ஹேமா ஸ்ரீதரின் முடிவுரை – Black Moon


Black Moon – Sujatha is God.

sujatha55
ஒரு 13/14 வருஷம் முன்னாடி, அப்பா ஆஃபீஸ் லைப்ரரியில இருந்து எடுத்துட்டு வந்த ஒரு புக்கை அவரு அந்தண்டை போனப்புறம் படிச்சது தான் சுஜாதாவுக்கும் எனக்குமான முதல் அறிமுகம். எனக்கு ஒரு பொண்ணு பிறந்து அதுக்கு 9 அல்லது 10 வயசு இருக்கும் போது சுஜாதா கதையை படிக்க விடுவேனா? தெரியாது. ஆனா அப்பா விட்டார். (என்னை பொறுத்த வரை டீனேஜ் பசங்க தான் சுஜாதா கதை பெரும்பாலும் தொடலாம்!)

Sujatha_22

ஒரு சின்ன ஆச்சரியமா, அந்த முதல் கதை தாளிக்கும் ஓசை சொல்லியிருக்கும் “சின்னி இறந்திருந்தாள்“னு வர்ற கதை தான். என்ன புரிஞ்சதோ தெரியல அப்போ எனக்கு, ஆனா கதை பிடிச்சுருந்துது மட்டும் தெரிஞ்சது. எனக்கோ தமிழ் ஸ்கூல்லே பாடம் கிடையாது, ஆனாலும் எந்த பரீட்சைக்கு முன்னாலயும் வீட்ல ஒரு சுஜாதா புக் இருந்தா அதை படிக்காம போறதில்லேன்னு அன்னிக்கு ஆரம்பிச்ச சுஜாதா பித்து இன்னிக்கு வரைக்கும் விடாம துரத்திட்டு இருக்கு. 2 வருடம் முன்னாடி, ஃபிப்ரவரி 28 எவ்வளவு கண்ணீர், எத்தனை வலைப்பதிவுகள், எத்தனை விதமான அஞ்சலிகள்? இதுல எத்தனை பேருக்கு சுஜாதா சாரை நேரடியா பாத்தோ பேசியோ பழக்கம்? இந்த அளவுக்கு ஒரு ஃபேன் பேஸ் உருவாக்கி தந்ததுக்கு பல காரணங்கள்ல ரெண்டு பேர் தான் கணேஷ் வசந்த்.

அப்பப்போ ஆன்லைனில் கணேஷ் வசந்த் நாவலா தேடித் தேடி வாங்கிட்டு இருந்த எனக்கு, மெதுவா சாய்ஸ் குறைய ஆரம்பிச்சதும் கவலையா போச்சு. படிச்ச நாவலையே 100 தடவை படிக்கறவ தான்னாலும், புதுசா ஒண்ணும் வராது இனிமேங்கற வருத்தம் ரொம்ப அதிகமா இருந்தது. அப்போ தான் இந்த கிறுக்குத்தனமான ஐடியா வந்தது. சுஜாதா சாரோடயே கணேஷும் வசந்தும் பெருமாள் கிட்ட போயிட்டாங்கன்னு சும்மா இருன்னு சொல்ற புத்தி.. இன்னொரு பக்கம், எல்லாம் இங்க தான் இருக்காங்க, நீ தான் கண்ணை திறந்து பார்க்க மாட்டேங்கறேன்னு சொல்ற மனமும் மாறி மாறி சண்டை போட்டு கடைசில மனம் ஜெயித்து விட்டது. உங்களுக்கு சனி பிடித்தது. 

87ced-2124

1. கணேஷ் வசந்த் இருவரின் திறனுக்கேத்த கதைன்னு ஒண்ணு யோசிக்க ஒரு 4 நாளு ஆச்சு. 4 நாள் பூராவும் இதே யோசனை தான். சரி, knot யோசிச்சுட்டா, வேலை சுலபம்னு நினைச்சேன், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு அப்புறம் புரிஞ்சது.

Sujatha_1

2.ஒரு செஸ் கேம்ல பல மூவ் முன்னாடியே கணிச்சு விளையாடற மாதிரி ரொம்ப காம்ப்ளெக்ஸ் கேம் தான் த்ரில்லர் எழுதறது. இப்ப ஒண்ணு எழுதிட்டு பின்னாடி அதுவே மேலே நகர முடியாம பண்ணிடும் அபாயம் இருக்கு.

Sujatha_0

3.அடுத்த முட்டாள்த்தனம், சுஜாதா சாரோட விசால அறிவு எங்கே? என்னோடது எங்கே? இந்த 10 பார்ட் எழுதறதுக்குள்ளயே நான் ஒரு மினி என்சைக்ளோபீடியா ஆகிட்டா மாதிரி ஒரு ஃபீலிங்கி. கதைக்காக சார் ஆராய்ச்சி பண்ணி அறிவாளியானாரா, இல்ல அறிவாளியா இருந்ததால இப்படி கதை எழுதினாரா தெரியலை. ஆனா எனக்கு தாவு கழண்டு போச்சுங்கறத நீங்கல்லாம் நல்லா தெரிஞ்சுக்குங்க.  எழுத்து ஸ்டைல் சார் மாதிரி எழுதணும்னு ஐடியா இல்லை, ஆனா கணேஷும் வசந்தும் பேசும் பல விஷயங்களை அவர் பாதிப்பில்லாம யோசிக்க முடியல. சில பேர் ராஜேஷ்குமார் மாதிரி இருக்குன்னாங்க, தாக்கம்னு ஒண்ணு இருந்தே ஆகணும்னா அது சுஜாதா சாரோடதா இருந்தா எனக்கு பெருமை, சந்தோஷம் தான்.

Sujatha_19

4. இந்த கதை டைம்ல, ஆஃபீஸ் ஆணி, வீட்டு வேலை எல்லாமா என் பொறுமை ரொம்பவே குறைஞ்சுடுச்சு. வீட்ல எப்பவாச்சும் இருக்கும் போதும் ஒண்ணும் பேசாம எதையாவது உக்காந்து “ஆராய்ச்சி” பண்ணிக்கிட்டு இருந்தேன் (இணையம், லைப்ரரின்னு நிறைய சுத்தியாச்சு), ரங்குக்கு ஒரே போர். சார் நிச்சயம் அவர் குடும்பத்தை கவனிச்சுருப்பார், ஆனா நிச்சயம் ஒரு எழுத்தாளருக்கான தனிமை தேவைப் பட்டிருக்கும். வாழ்நாள் பூராவும் இந்த மாதிரி பிஸியா இருந்தவருக்கு என்ன மாதிரி அருமையான துணையா இருந்துருப்பாங்க சுஜாதா? நினைக்கவே மலைப்பா இருக்கு.

Sujatha_2

5. த்ரில்லர் கதை படிக்க எந்த அளவுக்கு கிக்கோ அந்த அளவுக்கு அதை எழுதறது கடி. படிக்கறவங்களுக்கு தான் சஸ்பென்ஸ், த்ரில் எல்லாம், எனக்கு க்ளைமாக்சை நோக்கி எப்படி நகர்றது, ஒவ்வொரு பார்ட்டும் வளர வளர, மெயின்டெயின் பண்ண வேண்டிய லாஜிக்கும் கான்டெக்ஸ்டும் பூதமா வளர்ந்து நின்னது தான் கண்ணுக்கு தெரிஞ்சது. அந்த வேலையை வார்த்தையால வர்ணிக்க முடியல, நீங்களே ஒரு கதை எழுதி பாருங்க, புரிஞ்சுரும்.

Sujatha_16

which is why, I think Sujatha is God. எனக்கு தமிழும் அதோட பலதரப்பட்ட விஷயங்களையும் கத்துக் குடுத்த சுஜாதா சாரும் எனக்கு ஒரு ஆசிரியர் தான். ரொம்ப நன்றி சார், I owe you a lot! 

3a9a6-sujatha

P.S: கதையை சார் அமரர் ஆன தினத்தில் (Feb 28) ஆரம்பித்து பிறந்த நாளன்று (May 3) முடிக்க வேண்டும்னு தான் முதல்லயே நினைச்சேன். ஒரு 15/16 பார்ட் வரும்னு எண்ணம். ஆனா வாரத்துக்கு 2 தடவை எல்லாம் போஸ்ட் பண்ண முடியல, வாரா வாரம் போட்டாலும் நிறைய பேருக்கு ஃபாலோ பண்ண கஷ்டமா இருந்துது. அதனால, இன்னும் கொஞ்சம் ப்ளான் பண்ணி வெச்சுருந்த சஸ்பென்ஸ் எலெம்ண்ட்ஸ் குறைச்சுட்டு, தோதான இடத்துலயே முடிச்சுட்டேன். அதனால், எனக்கு கொஞ்சம் கதை முடிவு பிடிக்கலை, முழுமையின்மை மாதிரி ஒரு ஃபீலிங்கி. இருந்தும் கதையை பொறுமையுடன் படித்து/ பின்னுட்டமிட்டு ஆதரவு தெரிவித்த (அடடா, கமெண்ட் போட்டதால தான் இவ மேலும் மேலும் எழுதிட்டான்னு நீங்க பயந்துராதீங்க..) அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

Advertisements

4 thoughts on “ஹேமா ஸ்ரீதரின் முடிவுரை – Black Moon

 1. R. Jagannathan January 3, 2014 at 12:36 PM Reply

  Appreciations to Ms. Hema Sridhar for a very nice try inspired by the immortal Sujatha. The writing style is quite similar – particularly Vsanth’s words, which breathe life to Sujatha’s stories. My congratulations, though honestly the final part went above my head! – R. J.

 2. K G Gouthaman January 4, 2014 at 4:06 AM Reply

  Enjoyed reading the story. Thank you.

 3. thanai thalaivi. January 4, 2014 at 10:38 AM Reply

  //கதைக்காக சார் ஆராய்ச்சி பண்ணி அறிவாளியானாரா, இல்ல அறிவாளியா இருந்ததால இப்படி கதை எழுதினாரா தெரியலை. // true,true

  //நீங்களே ஒரு கதை எழுதி பாருங்க, புரிஞ்சுரும்.// o.k. seiyaren.

  // இந்த கதை டைம்ல, ஆஃபீஸ் ஆணி, வீட்டு வேலை எல்லாமா என் பொறுமை ரொம்பவே குறைஞ்சுடுச்சு. வீட்ல எப்பவாச்சும் இருக்கும் போதும் ஒண்ணும் பேசாம எதையாவது உக்காந்து “ஆராய்ச்சி” பண்ணிக்கிட்டு இருந்தேன் (இணையம், லைப்ரரின்னு நிறைய சுத்தியாச்சு), ரங்குக்கு ஒரே போர். சார் நிச்சயம் அவர் குடும்பத்தை கவனிச்சுருப்பார், ஆனா நிச்சயம் ஒரு எழுத்தாளருக்கான தனிமை தேவைப் பட்டிருக்கும். வாழ்நாள் பூராவும் இந்த மாதிரி பிஸியா இருந்தவருக்கு என்ன மாதிரி அருமையான துணையா இருந்துருப்பாங்க சுஜாதா? நினைக்கவே மலைப்பா இருக்கு.// true. it is very hard to think of trying like this. hats off to you.

 4. anu January 26, 2014 at 2:53 AM Reply

  //படிச்ச நாவலையே 100 தடவை படிக்கறவ தான்னாலும், புதுசா ஒண்ணும் வராது இனிமேங்கற வருத்தம் ரொம்ப அதிகமா இருந்தது.// உண்மை..!! கற்றதும் பெற்றதும், ஸ்ரீரங்கத்து தேவதைகளும் இனி வராது என்று ஏங்கியது உண்மை…!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s