சுஜாதாவும் நானும் – இரா. முருகன்


சுஜாதா சார் பற்றி. அவரோடு கொண்டிருந்த குரு-சிஷ்ய உறவு பற்றி நிறைய எழுதி விட்டேன். இனியும் எழுதினால் பாசாங்காகி விடக்கூடிய அபாயம் உண்டு. அவர் என்னை பாசிட்டிவ் ஆகப் பாதித்தவர். அதே சமயம், அவர் எழுத்து அவரை மீறிக் கடக்கவும் எனக்கு உத்வேகம் அளித்த ஒன்று. முன்பு ஒரு பேட்டியில் சொல்லியது போல, சுஜாதா என்ற படைப்பாளி மேல் எனக்கு பக்தியும், அவர் செய்யாததைச் செய்ய ஒரு வேகமும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது. அவர்மேல் வைத்த பக்தி பின்னாட்களில் என் அறிவியல் படைப்புகளின் வடிவத்தில் வெளிப்பட்டது. அறிவியலை எளிமையாக, சுவாரசியமாகத் தமிழில் எழுத சுஜாதா தமிழ் தவிர வேறே மார்க்கம் கிடையாது.

sujatha_portrait

சுஜாதா மாதிரி எழுதறான் என்று இசையும் வசையும் எனக்குக் கிட்ட என் கம்ப்யூட்டர் கட்டுரைகளும் அறிவியல் புனைகதைகளும் முக்கியக் காரணம். சிறுகதை, நாவலில் சுஜாதா தொடாத மேஜிக்கல் ரியலிசம், காலம் ஒரு பரிமாணமாகக் கதை சொல்வது என்று நான் சுஜாதாவை விட்டு விலகியே நடக்கிறேன்.

https://www.nhm.in/img/arasur_vamsam_b.jpg

அரசூர் வம்சம் வெளிவந்தபோது அவர் இருந்தார். நாவலை ரசித்ததோடு, தான் தயாரித்த சிறப்பு குமுதம் ஒன்றில் அதிலிருந்து ஒரு முழு அத்தியாயத்தைப் பிரசுரித்து, தமிழில் வாழையடி வாழையாக முன் தலைமுறை எழுத்தை உள்வாங்கிக் கொண்டு முகிழும் உரைநடைக்கு அந்த எழுத்தை உதாரணம் காட்டியிருந்தார். அந்தப் பெருந்தன்மையும், அன்பும் அவரைத் தவிர வேறு யாரிடமும் தென்பட்டதில்லை. அவர் மகான். நிச்சயமாக.

–நன்றி தென்றல் மாத இதழ் – ஜனவரி 2014

தொடர்புடைய பதிவு:

இரா.முருகன் — ஓர் எளிய அறிமுகம்

இரா.முருகனின் ‘அரசூர் வம்சம்’

இலக்கிய உலகில் சுஜாதாவின் வாரிசு யார்?
சுஜாதாவே ஒருமுறை சொல்லியிருக்கிறார் இருவரைப் பற்றி…

ஒருவர் இரா.முருகன்.

இன்னொருவர் ரஞ்சன்.

Advertisements

One thought on “சுஜாதாவும் நானும் – இரா. முருகன்

  1. R. Jagannathan December 30, 2013 at 12:13 PM Reply

    like to know about ‘Ranjan’. – R. J.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s