டூக்கன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது? – அருண் நரசிம்மன்


arunn-book-3-cover-front-s

அறிவியல் கற்பது கடினம். பாடமாய் கற்க முனைகையில் வாசலிலேயே செருப்பையும்  சிரிப்பையும் கழட்டிவிட்டு, முகத்தையும் மனதையும் சீரியஸாக்கிக் கொள்வது  அவசியம். ஊடாடும் வேறு அறிவுத்துறைகளின், கலைகளின், வாழ்க்கை இயல்பின் தாக்கங்கள் அறிவியலை கற்கையில் கவனக்கலைப்பிலேயே முடியும். அறிவியலின் கடினத்தை பெருக்கி  வெறுத்தொதுக்க வைத்துவிடும்.

மேற்படி கருத்துகள் அறிவுப் பறிமாற்றங்களில் ஈடுபடும் தமிழ்மனங்களில் இருந்து பரிட்சை பேடில் ஒட்டிய பெருமாள் படம் போல லேசில் அகலாதவை. மொத்தமாக சேதாரமின்றி பிரித்தெடுக்கமுடியாதவை.

பள்ளி கல்லூரிகளில் தேர்வு, விழுக்காடு, நல்ல வேலை என்று ஏதோ ஒரு முடிவை நோக்கி அவசரகதியில் பறிமாறிக்கொள்ளப்படும் அறிவியல் சார்ந்த சில விஷயங்களை, பாடம் என்று தெரியாமல் சற்று நகைச்சுவையுடன் சாய்வு நாற்காலியில் புரட்டினால் எப்படி இருக்கும் என்கிற உந்துதலின் வெளிப்பாடே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளின் நோக்கம். அறிவியல் கருத்தாக்கங்களில் சமரசமின்றி, ‘போரடிக்காமல்’ பரிமாற முனைந்துள்ளேன்.

பயப்படாதீர்கள். படித்ததும் பீஜிஎம்-மில் “சிங்கமொன்று புறப்பட்டதே” அல்லது “ஓ…ஒரு தென்றல் புயலாகி வருதே” ஒலிக்கும் ஒரு பாட்டு முடிவதற்குள் ஏப்ரன் அணிந்த அறிவியலாளராய் ஆகிவிடமாட்டீர்கள். அறிவியலை, சார்ந்த அறிவுத்துறையை மீண்டும் குண்டுபுஸ்தகங்களில் அணுகுகையில், மனத்திடம் ஒரு சிட்டிகை உங்களுக்கு அதிகமாகலாம். சிலருக்கு ரத்த அழுத்தம்.

வாசிக்கையில், எட்டிப்பார்க்கும் சில ஆங்கில சொற்களில் சுளித்தோ, கலைச்சொல்லாக்கங்களில் தடுக்கியோ, என்வகை நகைச்சுவையில் வெகுண்டோ, புரையேறி தலையில் தட்டிக்கொள்கையில், நினைத்துக்கொள்பவர்கள் யாராயிருக்கும் என்று நீங்கள் விசனப்படலாம். உங்களை நினைத்துக்கொள்வது நான்தான். அறிவியலை தமிழில் நீங்கள் வாசிக்கும் ஆர்வத்திற்கு நன்றியாக.

அட்டை வடிவமைப்பு: அருண் | பின் அட்டை சித்திரம்: வசுந்தரா

*

2014 சென்னை புத்தகக்காட்சியில் கிடைக்குமிடம்: அம்ருதா பதிப்பகம் ஸ்டால்
ஆன்லைன் ஆர்டர்: <விரைவில்>

அருண் நரசிம்மன் தன்னைப் பற்றி…

நான் ஒரு ஆசிரியர். ஆராய்ச்சியாளன். அருண் என்று பலமுறை நீங்கள் கூப்பிட்டால் நான் சிலமுறையாவது திரும்பிப்பார்ப்பேன். அவ்வப்போது புன்னகையும் செய்வேன். மற்றபடி தெருவோரமாக விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் அரைநிஜார், செருப்பு, செல்போன் அணிந்து நடந்து செல்லும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.

அருணை நீங்கள் ommachi என்கிற gmail முகவரியில் தொடர்பு கொள்ளலாம்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s