் சாதத்தைக் கொண்டு வைத்ததுதான். எதை எங்கு ஆர்டர் செய்யணும் என்று தெரியாத நாங்கள் தான் மடையர்கள்!

  ஒரு ‘அந்த நாள்’ ஞாபகம் – அண்ணாமலையில் படித்தபோது, ஸ்டேஷனைத் தாண்டி ஒரு மாமா குடும்பமே (மாமி, 2 சிறு குழந்தைகள்) இரவில் தோசையும் அடையும் இரவில் மட்டும் (11, 12 மணி வரை) போடுவார்கள். ஹாஸ்டலில் ஒரு கட்டு கட்டினாலும், அவ்வப்போது அங்கு போய் அந்த கெட்டி அடையையும் கார மிளகாய்ப் பொடியையும் ஒரு கை பார்ப்போம்!

  ஒரு quiz – நடிகர் விஜய் நன்றாக தோசை ‘சுடுவார்’ என்று எத்தனை வருஷங்களாக, எத்தனை புஸ்தகங்களில் வந்திருக்கிறது?!

  -ஜெ.

 6. ரெங்ககசுப்ரமணி January 16, 2014 at 11:58 AM Reply

  //// இப்போது எல்லாம் இரவு வாக்கிங் போய்விட்டு வருகிறேன் என்றால் வீட்டில் எனக்கு பர்மிஷன் கொடுப்பதில்லை.// – வீட்டுக்குப் பக்கத்தில் பிள்ளயார் கோயில் பக்கத்தில் தானே தோசை வண்டி! கோயில் நடை சாத்துவதற்குமுன் ஒரு நடை கோயிலுக்குப் போவதாகச் சொல்லிப் போய்வரலாம்! இல்லை, ஆத்துக்காரியையும் கூட்டிக்கொண்டுபோய் வாங்கித் தரலாம்! அப்புறம் சேர்ந்தே வாக்கிங் போகலாம்!//

  இவ்வளவு எதற்கு, “பர்ஸைக் கொண்டு போகல பாரு” என்று காட்டிவிட்டு அக்கவுண்ட் வைத்து சாப்பிடலாம். வாங்கிவரச் சொன்ன மளிகை லிஸ்டில் இரண்டை மறந்துவிட்டு, திட்டிய பின் சென்று “வாங்கி” வரலாம், குழந்தைகளை ஏற்றிவிட்டு அவர்களுக்கே அவர்களுக்கு “வாங்கி” தரலாம். இது மாதிரி ஏகப்பட்ட ஐடியா எல்லாம் தானே தோன்றும். அதை எல்லாம் பப்ளிக்காக எழுத முடியுமா? வீட்டிலுள்ளவர்களும் படிப்பார்களல்லவா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s