6-தோசையம்மா தோசை – பெண்ணே தோசை – தாவணகெரே ஸ்பெஷல்


எப்படித்தான் யோசிப்பார்களோ கர்நாடக மக்கள்! எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரின் அடையாளத்துடன் ஒரு தோசை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சிறப்பம்சம். அரிசி தொடங்கி ஜவ்வரிசி வரை எல்லா மாவுகளையும் கலக்கி வார்த்து விடுகிறார்கள். பெண்ணே தோசை அப்படியான ஒரு வெரைட்டி தான். தாவணகெரே நகரின் ஸ்பெஷல்.

பெங்களூரில் இருந்து 265 கி.மீ தொலைவில் இருக்கிறது இந்நகரம். கர்நாடகத்தின் ‘காட்டன் சிட்டி’ என்று சொல்லும் வகையில் ஏராளமான பருத்தி மில்களைக் கொண்ட இதன் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்று பெண்ணே தோசை. ‘தாவணகெரே பெண்ணே தோசை’ என்றால் கர்நாடக மக்கள் வாயில் தேனூறும். அந்த அளவுக்குச் சுவையும், சுகந்தமான மணமும் கொண்டது.

‘பெண்ணே’ என்றால் வெண்ணை. மாவுக்கு இணையாக வெண்ணையையும் தோய்த்து வார்க்கும் தோசைதான் பெண்ணே தோசை. வெண்ணை கர்நாடக மக்களின் சமையலில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தும் பொருள். அதிலும், மேய்ச்சல் தொழில் மிகுந்த தாவணகெரே பகுதியில் கிடைக்கும் வெண்ணை முதல்தரமானது. இப்பகுதியில் இருந்து கர்நாடகம் முழுமைக்கும் வெண்ணை அனுப்பப்படுகிறது.

Advertisements

3 thoughts on “6-தோசையம்மா தோசை – பெண்ணே தோசை – தாவணகெரே ஸ்பெஷல்

 1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்…

  • BaalHanuman January 14, 2014 at 5:13 AM Reply

   நன்றி தனபாலன். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

 2. பொங்கலோ பொங்கல்.

  பெங்களூருவில் இரண்டு மூன்று இடங்களில் கிடைக்கின்றது. கனகபுரா ரோடில் ஒரு கடை உள்ளது, விறகடுப்பு. வித்தியாசமாக, தோசை போடுமிடம் முன்னால், சாப்பிடுமிடம் பின்னால். நம்மூர் டீக்கடை மாதிரி, பல முக்கிய தலைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்.

  தோசையை ஊற்றி, ஒரு கை நிறைய வெண்ணை எடுத்து தோசை மேல் வடகம் வைப்பது போல உருட்டி உருட்டி வைத்து விடுகின்றார்கள். எப்படியும் ஒரு பத்து பதினைந்து உருண்டை இருக்கும். வெண்ணை தோசையில் கொதிக்கும். தோசை வெண்ணையில் பொறிக்கப்பட்டுதான் வருகின்றது. பிழிந்தால் ஒரு அரை டம்ப்ளர் நெய் கிடைக்கும். தொட்டுக்கொள்ள தேங்காய் நிறைய போட்ட சட்னி. மேலே மிளாகாய்ப் பொடி தூவப்பட்டும் கிடைக்கும், மசாலாவுடனும் கிடைக்கும்.

  பி.பி. கொலஸ்ட்ரால், இருதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

  நல்ல நாக்கும், வயிறும் உடையவர்கள் இரண்டு சாப்பிடலாம். சி.வி.ராமன் நகரிலும் ஒன்று இருந்தது. அந்தப்பக்கம் போய் வெகு நாளாகின்றது :(.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s