நேனோ ஓர் அறிமுகம் – அருண் நரசிம்மன்


nano-front-s

“நேனோ” என்பது அறிவியலாளர்களுடன் ‘நேனு நேனு’ என்று வர்த்தக வித்தகர்களும் கைகோர்க்கும் துறை. வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணினிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் (nanobot) எனும் நுண்ணூடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்தியை “நேனோ” என்று பெயரிடும் அளவிற்கு இத்துறை இன்று பிரபலம்.

இயற்கையை அறிதலுக்கு அறிவியல் சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ தொழில்நுட்பம் விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள், தொழில்நுட்பங்கள், இயற்கையில் உயிரினங்களிடையே ஏற்கெனவே படைப்பில், உபயோகத்தில் இருக்கிறது.

எனக்குப் புரிந்த அறிவியல் எல்லைக்குள், நேனோ அறிவியல் என்கிற இளகிய பொதுத்தரப்பின் கீழ் இத்துறையின் ஏன் எதற்கு எப்படி-யை அறிமுகமாய் விளக்க முற்படுகிறேன். உள்ளடக்கத்தின் வசனநடையும் கோமாளி உடையும், அறிவியல் துறையின் தீவிரத்தை உள்வாங்க ஏதுவாக்கும் குதூகல மனநிலைக்கான பாவனைகளே.

ஆங்கில nano தமிழில் நேனோ-வோ நானோ-வோ? நேனோ என்றே புத்தகத்தினுள் உச்சரிக்கப்போகிறேன். மைக்ரோ என்றால் ஏற்கெனவே நுண் என்று பழக்கத்தில் உள்ளது (மைக்ராஸ்கோப் – நுண்ணோக்கி). நேனோவை அதி-நுண் எனலாம். ஆனால் நேனோ என்றே வைத்துக்கொண்டிருக்கிறேன். மைக்ரோ (micro), நேனோ (nano), பிகோ (pico), ஃபெம்ட்டோ (femto), அட்டோ (atto) போன்ற அதி-நுண் அளவைச் சொற்களை, சைக்கிள், பெடல், பிரேக், (குடிக்கும்) காபி என்பதுபோல அப்படியே புழக்கத்திற்கு கொண்டுவந்து உபயோகித்தாலும், விளக்கங்களை தமிழில் கொடுத்தால் போதுமானது என்கிற கருத்தில். இதற்கெல்லாம் கோபித்துக்கொண்டு, நீனு நேனோ-ன்னா நேனு நோ நோ என்று வாசிக்காமல் போய்விடாதீர்கள்.

இப்புத்தகத்தை எழுதத் தூண்டுகோலாய் இருந்து, அதை செம்மையாக வெளியிடும் தமிழினிக்கு என் நன்றி.

nano-s

அட்டை வடிவமைப்பு: அருண்

2014 சென்னை புத்தகக்காட்சியில் கிடைக்குமிடம்: தமிழினி பதிப்பகம் (ஸ்டால் எண்கள் 436, 437)

ஆன்லைன் ஆர்டர்: <விரைவில்>

அருண் நரசிம்மன் தன்னைப் பற்றி…

நான் ஒரு ஆசிரியர். ஆராய்ச்சியாளன். அருண் என்று பலமுறை நீங்கள் கூப்பிட்டால் நான் சிலமுறையாவது திரும்பிப்பார்ப்பேன். அவ்வப்போது புன்னகையும் செய்வேன். மற்றபடி தெருவோரமாக விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் அரைநிஜார், செருப்பு, செல்போன் அணிந்து நடந்து செல்லும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.

அருணை நீங்கள் ommachi என்கிற gmail முகவரியில் தொடர்பு கொள்ளலாம்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s