5-தோசையம்மா தோசை – சுஜாதா தாசன்


தோசை !! இந்த வார்த்தையைக் கேட்கும் பலருக்கும் பசி வரத்தான் செய்யும். இந்த ஐட்டத்திற்கு  அடிமைகள் பலர்.  என்னதான் தமிழனின் பாரம்பரிய உணவு இட்லியாக இருந்தாலும், தோசைக்கு உள்ள மௌசே தனிதான். பெரும்பாலானோரின் காலை டிபன் தோசையாகத்தான் இருக்கிறது .

அப்படிப்பட்ட  தோசையானது தோன்றிய இடம் தோராயமாக  கர்நாடக மாநிலம் மைசூர் தான். அங்கே அதன் பெயர் செட் தோசா . ஒரு செட் தோசா சாப்பிட்டால் அன்று முழுவதும் பசிக்காது என்பது ஆன்றோர்களின் வாக்கு. ஊரான் வீடு நெய்யே  என் பொண்டாட்டி கையே என்கின்ற மாதிரி,  பெயர் கிடைத்தது என்னவோ உடுப்பிக்குத்தான்..
தோசை என்றால் உடுப்பி, உடுப்பி என்றால் தோசை. அங்கே கண்டுபிடிக்கப்பட்டதுதான் மசால் தோசை. அதனால் தான் என்னவோ டிபன் என்றாலே உடுப்பி ஹோட்டல்தான் என்று ஸ்ரீரங்கத்து மாமாக்களும், கும்பகோணத்து தாத்தாக்களும் சொல்வதுண்டு . நீங்கள் போய் “மாமா என்ன சாப்டேள் ?” என்று கேளுங்கள். “ஒரு நெய் ரோஸ்ட்  அப்புறம் ஒரு காபி” என்று தான் பதில் வரும். முயற்சி செய்து பாருங்கள்.
நம் ஊரில் விளக்குமாறால் சுத்தம் செய்த கல்லில் பெருசாக ஊற்றி லேசாக எண்ணையோ நெய்யோ போட்டு திருப்பி எடுத்தால் வேலை முடிந்தது. அனால் மற்ற மாநிலங்களில் முறை வேறாம். ஆந்த்ராவில் அதன் பெயர்  பெசரட்டு. அங்கயே அட்டு என்று ஒரு வகை உண்டு  ஆளை மயக்கிவிடுமாம். ஒரிசாவில் கூட இதன் வேறு வடிவம் புழக்கத்தில் உள்ளதாக கேள்வி. அதன் பெயர்  காக்கார  பிட்டா  என்ற இனிப்பு தோசை.
மேற்கத்தியக் கலாச்சாரம் இங்கு வந்த பிறகு அதன் வகைகள் அதிகரித்தன .
paneer butter dosa, mushroom masal dosa, spinach dosa, green peas dosa, navadhaniya dosa, noodles dosa, mint dosa  இன்னும் பலப்பல. தோசைக்காக எதையும்  செய்யத் துணிபவரில் அடியேனும் ஒருவன் .
சொல்ல வந்த செய்தி இதுதான். தோசை திருவிழா ஒன்றிற்குச் சென்றோம் . மழைநேரம் ஆதலால் கூட்டம் இருக்காது என்ற நினைப்புடன் சென்றால் அங்கே ஒரு படையே காத்திருந்தது . நாங்கள் போனதிற்கான காரணம் இது தான். வீட்டில் இருந்தால் படிக்கச் சொல்லி பிராணனை பிடுங்குவார்கள் அதுவும் அல்லாமல், 99 ரூபாய்க்கு அளவிலா தோசைகள் சாப்பிடலாம். cheap and best .

அத்துணை வகையும் இருந்தது. உள்ளே சென்றோம் தட்டை எடுத்துக் கொண்டோம். வரிசையாகத் தோசைகளை பதம் பார்க்கத் தொடங்கினோம்.

மேலே குறிப்பிட்ட அத்துணை வகையும் இருந்தது, த்வம்சம் செய்தோம்.
தண்ணி குடித்தால் வயிறு நிரம்பிவிடும் என்று விக்கல் எடுத்து செத்தாலும் பரவாயில்லை, இனிமேல் அவன் தோசை திருவிழாவே நடத்த கூடாது என்ற ரீதியில் சாப்பிட்டோம். நடுவில் பேசிய அரவிந்தை தடுத்து நிறுத்தி “டேய் சாப்டும்போது பேசாதடா. காத்து உள்ள போய்டப் போகுது” என்று கூறி விட்டு மேலே தொடர்ந்தோம். சாப்பிட்ட களைப்பில் என்னால் நடக்கக்கூட முடியவில்லை, ஜான்சனை கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு கை அலம்பிவிட்டு வந்தேன்.

வாயைத் திறந்தால் காக்கா கொத்திக்கொண்டு போகும் அளவுக்கு உண்டேன் 🙂 என் வாழ்நாளில் அப்படிச் சாப்பிட்டதே இல்லை .. ஆனால் கடப்பாவும் , கும்பகோணம் கொத்சுவும் “மிஸ்”ஆகியது தான் வருத்தம். ஏன் எனில் ஊத்தப்பத்திற்குக் கூட கடப்பாவை ஊற்றி ஊறவைத்துச் சாப்பிடும் ரகம் நான் 🙂

என்ன காபி தான் குடிக்கவில்லை. கஷ்டமாக இருந்தது. அடுத்த உணவுத் திருவிழாவிற்கும் போகலாம் என்று திட்டம். அன்பர்கள் வருவதாக இருந்தால் சொல்லவும். ஆனந்தமாக உண்டு வரலாம்…

My Photo

Advertisements

7 thoughts on “5-தோசையம்மா தோசை – சுஜாதா தாசன்

 1. cnsone January 12, 2014 at 7:34 PM Reply

  House wives can not make the one shown in the picture – like the 5 Feet Long Dosa seen at ​MGM Near Mahabalipuram. I have seen in the You Tube making 14 dosa on one slab in 5 minutes.
  Many years ago I had the experience of reading in the Menu Card at Hotel Chola – Fish Curry Dosa. This was served like the masala dosa!

  இந்த கதையை கேளுங்கள்: ஒருவர் சப்ளையரிடம் நெய் தோசை போடுவீங்களா என்றார்

  உங்களுக்கு ஒன்னு ஆர்டர் பண்ணவா என்றார் சப்ளையர்

  நான் வெயிட் பண்றேன் யாரவது கேட்ட பிறகு எனக்கு சாதா ஒன்னு போடுங்க என்றாராம் நம்மவர்

  • BaalHanuman January 13, 2014 at 4:07 PM Reply

   கதை சூப்பர் 🙂

 2. RAJAGOPAL January 13, 2014 at 4:52 AM Reply

  Engey nadanthathu sir indha Dosai Thiruvizha?

  • BaalHanuman January 13, 2014 at 4:07 PM Reply

   மன்னிக்கவும். இது சமீபத்தில் நடந்த திருவிழா அல்ல 😦

 3. RAJAGOPAL January 13, 2014 at 5:03 AM Reply

  பெங்களூரில் பல இடங்களில் தள்ளு வண்டியில் ( கையேந்தி பவன் ), 99 வகை தோசை கிடைக்கும்.

 4. இங்கே வீட்டருகே 99 வகை தோசைக்கடை கையேந்தி பவன் இருந்தது. அநியாயமாக காணாமல் போய்விட்டது. ஒரே மாவு, உள்ளே வைக்கும் ஐட்டம் மட்டும் 90 வகை. எல்லாரும் குழிக்கரண்டி வைத்து தோசை ஊற்றியதை பார்த்துள்ளேன், இக்கடையில் ஒரு வகை தட்டை கரண்டி வைத்து ஊற்றுவார். வெண்ணையையும், பாவ்பாஜியை கூழாக்கு ஒரு வஸ்துவை வைத்து தேய்ப்பார்.

 5. R.Jayaraman July 12, 2014 at 12:32 PM Reply

  Really it is quite interesting to read about Dosai Thiruvizha. I am now in Seattle for
  vacation. Here in Udupi hotel they give masala dosais along with buffet meals. You can
  take any no. of dosa along with food.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s