7-Black Moon – ஹேமா ஸ்ரீதர்


இதன் முந்தைய பகுதி…

சுஜாதா பற்றி ஜெ…

சுஜாதா ஒரு மிக அருமையான மனிதர். மற்றவர்களை பாராட்டத் தயங்கமாட்டார். அவரது எழுத்து புதுமையானது. அந்த பக்கம் ஒரு ஜெயராஜ் போய்க் கொண்டிருந்தார் என்று எழுதுவார். எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரின் வட்டார வழக்கைத் தெரிந்து கொண்டு வருவார். குமுதத்தில் சுஜாதா எழுதிய ‘நடு வானத்தில்‘ என்ற சித்திரக்கதை தொடருக்கு நான் வரைந்ததைப் பலரும் பாராட்டினர்.  ஃபாரீன் ஸ்டாண்டர்டுக்கு இருக்கிறது என்றார்கள்.

“யார் ஆண்டாள்?”

“அந்த கதையை அப்புறம் சொல்றேன்.. இப்போ பேச நேரமில்லை!” என கத்திக் கொண்டே வண்டியை எடுத்துக் கொண்டு ம‌றைந்து விட்டார்க‌ள்.

ஓட்ட‌ல் லாபி ஒரு ஊசி விழுந்தாலும் கேட்கும் அளவு அமைதியாக‌ இருந்த‌து ஒரு மாதிரியாக‌ இருந்த‌து வ‌ச‌ந்துக்கு. “ஹலோ! இங்க ரஸியான்னு ஒரு பொண்ணு.. தங்கிருக்காங்களா? அவங்களை பாக்கணும்..”

“ம்ம்… அப்படி யாரும் இல்லையே சார்?”

“ஓ.. சாரி! எனக்கு அவங்க ஃபுல் நேம் தெரியாது.. முஸ்லிம் பேருல வேற யாரும் பொண்ணு..”

“நீங்க யார் சார்?”

“நாங்க கமிஷனர் ஆபீஸ்ல இருந்து வர்றோம். எங்க ஃப்ரெண்ட் இங்க இருக்காங்கன்னு பாக்க வந்தோம்.. முழுப்பெயர் தெரியாது, நாங்க ஒண்ணும் சந்தேக ஆசாமிங்க இல்ல! கொஞ்சம் பாத்து சொல்லுங்க!”

“ஓஹோ.. ரஸியான்னோ வேற முஸ்லிம் பேருலயோ ஒரு பொண்ணும் இல்ல, ஆனா பர்தா போட்டுட்டு ஒரு பொண்ணு இருக்காங்க‌. அவங்க பேரு கூட ஆண்டாள்!”

“அவங்களே தான்! எந்த ரூம்?”

“ரஸியான்னீங்க? 315ல இருக்காங்க!”

315 காரிடார் ஓரமாக இருந்தது. “டொக் டொக்..” 5 நிமிடம் ஆகியும் கதவு திறக்கவில்லை. “உடைச்சுடலாமா பாஸ்?” க‌ணேஷ் ப‌தில‌ளிப்ப‌த‌ற்குள் க‌த‌வு திற‌ந்த‌து.

“ஹ‌லோ க‌ணேஷ் வ‌ச‌ந்த்! நீங்க எப்படி இங்க‌?” என்று ரொம்ப‌ சாதார‌ண‌மாக‌ அவ‌ள் கேட்க‌வும், “வ‌க்கீல் தொழிலை விட்டுட்ட‌ம். ஹ‌வுஸ் கீப்பிங் ப‌ண்ண‌லாம்னு!” என்றான் வ‌ச‌ந்த் காட்ட‌மாக‌.

“ஓ ரிய‌லி? எப்ப‌டி..” என்று ஆண்டாள் ப‌திலுக்கு கிண்ட‌ல் அடிக்க‌ ஆர‌ம்பிக்க‌,

க‌ணேஷ் தான் இடைம‌றித்து “வ‌ச‌ந்த்! நாம‌ளா ஒரு ப்ரிகாஷ‌னுக்கு தான் வ‌ந்தோம், அவ‌ங்க‌ளை ஏன் க‌டுப்ப‌டிக்க‌றே? ஆண்டாள், கொஞ்ச‌ம் உள்ள‌ போய் பேச‌லாமா?”

“ஷ்யூர்!”

“டிவியில் ஒரு ப‌ர்தா போட்ட‌ பெண்ணிட‌ம் வ‌ம்பு செய்தாங்க‌ன்னு நியூஸ் பாத்துட்டு அது நீங்க‌ தான்னு ப‌த‌றி ஓடி வ‌ந்தோம். நீங்க‌ ஒண்ணும் வெளில‌ போக‌லையே?”

“அப்ப‌டியா!! என்னைத் தான் தேடுறாங்க‌ அப்போ! இப்போ என்ன‌ செய்ற‌து?”

“கிள‌ம்புங்க‌, எங்க‌ கூட‌!”

“ச‌ரி வாங்க‌ போலாம்! எங்க‌ போறோம்?”

“இருங்க‌ உங்க‌ டாக்குமெண்ட்ஸ் எல்லாம் வேணாமா? முக்கிய‌மானதை ம‌ட்டும் சீக்கிரமா எடுத்துக்குங்க‌!”

“என்ன‌ டாகுமெண்ட்ஸ்?”

“பாஸ்போர்ட்.. விசா பேப்ப‌ர்ஸ்..”

“என் கிட்ட‌ எதுவுமே இல்லையே! எல்லாம் ராதா தான் வெச்சுருந்தா!”

“என்ன‌து! என்ன‌ங்க‌ இது? இப்போ நீங்க‌ போலீஸை பார்த்தாலும் ஓட‌ணும்! ச‌ரி பார்ப்போம் வாங்க‌!”

“எங்க பாஸ் கூட்டிட்டு போறோம்?”

“யோசிக்கறேன்!”

“நம்ம வீட்டுக்கு முடியாது.. ஈஸியா விஷயம் தெரிஞ்சுரும். சௌம்யா கிட்ட கேட்டு பாக்கலாமே?”

“சௌம்யாவா?”

“வேற வழி இல்ல பாஸ்! ஹலோ சௌம்யா! நான் தான் வசந்த் பேசறேன்!”

“எந்த வசந்த்?”

“என்னங்க என்னை எப்படி மறக்க முடியும்! கணேஷ் ஜூனியர் வசந்த்! உங்க கிட்ட ஒரு உதவி கேக்கலாம்னு..”

“ஓஹ். அதானே உதவி வேணும்னா கூப்புடுவீங்க தேவையில்லனா நடு ரோட்டுல விட்டுட்டு ஓடிடுவீங்க!”

“அடடா.. என்னங்க கோவமா? உங்க காது சிவக்கறது இந்த சின்ன ஃபோன் வழியாவே தெரி..”

“க‌ட் இட். என்ன‌ உத‌வி சொல்லுங்க‌!”

“உங்க‌ வீட்டுக்குக்கு தான் வந்துட்டு இருக்கோம். வ‌ந்து சொல்றோம்!”

“என் கூட என் பாட்டி இருக்காங்க, அவங்களுக்கு ராஜி விஷயமெல்லாம் தெரியாது, பாத்து பேசுங்க!”

அடையாறின் எல்லா சந்து பொந்துகளும் தெரியும் என அலட்டும் வசந்துக்கு இந்த வெங்கடேசன் குறுக்கு தெரு இருந்தது ஆச்சரியமாக இருந்தது. வேப்பமரங்கள் அடர்ந்த அந்த தெருவில் சென்னைக்கு சம்பந்தமில்லாத திடீர் குளுமை. காலிங் பெல் “ஓம் நமோ நாராயணாய” எனக் கூவியது.

“வித்தியாசமா இருக்கில்ல பாஸ்?”

“யாருங்க வேணும்?” வேலை செய்யும் பெண்மணி போல் ஒருவர் ஜன்னல் வழியாக கேட்கவும்,

“சௌம்யா ஃப்ரெண்ட்ஸ், வர்றோம்னு சொல்லியிருந்தோம்!”

“இருங்க வர சொல்றேன்!” என்று உள்ளே மறைந்து விட்டார்.

“என்ன பாஸ் நம்மளை பாத்தா திருடன் மாதிரியா இருக்கு? திறக்காமலே உள்ளே போறாங்க?”

“நம்மளைன்னு ஏன் எங்களை சேர்க்கறே, உன்னை பார்த்து தான் அந்த ரியாக்ஷ‌ன்..”

“வாராதீங்க பாஸ்! வாங்க வாங்க சௌம்யா, என்ன ஒரு பேங்க் ரேஞ்சுக்கு உங்க வீடு செக்யூரா இருக்கு?”

“ஒரு 4 மாசம் முன்னாடி பாட்டி எவனோ ஒருத்தனுக்கு தண்ணி குடுக்க கதவை திறந்து சில சாமானை திருடிட்டு போயிட்டான். அதுல இருந்து தான் இந்த கெடுபிடி. உள்ள வாங்க..” என்றவள் ஆண்டாளை வித்தியாசமாக பார்த்தாள்.

“சொல்லுங்க என்ன விஷயம்?”

“உங்க பாட்டி..”

“இப்போ தான் வாக்கிங் போனாங்க..”

“ஓகே! இவங்க ஆண்டாள், எங்க ஃப்ரெண்ட். வெளி நாட்டுல இருந்து அவங்க அப்பாவை தேடி வந்துருக்காங்க, வந்த இடத்துல அப்பாவை கண்டு பிடிக்க முடியலை, அவங்க மேல கொலை முயற்சி வேற நடக்குது. அதான் பாதுகாப்பான ஒரு இடம் வேணும்னு..”

“ஹாஸ்டல் எதுலயாவது..”

“அதை ஏன் கேக்கறீங்க” என்று ஆண்டாளின் கதையைக் கூற‌ “என்னது! என்ன கணேஷ், இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க? இவங்களை இங்க தங்க வெச்சா நாளைக்கு நானுமில்ல பிரச்சனைல சிக்குவேன்? என் பாட்டியை விட ஒரு ஹாஸ்டல் வார்டனே மேல், தெரியுமா?”

“உங்களுக்கு பிரச்சனை ஒண்ணும் வராம பாத்துக்க வேண்டியது எங்க பொறுப்பு. உங்க பாட்டியை சமாளிக்க வசந்த் இருக்கானே, பேசியே கவுத்துருவான்! ப்ளீஸ்..”

“பாட்டிக்கு ஓகேன்னா எனக்கு ஒண்ணுமில்லை, ஆனா இவங்களை தேடி கொலைகாரங்க இங்கயும் வந்துட்டா?”

“சந்தேகம் வராம நீங்க தான் கொஞ்சம் பாத்துக்கணும். உங்க வீட்டுல புதுசா இன்னொரு ஆள் இருக்கற மாதிரி காமிச்சுக்காம இருந்தாலே தப்பிச்சுடலாம்! ஏரியா வேற இவ்ளோ தூரம் மாத்திருக்கோம்ல?”

“ம்ம்..”

“சரி பாட்டி வர்ற வரை சாப்பிட ஏதாவது கொண்டாங்களேன்? பட்சணம் ஏதாவது?”

கொஞ்சம்-‍கூட-வெட்கமே-இல்லாமல்-கேட்கிறது-பார் என்ற பார்வையை வீசிக் கொண்டே உள்ளே சென்றாள்.

“ஏங்க பாத்ரூம் எந்த பக்கம் இருக்கு? If you don’t mind?”

“ஏன்டா இப்படி வெளில வந்தும் மானத்தை வாங்கறே?”

“என் அவசரம் எனக்கு தானே தெரியும். சும்மா இருங்க பாஸ்!”

“இந்த பக்கமா இருக்கு உள்ள வாங்க!”

வெளியே வந்து சிங்க்கில் கை அலம்பிக் கொண்டிருந்தவனிடம், அருகில் வந்து

“உண்மைலயே இந்த ஆண்டாள் ஃப்ரெண்ட் தானா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

“பொய்யா வேற ஃப்ரெண்ட் இருக்க முடியுமா என்ன?”

“இந்த மொக்கைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல! ஃப்ரெண்ட் ஃப்ரெண்டாவே அவ ஊருக்கு போயிட்டா உங்களுக்கு நல்லது. ஞாபகம் இருக்கட்டும்..”

“என்னது? ஏன்..” என்ற வசந்தின் குரலை ஒரேடியாக அலட்சியப் படுத்தி விட்டு நொறுக்குத் தீனி தட்டை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றாள்.

“அந்த சௌம்யா உன்னை காதலிக்கறாடா வசந்த்!”

“ஆஹா.. உங்களுக்கு எப்படி பாஸ் தெரியும்?”

“எப்படி தெரியும்னா? அப்போ உண்மை தானா?”

“இல்லல்ல! ஆண்டாள் ஃப்ரெண்டாவே இருக்கட்டும்னு என்னவோ மிரட்டல் மாதிரி சொன்னாளா.. ஹிஹி அதான்..”

“ஓ.. அவ ஆண்டாளை பார்த்த பார்வையிலயே நினைச்சேன்! சரி இறங்கு!”

“என்ன பாஸ், இங்க எதுக்கு? ஆபீசுக்கு போலாம்!”

“நீ நம்ம ராமச்சந்திரனை பார்த்து ஆண்டாளோட விசா பத்தி விபரம் விசாரி. அதை வெச்சு அவ அப்பா பற்றி ஏதும் தெரியலாம்!”

“ஐயோ இத நாளைக்கு பண்ணக் கூடாதா பாஸ்? எனக்கு அந்த பாட்டி கூட பேசி தொண்டை தண்ணி எல்லாம் வத்திடுச்சு!”

“போடான்னா! நைட் பார்ப்போம்!”

“சரி அப்போ நீங்களும் வாங்க, உங்களை மட்டும் ஜாலியா ஏஸி ரூமில விட முடியுமா?”

“நான் ஒண்ணும் ஏஸில தூங்க போகல.. வனிலாபேஸுக்கு போறேன்.”

பழைய மஹாபலிபுர சாலையில் பல பொறியியல் கல்லூரிகளை தாண்டி ஒரு வழியாக வனிலாபேஸ் வளாகத்தை அடைவதற்குள் பொழுது சாய்ந்து இருந்தது. அந்தி சூரியனின் மிச்சம் மீதி, உயர கட்டிடங்களின் கண்ணாடிகளில் பட்டு ஏரியாவே தகதகவென இருந்தது. அமெரிக்கத் தாக்கம் செடி முதல் சுவரலங்காரம் வரை எங்கெங்கும் வியாபித்து இருந்த‌து. சொல்லி வைத்தாற் போல் எல்லோரும் தத்தமது அறைக் கதவை மூடிக்கொண்டு வேலையில் மூழ்கி இருந்தனர். எச்.ஆர் ஹெட்டின் அறை க‌டைசி மாடியில் sea-view கொண்டு இருந்த‌து.

“ஹ‌லோ சார் நான் தான் கணேஷ், ஒரு சின்ன‌ விப‌ர‌ம் தெரிய‌ணும், ஸாரி ஃப‌ர் த ட்ரபிள்!”

“ப‌ர‌வாயில்ல‌ சொல்லுங்க‌, எதுனாலும் ஒரு 5 நிமிஷ‌த்துல‌ முடிச்சுக்கோங்க‌, என‌க்கு அடுத்து ஒரு மீட்டிங் போயாக‌ணும்.”

“ஷ்யூர்! ராஜேஸ்வ‌ரி த‌நன்ஜெ‌ய‌ன்னு ஒரு பொண்ணு. வ‌னிலாபேஸ் அமெரிக்க‌ ஹெட் குவார்ட்ட‌ர்ஸ்ல‌ வேலை பாக்கறவங்க‌. அவ‌ங்க‌ ப‌த்தின‌ விப‌ர‌ம் வேணும், கிடைக்குமா?”

“அப்ப‌டியா இருங்க‌ பாத்துர‌லாம்! நீங்க‌ சொன்ன‌ பேர்ல‌ ஒருத்த‌ரும் இல்லையே?”

“ஒரு வேளை ஸ்பெல்லிங்..”

“இல்லை, ஸிமில‌ர் ஸ்பெல்லிங் இருந்தாலும் காமிக்கும், அந்த‌ பேர்ல‌ ஒருத்த‌ருமே இல்லை! ஏன் என்ன‌ விஷ‌ய‌ம்?”

“ஒரு கேஸ் விஷயமா, அவங்களை சந்திக்கணும். வேலையை விட்டுருப்பாங்க‌ளோ?”

“இருங்க‌ வேலை மாறின‌வ‌ங்க‌ டேடாபேஸ்ல‌யும் பாத்து சொல்லிட‌றேன்! அப்ப‌டி யாரும் வேலையே சேரலை மிஸ்ட‌ர்.க‌ணேஷ்!”

“ஆர் யூ ஷ்யூர்?”

“க‌ண்டிப்பா. ஒரு நாள் வேலை பாத்த‌வ‌ங்க‌ விப‌ர‌ம் கூட‌ மிஸ் ப‌ண்ண‌ மாட்டோம். நிச்ச‌ய‌மா அந்த‌ பேர்ல‌ இந்த‌ க‌ம்பெனில‌ ஒருத்த‌ரும் சேரலை. என‌க்கு நேர‌மாகிடுச்சு.. Hope you don’t mind!”

“ஓஹ்.. சரி, ரொம்ப தேங்க்ஸ்! எனக்கு சொன்னவங்க தப்பா சொல்லிட்டாங்க போலிருக்கு. போயிட்டு வர்றேன்!” யோசனையோடே நடந்தவன் மென்’ஸ் ரூமை பார்த்ததும் உள்ளே சென்றான். பக்கத்து டாய்லெட்டில் ஒருவன் யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டு அழுது கொண்டிருந்தாற் போல இருந்தது.

“இல்லடா, என் கிட்ட சொல்லாம எங்கயும் போக மாட்டா ராஜி!”

தொடரும்…

எதைச் சொன்னாலும் அதை சுவாரஸ்யமாகச் சொல்ல வேண்டும் என்ற கலையைக் கற்றவர் அவர்; அதுவே அவர் அடைந்த வெற்றியின் சூட்சுமமாகத் தெரிகிறது.

ஒரு (எத்திராஜ்) பெண்ணும் தந்தையும் கணேஷிடம் வருவார்கள். அவரின் மூத்த மகள் ஒரு ஐ.ஏ.எஸ் ஆஃபீசரை மணந்து ஒரு வருடம் முன்பு குஜராத் அகமதாபாத்தில் கேஸ் அடுப்பு வெடிப்பினால் இறந்து போய் இருப்பார். அது விபத்து இல்லையென்றும் மகளின் மாமனார், மாமியார் மற்றும் கணவருமே அவளைக் கொன்று விட்டனர் எனவும் கூறுவர். கூடவே மூத்த மகள் எழுதிய ஒரு கடிதத்தையும் காண்பிப்பார்.

கணேஷ் – வசந்த் தங்கள் வேலையைத் துவங்குவார்கள். ஐ.ஏ.எஸ் ஆஃபீசர் குடும்பத்தின் நடவடிக்கைகள் சந்தேகங்களை வலுப்படுத்தும். கணேஷும் வசந்தும்ஒருமுறைத் தாக்கப்படுவார்கள். ஆஃபீசர் இரண்டாவதாக மணப்பதாக இருக்கும் பெண் திடீரென தாக்கப்படுவார். அவர் தன்னை மிரட்டியது ஒரு தாத்தா என்று ஒரு சமயம் கூறுவார். திடிரென மாமனாரும் மருமகனும் ஒரே அணிக்கு வந்துவிடுவார்கள். தன் மருமகனைத் தவறாகப் புரிந்து கொண்டதாக இறந்த பெண்ணின் தந்தை கூறிவிடுவார். திடீரென முட்டாளாக்கப்பட்டதாக உணரும் கணேஷும் வசந்தும் இதன் பின்னணியைக் கண்டுபிடிப்பார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s