1-தோசையம்மா தோசை – பா.ராகவன்


மசாலா தோசையின் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு ? இந்தியாவின் டார்லிங் அதுதானாம். தேசம் முழுதும் பெருவாரி மக்களால் விரும்பப்படும் உணவுப்பொருள் தோசைதான் என்று வேலை மெனக்கெட்டு சர்வே எடுத்து கலர் கலராகப் படம் போட்டுப் புல்லரித்திருக்கிறது அவுட்லுக்.

அமெரிக்கா முதல் ஜப்பான் வரை தோசை கிடைப்பது பெரிய விஷயமல்ல. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் உட்பட அனைத்துப் பகுதி மக்களுக்கும் இதுவே ஃபேவரிட் என்பது சற்றே வியப்புக்குரிய விஷயம்தான். அந்தந்தப் பிராந்திய உணவு என்று எது இருந்தாலும், தோசையைப் பார்த்தால் விழி விரிக்காத இந்தியர் கிடையாது.

ஒரு நூறு டிபன் ஐட்டங்களை மொத்தமாக ஒரு டேபிளில் வைத்தால், அதில் தோசையும் இருந்தால் பெரும்பாலானவர்கள் முதலில் எடுக்கக் கூடிய ஐட்டம் அதுதான் என்று சில வருடங்களுக்கு முன்னர் காஸ்மோபாலிடன் பத்திரிகையில் ஒரு செய்தித் துணுக்கு வந்தது. அவர்களும் இதற்காக வேலை மெனக்கெட்டு பல்வேறு இடங்களில் பரிசோதனையெல்லாம் நடத்தித் தான் இந்த முடிவுக்கு வந்திருந்தார்கள்.

உணவின் வரலாறு

உணவின் கதையை வாசிக்கத் தொடங்கும்போது, அது மனித குலத்தின் வரலாறாகவே நீண்டுவிடுவது தற்செயலானது அல்ல. நெருப்பு கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய காலம் தொடங்கி இன்று வரையிலான உணவின் பரிமாண வளர்ச்சி என்பது மனிதர்களின் பரிணாம வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த விஷயம். பசியை அடக்க உணவு என்பது மாறி, ஒரு கட்டத்தில் நாவின் ருசியை அடக்க விதவிதமான பண்டங்களை மனிதன் கண்டுபிடிக்கவும் உருவாக்கவும் ஆரம்பித்தபோது, முற்றிலும் புதிய, வண்ணமயமான ஓர் உலகம் உருப்பெற்று எழுந்தது. இந்தக் கணம் வரை உலகில் புழங்கும் அத்தனை விதமான உணவு வகைகளும் ருசிக்கான தேடலின் விளைவே.

தேன், பட்டாணி, அரிசி, கிழங்கு முதல் ஹாம்பர்கர், குரங்கு சூப் வரை இந்நூல் தொட்டுக்காட்டி விவரிக்கும் நூற்றுக்கணக்கான உணவு வகைகள், உலகெங்கும் வாழும் பலவிதமான மனிதக் குழுவினரின் ருசி வித்தியாசங்களை காலம் தோறும் மாறும் ரசனையைச் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு ருசிகரமான வாசிப்பு அனுபவத்துக்குத் தயாராகுங்கள்!

Advertisements

3 thoughts on “1-தோசையம்மா தோசை – பா.ராகவன்

 1. cnsone January 8, 2014 at 8:35 AM Reply

  Photo Looks Good. But there is No professionalism. See the Cup with spilling on the outside and the Dry Leaf.

  • cnsone January 9, 2014 at 5:48 PM Reply

   Good to see the Photo has been changed – this one is much better.

 2. BaalHanuman January 9, 2014 at 6:07 PM Reply

  உங்கள் விருப்பப்படி படத்தை மாற்றி விட்டேன். பதிவை மட்டுமல்லாமல் படத்தையும் உன்னிப்பாகக் கவனித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s