2-தோசையம்மா தோசை – பா.ராகவன்


உலகம் முழுவதையும் சுண்டி இழுக்கும் இந்த உணவுப் பொருள், ஒரு கர்நாடகச் சரக்கு. மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமானால் கிருஷ்ணராலும் ஹோட்டல்களாலும் புகழ் பெற்ற உடுப்பிச் சரக்கு. பூவுலகில் இட்லி அவதரித்த பிறகு உற்பத்தியான தின் பொருள். Thin பொருளாகவும் இருப்பதனால் அதற்கு மவுசு அதிகமாகிவிட்டது.

இந்த உடுப்பியைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். ஹிந்து மதாசாரியர்களுள் ஒருவரான மத்வர் இந்த ஊருக்குப் பக்கத்து ஊர்க்காரர். அவரது ‘த்வைத சிந்தாந்தம்’ அத்வைத, விசிஷ்டாத்வைதங்கள் அளவுக்குப் பரவலாகவில்லையென்றாலும், நமது உணவு முறையை ஆன்மீகத்துடன் இணைத்து, சத்வ குணம் மேலோங்குவதற்கு (சத்வ குணமென்றால் சாது குணம் என்று எளிய பொருள் கொள்ளலாம்.) உகந்த முறையில் மாற்றியமைக்க, இவரது வழியைப் பின்பற்றிய உடுப்பிக்காரர்கள் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.

உடுப்பி உணவு முறை என்பது சற்றே விசேஷமானது. நம்மூர் உடுப்பி ஹோட்டல்களில் இன்றைக்குக் கிடைக்கக் கூடிய உணவெல்லாம் ஒரிஜினல் உடுப்பி உணவாகாது. வேத கால சமையல் முறைகளை அப்படியே அடியொற்றிய, ஒரு மாதிரி நவீன சமையல் அது.

உணவின் வரலாறு

Advertisements

6 thoughts on “2-தோசையம்மா தோசை – பா.ராகவன்

  • BaalHanuman January 13, 2014 at 4:11 PM Reply

   நன்றி ரெமிதா. நீங்களும் இங்கே பே ஏரியாவில் தான் இருக்கிறீர்களா ?

   • Remitha Satheesh January 13, 2014 at 10:55 PM

    இல்லை, நான் நார்த் கரோலினவில் இருக்கிறேன். உங்கள் பதில் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. பாரதி மணி சார் வழியாக எனக்கு உங்கள் ப்ளாக் அறிமுகமானது.

 1. Brahmanyan January 10, 2014 at 5:37 AM Reply

  பெங்க ளூர் காந்தி பஜாரில் உள்ள வித்யார்த்தி பவனில் கிடைக்கும் மசாலா தோசைக்கு இணையான தோசையை நான் இதுவரை எங்கும் ருசித்ததில்லை .அது ஓர் இனிமையான அனுபவம் . இந்த 70 வருட பழமையான உணவகத்தில், பல பிரபல மனிதர்கள் வந்து சாப்பிட்டு இருக்கிறார்கள்.

  • BaalHanuman January 13, 2014 at 4:11 PM Reply

   தகவலுக்கு நன்றி சார்.

 2. உடுப்பி சாம்பாரில் வெல்லத்தை போட்டாலும் ருசியாகத்தான் இருக்கும். மற்ற கடை கர்நாடக சாம்பாரிலும் வெல்லம் போடுவார்கள், அது மிளாகாய்டன் சேர்ந்து எரிக்கும். உடுப்பி ஸ்பெஷலில் அது கொஞ்சம் வித்தியாசமாகத் தெரியும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s