10-Black Moon – ஹேமா ஸ்ரீதர்


இதன் முந்தைய பகுதி…

கணேஷ்-வசந்த் உண்மையாகவே இருக்கிறார்கள் என்று பலர் நம்புகிறார்கள். ‘வசந்த்தை ஏன் கூட்டி வரவில்லை?’ என்று பொதுக்கூட்டத்தில் கேட்கிறார்கள். கணேஷ்-வசந்த்தின் ‘எதையும் ஒரு முறை‘ கதையை தொலைக் காட்சித் தொடராகத் தந்தார் சுஹாசினி. அண்மையில் அவரை ஒரு ரசிகர் நெருங்கி ‘நிருபமா… உங்களுக்கு வசந்த் ரொம்ப தொந்தரவு கொடுக்கிறானா..” என்று கேட்டதாகச் சொன்னார். இதையெல்லாம் என் எழுத்தின் வெற்றியாகக் கொள்வதைவிட எழுத்தின் பொறுப்பாகத்தான் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த மாதிரியான அனுபவங்கள் எல்லா எழுத்தாளர்களுக்கும் ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்களோ… நான் கடைப்பிடிக்கும் கொள்கை இது: வாசகர்கள் என் எழுத்தைத்தான் ரசிக்கிறார்கள். நேசிக்கிறார்கள். விமர்சிக்கிறார்கள். சில சமயம் திட்டுகிறார்கள். என்னை அல்ல. என்னை அவர்களுக்குத் தெரியாது. பாராட்டும் திட்டும் வேறு யாருக்கோ நிகழ்வதாகக் கொள்ள வேண்டும். இல்லையெனில், எழுத்து சொந்த வாழ்க்கையைப் பாதித்துவிடும்.

கணேஷின் கூச்சல் கேட்டு வசந்த் எட்டுக்கால் பாய்ச்சலில் உள்ளே ஓட, கண்ட காட்சியில் உறைந்தே போனான். அதிர்ச்சி, ஆச்சரியம், துக்கம், குழப்பம் என பல உணர்ச்சிகளின் குவியலாக இருந்தவர்களை “வாங்கடா $@!$*& பசங்களா!” என ஒரு குரல் வரவேற்க, வேறு வழியின்றி கணேஷின் துப்பாக்கி அவனை நோக்கி பதறியது.

ராஜேந்திர‌ன், “க‌ணேஷ்! எத்த‌னையோ கேஸ்ல‌ ஜெயிச்சுருக்கீங்க‌, என‌க்கு உத‌வியிருக்கீங்க‌.. ஆனா இது போல் ஒரு உத‌வி இனிமே நீங்க‌ளே நினைச்சாலும் ப‌ண்ண‌ முடியாதுன்னு தோணுது! ஊரில் இல்லாத சமயம் இரண்டு பயங்கர கொலை, என்ன ஏதுன்னு மேலிடத்து ப்ரெஷர்! இது மட்டும் கட்டுக்கு மீறி போயிருந்தா நம்ம நாடே இல்ல பாதிக்க பட்டுருக்கும்? இதுக்கு நான் உங்க‌ளுக்கு ஸ்பெஷ‌ல் பார்டி வெச்சே ஆக‌ணும்!” என்று எப்பொழுதையும் விட‌ ஜாஸ்தியாக‌ நெகிழ்ந்து கூறினார். அறை முழுக்க‌ வித‌ வித‌ பொக்கேக்க‌ள் குவிந்து இருந்த‌ன‌. ப்ரெஸ் மீட் முடிந்து ப‌த்திரிக்கைகார‌ர்க‌ள் எல்லோரும் இட‌த்தை விட்டு அக‌ல‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.

“கணேஷ்!”

“என்ன சௌம்யா, இப்போ பாட்டி என்ன சொல்றாங்க?”

“பாட்டிக்கு இன்னும் அச்சரியம் அடங்கலே. எனக்குமே நிறைய கேள்விகள் இருக்கு!”

“அப்படியா? கேளுங்க, சொல்லிட்டா போவுது!”

“அந்த ஸ்லைடிங் வால் திறந்த உடனே என்ன பாத்தீங்க? அப்படியே விவரிங்களேன்!”

“அந்த சுவத்துக்கு பின்னாடி ஒரு maze மாதிரி கொஞ்சம் வளைவுகள் இருந்தன. அதை தாண்டி போனா ஒரு கண்ணாடி சுவர், அதுக்கு பின்னே இருந்தது ஆண்டாள்! 4 ஆண்டாள்கள்!!”

“பாஸ் வசந்த் வசந்த்னு கத்தினதும் உங்க ஃபோனை வெச்சுட்டு ஓடினேனா, இந்த 4 ஆண்டாள்களும் விதம் விதமாக உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும்..! எல்லோரும் ஒரே மாதிரி! அவர்கள் நின்று கொண்டிருந்ததை பார்க்க துணிக்கடை பொம்மை தான் சட்டுனு நினைவுக்கு வந்துது!”

“உள்ள போய் பார்த்தீங்களா?”

“இல்ல இன்னும் உள்ளே போகறதுக்குள்ள நான் சந்தேகபட்ட ஆளே வந்து விட்டான். நிதின்! அவன் எங்களை அட்டாக் செய்வான் என எதிர்பார்த்து தான் நான் துப்பாக்கி எடுத்து சென்றது. அவன் தான் அதை எதிர்பார்க்கவில்லை என நினைக்கிறேன்..”

“ஆனா பாஸ் நிதின் மேல‌ உங்க‌ளுக்கு எப்ப‌டி ச‌ந்தேக‌ம் வ‌ந்துது? எனக்கு தெரிஞ்ச வரை அவ‌ன் ச‌ரியா தானே இருந்தான்?”

“அவ‌ன் ச‌ரியாக‌ தான் ந‌டித்தான், ஆனால் குடுத்த நூறு ரூபாய்க்கு நடிக்காமல் ஆயிரத்திற்கு நடித்து விட்டான் அதான் சொதப்பல். நான் எச்.ஆர் ஹெட்டிடம் பேசிட்டு வரும் போது எனக்கு அவர் மேல் எந்த சந்தேகமும் வரவில்லை. இந்த மாதிரி விஷயத்தில் பொய் சொன்னால் மாட்டிக் கொள்வோம்னு அவருக்கு தெரிந்திருக்காதா என்ன? அப்புறம் மென்ஸ் ரூமிற்குள் சென்ற போது ஃபோன் செய்ய முயன்றேன். சிக்னல் இல்லை. திடீரென நிதின் குரல் கேட்டது. சிக்னலோ இல்லை. ஆனால் இவன் ஃபோன் பேசுகிறான், அதிலும் ராஜி என்று சொல்கிறான். ரொம்ப கோ இன்சிடெண்ட் ஆகி விட்டது. அதுக்கு அப்புறம் வசந்திற்காக காத்திருந்த போது, ராஜியின் ஃபோட்டோவை கேண்டீன், ஜூஸ் ஷாப்பில் சிலரிடம் காண்பித்து கேட்ட போது ஒருவருக்கும் தெரியவில்லை. ஆனால் இவன் தினமும் கேண்டீனில் பார்ப்பேன் என்று உதார் விட ஆரம்பித்து விட்டான். ப‌ல‌ ச‌ம‌ய‌ம் offenders don’t realize they’re giving too much details. and we know that is because they know all the details!”

“அப்போ ராஜி நானோசாஃப்டுக்கு அப்புறம் எங்க தான் போனா?”

“அவள் வனிலாபேஸில் வேலைக்கு சேரவேயில்லை என்பது தான் உண்மை. அமெரிக்காவிற்கு ஆன்சைட் சென்றவள், வனிலாவில் இண்டர்வியூ செய்திருக்கிறாள். ஆனால் அங்கே சேராமல் தான் இந்த ப்ராஜக்டில் ஆர்வம் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறாள்!”

“இந்த ப்ராஜக்ட் தான் என்ன, எத்தனை பேப்பரில் படித்தாலும் எனக்கு விளங்கவேயில்லை!”

“என்ன சௌம்யா, கம்ப்யூட்டர் எஞ்சினியர் பேச்சா இது! moonங்கறது ஒரு சின்ன ஃபோன். சில விளம்பரம் கூட வந்துருக்கே! பெரும்பாலும் இளைஞர்களை டார்கெட் பண்ணி தயாரிச்ச இந்த ஃபோனில் இதோ இந்த சின்ன சிப்பில் சில லட்சம் ப்ரொக்ராம் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஸ்டோர் பண்ணலாம். இந்த ஃபோனோட டச் ஸ்க்ரீனை தொட தொட இந்த ப்ரொக்ராம்கள் சமிக்ஞைகளாக மாறி மூளையின் நியுரான்களுக்கு சிக்னல்களாக சென்று, அந்த ஆணைகளை நிறைவேற்ற ஆரம்பித்து விடுவோம்!”

“ஹிப்னாடிசம் மாதிரியா?”

“இல்லை! ஹிப்னாடிசத்தில் நமக்கு உணர்வு இருக்காது, அது ஒரு கட்டுப்பட்ட நிலை. இது அதை விட விபரீதமானது. இவர்களுடைய ப்ளானே, இந்த சிப்பில் ஆபத்தில்லாத ஆனால் முட்டாள்தனமான ப்ரொக்ராம்கள் மூலம் ஒருவரை நாளடைவில் அடிமுட்டாளாக மாற்றி விட முடியும்! தினமும் மணிக்கணக்கில் ஃபோனை தொட்டுக் கொண்டே இருக்கும் போது டோபமைன் லெவல் மெதுவாக குறைய தொடங்கி, prefrontal cortexல் திறன் வெகுவாக குறைய ஆரம்பிக்கும்! இந்தியா மாதிரி இளைஞர்கள் நிறைந்த நாட்டை விட இவங்களுக்கு ஏது பெட்டர் டார்கெட்?”

“ஓ!! உண்மையில் யாருடைய சதி இது?”

“அது பெரிய விஷயம், இரண்டு நாடுகளின் கை இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. பல ஊர் நாடு பரவி இருக்கும் பெரிய நெட்வர்க்கில் கட்டக்கடைசி ஆள் தான் நிதின் மாதிரி கோ‍ஆர்டினேட்டர். சென்னையில் மட்டுமே 4 பிரபல டாக்டர்கள், 10 நல்ல வேலையில் இருக்கும் எஞ்சினியர்கள் இது வரைக்கும் சிக்கியிருக்கிறார்கள்னா, இன்னும் எத்தனை பேரு இந்த பிரமிட்ல இருப்பாங்க? பல பேரு நிச்சயம் தப்பிச்சுடுவாங்க! இந்த விஷயம் இனிமேல் சட்ட சபை மேல்சபை ஐ.நா.ன்னு விரைவில் காணாமல் போய் விடும். ஏதோ நம்மால் ஆன அளவு பிரபல படுத்தியாச்சு!”

“இதெல்லாம் ஏன் நல்ல விதமா பயன் படுத்த மாட்டேங்கறாங்க? இது பத்தி தெரிஞ்சு உங்க கிட்ட சொல்ல வந்த ராஜி எப்படி இறந்தா?”

“அதை கண்டு பிடிக்கத் தான் உண்மையிலேயே தாவு கழண்டு விட்டது! எங்கள் இடத்துக்கு வந்த பின் ராஜி தண்ணீர் அருந்தினாள். அதில் ஏதும் விஷயமோ என்றால், நாங்களும் அதே நீரை குடித்தோமே! வசந்த் தான் தலைகீழாக நின்று கண்டு பிடித்தது!”

“அதை முழுக்க அதிர்ஷ்டம்னு தான் சொல்லணும் பாஸ்! யதேச்சையாக ஒரு மெடிக்கல் மிராக்கிள் நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. உடம்பில் சுரக்கும் சில ஹார்மோன்களின் அளவை பொறுத்து மருந்தை ரிலீஸ் செய்யும் கேப்சுயூல்ஸ் என்ற முறை! தைராய்டு நோயாளிகளுக்காக கண்டு பிடித்த இதை ஏன் இதற்கும் பயன் படுத்தி இருக்க முடியாது? பயமும் படபடப்பும் அதிகமாக‌, பிட்யூட்டரி க்ளான்ட் ஒரு அளவுக்கு மேல் கார்டிகோட்ரோபின் சுர‌ந்தால், கரைகிற மாதிரி விஷ மாத்திரை. சயனைடு குப்பி மாதிரி தானே தைரியம் வந்து கடிக்க தேவையில்லாம! இது ராஜிக்கே தெரிந்து இருக்காதுன்னு நினைக்கிறேன்..”

“அன்னிக்கு காலைல‌ என்ன‌ தான் ந‌ட‌ந்துருக்கும்?”

“ஆண்டாள் ரோபாட் நாம் நினைக்கிற‌ மாதிரி முழுக்க இயந்திரம் இல்லை. வெளிநாட்டில் வைத்து மனித மூளையை போலவே ஒரு செயற்கை மூளை, ஸ்டரக்சர் எல்லாம் அபாரமாக செய்து இருக்கிறார்கள். சின்ன குழந்தைக்கு எப்படி நாம் மனிதர்கள், பொருட்கள் எல்லாம் அடையாளம் காட்டுகிறோமோ அதே போல இந்த ரோபாட்டுக்கும் ஒரு ஐடென்டிடி உருவாக்கலாம். தேவையான போது இரேஸ் செய்து விட்டு புது ஐடென்டிடி தந்து விடலாம்! இதனால் ஒரே ஒரு ரோபாட்டை பல மனிதர்களுக்கு ஈடாக உபயோக படுத்தி moonஐ டெஸ்ட் செய்யலாம்.”

“ராஜி தன்னுடைய ரோபாட்டுக்கு அவளுடைய விருப்பமான ஆண்டாள் பேரை வைத்து ஒரு ஐடெண்டிடி தந்திருக்கிறாள். எங்களை சந்திக்க வரும் முன் நிதின் ஆட்கள் அவர்களை பிடித்து விட, இருவரும் தப்பி பிரிந்து விட்டார்கள். ராஜி திரும்பி போகவே இல்லை. ஆண்டாள் ராஜி சொல்லிக் கொடுத்த “விஷயங்களை” அப்படியே ஃபாலோ செய்ய ஆரம்பித்து விட்டாள். ராஜி த‌ந்த‌ செல்ஃபோன், ப‌ண‌ம், ப‌ர்தா, பெய‌ர், அப்பா, கேகே, இத்தாலி, யவனிகா நாங்கள் என‌ குட்டை வெகுவாக‌ குழ‌ம்பி விட்ட‌து!”

“இதுல பாவம் அவ அப்பா ஏன் மாட்டிக்கிட்டார்?”

“அது ரொம்ப சுலபம். மூளை திருடினதை வெளியே தெரியாம பாத்துக்க தான் அவரை உடனேயே மார்ச்சுவரிக்கு போய் பாடியை வாங்க சொல்லியிருக்காங்க, ஆனா அவரோ சொன்னபடி செய்யலை. பேப்பர்லயும் வந்துருச்சு! போட்டுட்டாங்க.”

“அப்போ ஆண்டாள் தன் செக்ரட்டரி ராதான்னது?”

“RAjeswari DHAnanjeyan தான் RADHA!” என்று நகுலன் பின்னாலிருந்து குரல் கொடுக்க, “கையை குடுங்க கணேஷ். முதல்ல உங்களை மட்டம் தட்டணும்னு ஒரு வெறி இருந்தது, ஆனா அதுக்கு கூட ஒரு தகுதி வேணுமே! நான் உங்களை விட ரொம்ப தூரத்துல இருக்கேன். சினிமாவில் கடைசியில் போலீஸ் வர்ற மாதிரியே ஆயிட்டுது!”

“சே சே.. நீங்க சில விஷயங்கள் கவனிக்க தவறிட்டீங்க, அவ்ளோ தான்! இப்ப தானே சேந்துருக்கீங்க, உங்களுக்கு இன்னும் பல கேஸ்கள் வரும்! பெரிசா நினைக்காதீங்க!”

“கடைசியா ஒரு கேள்வி.”

“நீங்க ஜர்னலிஸ்டா ஆகிருக்க வேண்டியவங்க! அவங்களே இதுல பாதி தான் கேட்டாங்க! சரி கேளுங்க!”

“இல்லை எனக்கு வக்கீல் தான் பிடிச்சுருக்கு.”

“நான் அம்பேல்! பாஸ் பாஸ்!!” கணேஷ் எப்போதோ அவர்களை தனிமையில் விட்டு கிளம்பியிருந்தான்.

நிறைவடைந்தது (பொறுமையுடன் பின்தொடர்ந்த உங்கள் அனைவருக்கும் நன்றி)

ஹேமா ஸ்ரீதரின் முடிவுரை விரைவில் உங்கள் பார்வைக்கு…

 கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.

Advertisements

One thought on “10-Black Moon – ஹேமா ஸ்ரீதர்

  1. Sridharan January 1, 2014 at 11:47 PM Reply

    The story was very nice, well written in Sujatha’s style.
    Good work. Keep it up.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s