8-Black Moon – ஹேமா ஸ்ரீதர்


இதன் முந்தைய பகுதி…

சுஜாதா பற்றி ஜெ…

எழுத்தாளர்கள் எல்லாரையுமே எனக்குப் பிடிக்கும். அதில் நான் ஓவியம் வரைவதற்கு நிறைய களங்கள் அமைத்துத் தந்த சுஜாதாவை மிகவும் பிடிக்கும்.  சில கதைகளுக்கு ஓவியம் வரைவதே கடினமாக இருக்கும். ஆனால் இவருடைய கதைகளைப் படித்தீர்கள் என்றால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துப் படமாக வரைய முடியும். அந்த மிளிர்ச்சி இவருடைய கதைகளில் இருக்கும்.

“எந்த ராஜியை காணோம்னு தெரிஞ்சுக்கலாமா?”

“யார் சார் நீங்க? என்ன கேக்கறீங்க?”

“இல்ல இப்ப என்கிட்ட சொல்லாம எங்கயும் போக மாட்டான்னு சொன்னீங்களே.. யார் அந்த ராஜி?”

“நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல. யார் நீங்க, பில்டிங்குள்ள வர பாஸ் எப்படி கிடைச்சுது?”

“பாருங்க, நான் உங்களுக்கு உதவ தான் கேக்கறேனே தவிர, நீங்க என்னை பாத்து பயப்பட தேவையில்ல. நீங்க இப்ப ராஜின்னு சொன்னீங்க, அழுதுட்டு இருந்தீங்கன்னு உங்க நாஸல் வாய்ஸ் சொல்லுது. பயப்படாம சொல்லுங்க, I’m Ganesh, lawyer.” என்று தன்னுடைய விஸிட்டிங் கார்டை நீட்டினான்.

“அப்படியா! சாரி நீங்க ஏதோ தவறா கேட்டுருக்கீங்க, எனக்கு ராஜின்னு யாரையும் தெரியாது. நான் அழவும் இல்லை. என‌க்கு நிறைய‌ வேலை இருக்கு, வ‌ர‌ட்டுமா?”

“ஷ்யூர், உங்க வேலை, நீங்க தானே பாத்தாகணும்!”

வளாகத்தை விட்டு வெளியே வந்த கணேஷ் காரை ஓரங்கட்டிக் கொண்டு வசந்திற்கு ஃபோனை போட்டான்.

“சொல்லுங்க பாஸ்!”

“ராமச்சந்திரனை பாத்தாச்சா? எங்கருக்கே இப்போ?”

“பாத்தாச்சு பாஸ்.. வீட்டுக்கு போலாம்னு ஆட்டோ பிடிச்சேன். எங்க வரணும் சொல்லுங்க?”

“மகனே உன் சம்ர்த்து. அப்படியே திரும்பி OMR சாலைல இருக்க‌ அரவிந்த் தியேட்டர் வாசலுக்கு வா.”

“உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, சீக்கிரம் வா, வனிலாபேஸ் ஆளுங்க 7 மணிக்கு வெளில வர ஆரம்பிச்சுருவாங்க!”

“என்ன பாஸ், எதுக்கு இங்க நிக்கறீங்க, படமா பாக்க போறோம்?”

“ராமச்சந்திரனை பாக்க போனது என்னாச்சு?”

“அவர ரொம்ப தாஜா பண்ணி விசா, OCI எல்லாம் துப்புரவா தேடி பாத்தாச்சு. ஆண்டாள் பேர்ல ஒரு என்ட்ரியும் இல்ல. சரின்னு அவ அப்பா பேர்ல ஏதும் விபரம் கிடைக்குமான்னு பாத்தேன். விஷ்ணுங்கற பேர்ல ஓராயிரம் பேரு இருக்கானுங்க. விஷ்ணு, விஷ்ணுகாந்த், விஷ்ணுதேவ், விஷ்ணுராம்.. வித வித விஷ்ணு! ஆனா ஒருத்தரும் இத்தாலி பிரஜையோ, வேலை செய்ய பர்மிட்டோ வெச்சுக்கல! எல்லாம் வெறும் schengen visa தான்! அந்த பொண்ணும் எதை கேட்டாலும் செக்ரட்டரிக்கு தான் தெரியும்ங்குது!”

“ஒண்ணும் சந்தேகம் வரலையே?”

“இல்ல, வ‌ழ‌க்க‌ம் போல‌ ச‌மாளிச்சாச்சு!”

“வ‌ச‌ந்த் இற‌ங்கு! அவ‌ன் தான் நான் சொன்ன‌வ‌ன்.”

அவ‌ன் க‌ம்பெனி ப‌ஸ்ஸில் ஏறாம‌ல் ஏதோ கால் போன‌ போக்கில் ந‌ட‌க்கிறார் போல் ந‌ட‌ந்து ஒரு காஃபி ஷாப்பிற்குள் நுழைந்து அங்கிருந்த‌ வாஷ் ரூமிற்குள் செல்ல‌வும் வ‌சந்த் அவ‌ன் பின்னேயே சென்று தன்னுடைய‌ க‌ராத்தே அறிவை காட்டத் துவ‌ங்கினான்.

“வ‌ச‌ந்த்! வ‌ச‌ந்த்! நிறுத்துடா!”

“ம‌ரியாதையா கேட்டு தான் ப‌தில் வ‌ர‌ மாட்டேங்குதே பாஸ்?”

அவ‌ன் மூக்கு உடைந்து ர‌த்த‌ம் வ‌ர‌த் துவ‌ங்கி இருந்த‌து. “என்ன‌டா அவ‌ச‌ர‌ம் உன‌க்கு? மிஸ்ட‌ர், ஸாரி ராஜின்னு யாரை தேட‌றீங்க‌ன்னு கேக்க‌ தான் வ‌ந்தோம்.. சின்ன‌ பைய‌ன் கொஞ்ச‌ம் அவ‌ச‌ர‌ப்ப‌ட்டுட்டான்!” என்று க‌ர்சீப்பை நீட்டினான். அவ‌ன் முறைத்துக் கொண்டே, “உங்க‌ளுக்கு ஃபோன் ப‌ண்ண‌லாம்னு தான் சார் ப‌ஸ் ஏறாம‌ வ‌ந்தேன். க‌ம்பெனிக்குள்ள‌ நிறைய‌ கேம‌ரா ஃபிக்ஸ் ப‌ண்ணியிருப்பாங்க‌, அதான் ஒண்ணும் பேச‌லை, அதுக்குள்ள‌ மூக்கை உடைச்சுட்டீங்க‌?”

“சும்மா சீன போடாதய்யா.. லேசா தான் தட்டிருக்கேன், ஒண்ணும் உயிர் போயிடாது. பதிலை சொன்னினா நல்லது!”

“சொல்றேன்.. நான் ராஜின்னு ஒரு பொண்ணை லவ் பண்றேன். அவளை 4 நாளா காணலை. அவ போற எல்லா இடத்துலயும் விசாரிச்சுட்டேன், யாருக்குமே தெரியலே! உங்களுக்கு ஏதும் தெரியுமா?”

“இந்த பொண்ணா பாருங்க?”

“சார் என்ன இது!! ராஜி ஏன் இப்படி இருக்கா? அவளுக்கு என்னாச்சு சார்??”

“இறந்துட்டாங்க. நேத்து விடிகாலைல. பேப்பர் பாக்கல?”

அவன் எதையும் காதில் வாங்க முடியாமல் பெருங்குரலெடுத்து அழத் துவங்கினான். “பாருங்க, நீங்க இப்படி சத்தம் போட்டு ஊரை கூட்டிட்டா நமக்கு தான் பாதிப்பு! உங்களுக்கு ராஜியை பத்தி என்ன தெரியும்னு சொன்னீங்கன்னா கொலையாளியை கண்டுபிடிக்க உதவியா இருக்கும்!”

“கொலையா? அடப்பாவிகளா.. அவளை கொல்ல எப்படி சார் மனசு வரும்! என் உயிரே போயிடுச்சே சார்..”

“கொஞ்சம் அமைதி படுத்திக்குங்க! நிதானமா சொல்லுங்க.”

“நான் இந்த கம்பெனில வேலைக்கு சேர்ந்த நாள் ராஜியை பாத்தேன் சார், அன்னிலருந்து எனக்கு அவ தான் தெய்வம். அவள மாதிரி அழகு உண்டா? அவ கிணத்துல குதின்னா குதிச்சுருவேன் சார்.. அடிமை! ராஜியின் தாசானுதாசன்!!”

“சர்தான். அவளும் உன்னை காதலிச்சாளா?”

“அவளுக்கு என்னை தெரியவே தெரியாது! அவ டெக்னிகல் டிபார்ட்மென்ட், நான் எச்.ஆர். எனக்கு அவங்க பில்டிங்குள்ள போகவே அனுமதி கிடையாது. கஃபேடேரியால தினமும் பார்ப்பேன். என்னை பார்த்து ரொம்ப மெலிசா ஒரு புன்னகை செய்வா சார்.. எவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா? அது தான் சார் உண்மையான சூர்ய உதயம்!”

வசந்த் கணேஷை பார்த்து பைத்தியம்-‍கிட்ட-மாட்டிக்கிட்டோம்-வாங்க‍-கிளம்பலாம் என்று பார்த்தான். “பின்ன உங்க கிட்ட சொல்லாம எங்கயும் போக மாட்டான்னு சொன்னீங்க?”

“அது என் ஃபிரண்ட் கிட்ட சும்மா சொல்லி வெச்சுருக்கறது சார். யார் கிட்டயாச்சும் சொல்லி அழலாமேன்னு சொன்னேன். நீங்க கேட்டுட்டீங்க!”

“சரி நீ இங்க எவ்ள நாளா வேலை செய்யறே?”

“ஒரு 7 மாசம் ஆவுது!”

“7 மாசமா ராஜியும் இங்க தான் வேலை பாத்தா?”

“ஆமா சார்! தினமும் 8.25 பஸ்ஸுல வருவா. சுடிதார் தான் போடுவா. திரும்பும் போது ஆனா மெட்ரோ பஸ் இல்லனா ஆட்டோல தான் பெரும்பாலும் போவா. அவளும் அவ ஃப்ரெண்டும் சேர்ந்து ரூம் எடுத்துருந்தாங்க அண்ணா யூனிவர்சட்டி கிட்ட ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல! டெய்லி அவளை ஹாஸ்டல் வரைக்கும் ஃபாலோ பண்ணிட்டு தான் நானும் கிளம்புவேன்! போன வெள்ளிக்கிழமை பாத்தேன் கடைசியா.. ஏன் சார் போலீஸ் சிக்கலாகிடுமா?”

“அது நீ அவளை என்ன பண்ணியோ அதை பொறுத்தது!”

“சார் நான் அவளோட ரசிகன் தான்.. அவளை கொலை எல்லாம் நான் ஏன் சார் பண்ணுவேன்! விட்டுருங்க ப்ளீஸ்! என்னோட மேனஜருக்கு தெரிஞ்சா வேலைக்கே உலையாயிடும்..”

“அதெல்லாம் ஒண்ணும் ஆவாது.. எங்க கூட வந்து அவங்க தங்கிருந்த இடத்தை காட்டறீங்களா?”

“ராஜி குடும்பம் பத்தி உங்களுக்கு ஏதும் தெரியுமா?”

“குடும்பம்னு யாரும் இல்லியே? அவளும் அவ ரூம்மேட்டும் தான் எப்போவும் சேர்ந்தே இருப்பாங்க.. யாரும் ரூம்ல வந்து தங்கியும் நான் பாத்தது இல்ல!”

அவன் காட்டிய ஹாஸ்டல் பெரிய கட்டிடமாக அடர்ந்த மரங்களும் விசாலமான காரிடாருமாக ரொம்ப தோரணையாக இருந்தது.

“இந்நேரத்துக்கு உள்ள விடுவாங்களா பாஸ்? லேடீஸ் ஹாஸ்டலாச்சே?”

“கேட்டு பாக்கலாம், இல்லனா ராஜேந்திரனுக்கோ நகுலனுக்கு சொல்லலாம்!”

குண்டான வயதான வார்டனை எதிர்பார்த்து சென்றால், அங்கு யுவதி ஒருத்தி ஹோட்டல் ரிஸப்ஷனிஸ்ட் தோற்றத்தில் இருந்தாள்.

“யெஸ்?”

“எங்க ஃப்ரெண்ட் நாளைக்கு சென்னை வர்றாங்க, இங்க ஒரு ரூம் வேணும். பாக்கலாமா?”

“ஷ்யூர்! முதல் மாடில இப்போ தான் ஒரு ரூம் காலியாச்சு, பாக்கறீங்களா?”

“சார்! இது ராஜியோட ரூம், என்ன காலியா இருக்குது?”

“கண்டிப்பா இதானா? நல்லா தெரியுமா?”

“என்ன கேக்கறீங்க சார்! ரூம் நம்பர் 1423 எனக்கு நல்லா தெரியும். அதோ பாருங்க அந்த ஆலமரத்தடில தான் தினமும் அவளை கடைசியா பார்ப்பேன், இந்த ஆணில வந்து தான் ஹேன்ட்பேக்கை மாட்டுவா.. ஒரு சாமானையுமே காணோம்?”

மீண்டும் கீழே வந்து “மிஸ், இந்த ரூம்ல முன்னாடி யாரு இருந்தாங்கன்னு சொல்ல முடியுமா? சும்மா ஃபீட்பேக் கேக்கலாமேன்னு!”

“அந்த ரூம் கம்பெனி லீஸ்ல இருந்துது சார், ஆள் பேரு தனியா கேக்கறது இல்லெ! முக்கால்வாசி சாஃப்ட்வேர் பெண்கள் தான் இருப்பாங்க‌ நீங்க கவலையே பட வேண்டாம், இது உங்க வீடு மாதிரியே தான், எந்த ரூல்ஸும் கிடையாது! Only drugs not allowed!”

“சரியா போச்சு, தேங்க்ஸ்! நாளை வர்றோம்!”

“பாருங்க, உங்க பேர் என்ன, ஹாங் நிதின்! தேவைப்படும் போது கூப்பிடுவோம், வரணும் என்ன? ஊரை காலி பண்ணிட்டு ஏதும் போயிராதீங்க!”

நேப்பியர் பாலம் தாண்டும் வரை அமைதியாக வந்த கணேஷ், “வசந்த், உனக்கு ஒரு சவால். நான் ஒரு ஃப்ரேஸ் சொல்வேன். உனக்கு என்ன தோணுது சொல்லு பார்ப்போம்!”

“அடியேன் வெயிட்டிங். மணி 10 ஆனாலும் என்ன சின்ஸியர் பாத்தீங்கல்ல நானு?”

“Black Moon”

தொடரும்…

பிரபாகர் என்ற ஒரு தொழிலதிபரின் மனைவி ஷைலஜா. பிரபாகர் இந்தப் பெண்ணை சட்டென்று மணந்து கொண்டு வந்துவிடுவார். அந்தப் பெண் கல்லூரி நேரத்தில் தயாள் என்பவரைக் காதலித்திருப்பார். கல்யாணமாகி எட்டு வருடம் கழித்து தயாள் மறுபடி ஷைலஜாவைச் சந்தித்து தன்னுடன் வந்துவிடுமாறு கேட்பான். மணவாழ்க்கையில் ஏற்பட்டக் கசப்பாலும் குழந்தையின்மையினாலும் இருக்கும் ஷைலஜா இதனால் சிறிது குழப்பமடைவார். கணவருக்கு இந்த விஷயம் தெரிந்துவிடும். ஒரு நாள் பெங்களூர் செல்லும்போது மனைவியைக் கண்காணிக்க ஒருவரிடம் கூறிவிட்டுச் செல்வார்.

ஷைலஜாவும் அன்று கடற்கரையில் தயாளை சென்று சந்திப்பாள். மறு நாள்  இரவு சென்ட்ரல் நிலையத்துக்கு வரும்படி அவன் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவான். இந்த விஷயம் பெங்களூரில் இருக்கும் கணவனுக்குத் தெரிவிக்கப்பட்டுவிடும். அவர் அடுத்த நாள் காலை விமானத்தில் சென்னை வரத் தயாராகி விடுவார். இதனிடையில் சென்னையில் வீட்டில் ஷைலஜாவுக்கு ஒரு கடிதம். கணவனுக்கு தெரியாமல் இருக்க 10000 ரூபாய் தரவேண்டுமென. இவள் குழம்பிப்போய் கணேஷை உடனே வரச் சொல்வாள்.

கணேஷ் வசந்த் வந்து இவளிடம் பேசி சில விஷயங்களைத் தெளிவாக்கி விடுவர். மறு நாள் தெளிவாக கணேஷிடம் பேசும் ஷைலஜா வேலைக்காரர்களைச் சீக்கிரம் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தானும் புறப்படுவார். திரும்பி வரும்போது கணவர் வீட்டிலிருப்பார். வாக்குவாதம் முற்றி மனைவியைக் கொன்று விட்டு தற்கொலை மாதிரி அனைத்தையும் மாற்றிவிட்டு திரும்ப பெங்களூர் சென்றுவிடுவார். மாலை ஷைலாஜா கேட்டுக்கொண்டபடி அவரைச் சந்திக்க வரும் கணேஷ் வசந்த் அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்ப்பார்கள். போலீஸுக்குத்  தெரிவிப்பார்கள்.

ஏறக்குறைய எல்லாம் தற்கொலை என உறுதி செய்யப்படுமுன் வசந்த் சில விஷயங்களைக் கண்டுபிடித்துச் சொல்வார். இவர்கள் ஒரு காகிதத்தில் வரிசையாக என்னென்ன நடந்திருக்குமெனக் கண்டுபிடிப்பார்கள். சரியாகப் பொருந்திவரும். பிரபாகரை சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்றால் அங்கு அவரும் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பார். கணேஷ் போலீஸுக்கு தொலைபேசியில்மறுபடியும் கணேஷ் என்பார். இரண்டு கொலையும் ஒரே மாதிரி ஆனால் வேறு வேறு ஆட்களால் செய்யப்படும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s