ஏழே நிமிடங்களில் மிளகுக் குழம்பு செய்வது எப்படி ? – திருமலை ராஜன்


ஓவர் டு திருமலை ராஜன்…

கமலா கல்யாண் சாட்டில் வந்தார். அவருக்கு பை சொல்லி விட்டு சமைக்கப் போவதாகச் சொன்னேன். அவர் என்ன சமையல் என்று கேட்க நான் வாய்க்கு வந்ததை மோர்க் குழம்பு என்று சொல்லி வைத்தேன். கீழே போவதற்குள் அது எதுவாக வேண்டுமானாலும் மாறி இருக்கலாம் அல்லது சமைக்காமலேயே சும்மா தண்ணீரைக் குடித்து விட்டு படிக்கப் போயிருக்கலாம். கமலாதான் மிளகு குழம்பு ட்ரை பண்ணுங்களேன் என்று சொன்னார். சரி அசரரீ மாதிரி வந்து அருள் வாக்கு சொல்கிறார் செய்து விடலாம் என்று எப்படி செய்வது என்று கேட்டேன். சொன்னார். கீழே போய் மிளகு குழம்பு செய்து அவரிடம் சொன்னபடி செய்து விட்டேன் என்று காட்டுவதற்காக ஃபோட்டோ எடுத்துப் போடுவதற்குச் சரியாக மொத்தமே 7 நிமிடங்கள் மட்டுமே ஆயின. ஒரு ஃபாஸ்ட் ஃபுட் சைட் டிஷ் அது. சூடான சாதத்திற்கோ தயிர் சாதத்தின் சைட் டிஷ்ஷாகவோ அருமையான காம்பினேஷன். ஆகவே நன்றி

சரி ரெசிப்பீ சொல்லி விடுகிறேன்…

ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 மிளகாய் வற்றல், நாலு கருவேப்பிலை வறுத்துக் கொண்டு அதை நெல்லியளவு புளியோடு அரைத்து வைத்துக் கொண்டே. கடுகு தாளித்து கரைசலைக் கொட்டி கொதிக்க விட்டு எடுத்தேன். (கொதிக்கும் போது தேவையான அளவு உப்பு சேர்க்கவும்) அவ்வளவுதான்.

சொல்ல மறந்து விட்டேன். தாளிக்கும் பொழுது இரண்டு ஸ்ப்ரே பெருங்காயமும் அடித்தேனே…

2 thoughts on “ஏழே நிமிடங்களில் மிளகுக் குழம்பு செய்வது எப்படி ? – திருமலை ராஜன்

  1. cnsone January 5, 2014 at 4:08 PM Reply

    Will Look Nice for a Photograph!. But will Not Taste Nice if you do Not Add SALT!

    • BaalHanuman January 5, 2014 at 5:41 PM Reply

      கிண்டல் பிடித்த ஆசாமி சார் நீங்கள். ராஜனின் ரெசிபியை இப்போது சரி செய்து விட்டேன் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s