6-Black Moon – ஹேமா ஸ்ரீதர்


இதன் முந்தைய பகுதி…

சுஜாதா என்றாலே ஞாபகத்துக்கு வருவது-கணேஷ் – வசந்த். அவர்களை வாசகர் கண் முன்னே உலவவிட்ட அனுபவத்தை ஜெ… நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

கணேஷ், வசந்த் இருவரையும் ஸ்கெட்ச் வரைந்து, மைலாப்பூரில் இருந்த சுஜாதாவிடம்-சென்று காட்டினேன். வாங்கிப் பார்த்த அவர், ‘இதை விட பெர்ஃபெக்ட்டாகப் போட முடியாது. இதுவே இருக்கட்டும்‘ என்று சொல்லி விட்டார். கணேஷ் கொஞ்சம் சீரியசான ஆசாமி. வசந்த் குறும்புக்கார இளைஞன். அதை நான் அந்த ஓவியத்தில் பிரதிபலித்திருந்தேன். அது எஸ்.ஏ.பி,க்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், “வசந்தை இன்ட்ரட்யூஸ் செய்ய முடியுமா, முகவரி தெரியுமா?” என்று காலேஜ் பெண்களிடமிருந்து கடிதங்கள் வந்ததுதான்.

தி.நகரில் சௌத் போக் ரோட்டில் ஒரு சின்ன சந்தில் அந்த வீடு போலீஸ், ஆம்புலன்ஸ், நாய் என அசம்பாவிதம் நடந்த இடம் இது என்று அப்பட்டமாக அலறிக் கொண்டு இருந்தது. நடுத்தர வர்க்கத்துக்கே உரித்தான லட்சணங்களுடன், கட்டி 20 அல்லது 25 வருடம் போல ஆகிருக்கலாம். கிட்சனில் பாதி கிளறிய உப்புமாவும் பக்கெட்டில் ஊறிக் கொண்டிருந்த வேட்டியும் வாழ்க்கையின் நிரந்தரத்தை காட்டிக் கொண்டிருந்தன. இற‌ந்த‌து த‌ன் ம‌க‌ள் ராஜி இல்லை என்று சொன்ன‌ தனந்ஜெயன் அல‌ங்கோல‌மாக‌ வாயில‌ருகேயே விழுந்து கிட‌ந்தார். அக்க‌ம் ப‌க்க‌த்தின‌ர் வ‌ழ‌க்க‌ம் போல் வேலை வெட்டியை விட்டு விட்டு ஆர்வ‌மாக‌ எட்டிப் பார்த்து கொண்டிருந்த‌ன‌ர். சௌம்யா கான்ஸ்டபிளிடம் விபரம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“என்ன நகுலன், இவங்க எங்க இங்க?”

“அவங்க தானே கொலையை முதல்ல எனக்கு சொன்னது! என‌க்கு இன்னும் 15 நிமிஷ‌ம் வேலை இருக்கு க‌ணேஷ், ஃபார‌ன்ஸிக் ஆளுங்க‌ வ‌ந்துட்டு இருக்காங்க‌. நீங்க‌ அப்ப‌டி உக்காருங்க‌!”

“வா ஒரு ரௌண்ட் அடிக்கலாம் இந்த வீட்டை..”

ஒரு ஹால், கிட்சன், இன்னொரு அறை என ரொம்பவுமே சின்ன இடம் தான். ஹாலில் ஒரு டிவி, ப‌க்க‌த்தில் ஒரு ஃபோன், கிட்சனில் ஒரு சுவற்றில் பல வித கடவுள்களும். இருந்த நாலைந்து அலமாரிகளில் வருடக் கணக்கான‌ ஹிந்து, கீதோபதேசம், மகாபாரதம், நாலாயிரம் திவ்ய பிரபந்தம், பாசுரங்கள், ஆழ்வார் புத்தகங்கள் அதன் வெவ்வேறு பதிப்புகள் என்று நிர‌ம்பியிருந்தன. வ‌ச‌ந்த் வெளியே கூடியிருந்த‌ கும்ப‌லிட‌ம் சென்றான்.

“ஏங்க இவர் பத்தின விவரம் கொஞ்சம் சொல்ல முடியுமா? ரொம்ப நெருக்கமானவங்க யாரும்..”

“நெருக்கமெல்லாம் யாரும் இல்லீங்க.. இவரு ரொம்ப சிடுமூஞ்சி! இங்க தான் 5 வருஷமா இருக்கேன். என் பேரு கூட அவருக்கு தெரியாதுன்னா பாருங்க!”

“அப்படியா..”

“நாங்களா ஏதாவது பேச போனாலும் படக்குனு போயிடுவார். ரொம்ப காலமா இந்த வீட்டுல தான் இருக்காராம். ஏதோ பேங்க்ல இருந்து ரிடையர் ஆனவர்னு சொல்லுவாங்க.. ஒரு பொண்ணு இருக்காம், நாங்க பாத்தது இல்ல!”

“ஆனா பாவம்.. யாருக்கும் ஒண்ணும் கஷ்டம் கொடுத்தது இல்லே இத்தனை வருஷத்துல.. இப்படி போயிட்டாரே?”

“இப்போ கடைசியா யார் வந்தாங்க இங்கன்னு பாத்தீங்களா?”

“காலைல இருந்து போலீஸ்காரங்க தான் வர்றதும் போறதுமா இருக்காங்க? முதல்ல இவரு போனாரு.. அப்புறம் இவரை விசாரிச்சுட்டு இன்னொரு ஏட்டு வந்தாரு. இப்போ நீங்க வந்துருக்கீங்க‌! யார் சார் கொன்னாங்க?”

“பேப்பர்ல வரும், பாருங்க!”

“என்ன கணேஷ், உங்க சுற்றி பார்க்கும் படலம் முடிஞ்சுதா? போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் சாயந்திரம் வந்துரும்! டி.என்.ஏ ரிப்போர்ட் வர இன்னும் கொஞ்சம் டைம் ஆகும்!”

“ஒரு முக்கியமான செய்தி இருக்கு நகுலன்!”

“இன்னைக்கு நாள் பூராவுமே முக்கியமான செய்தி தான் போங்க! சொல்லுங்க என்ன விஷயம்?”

“மார்ச்சுவரில இருந்து ராஜியோட மூளையை திருடிட்டாங்க!”

“வாட்?! மூளை திருடிட்டாங்களா?”

“ஆமா.. வசந்த் எதையோ கவனிக்க போய் இதை கண்டுபிடிச்சான்..” என கணேஷ் நடந்தவற்றை விவரித்தான். “ஸோ, இவரோட பாடிக்கு கொஞ்சம் ஜாஸ்தி பாதுகாப்பு குடுங்க!”

“ப்ளடி.. நான் தோத்துட்டேன் கணேஷ்! என்னோட முதல் பெரிய கேஸ் இது! கமிஷனர் கேட்டா என்ன சொல்லுவேன்?”

“என்ன சௌம்யா, இப்போவாவது காபி சாப்பிட மூட் இருக்கா? வருவீங்களா?”

“காபி சாப்பிட மூட் இல்ல தான், ஆனா உதவறதுக்கு மூட் இருக்கு. ஸோ, வருவேன்.”

ஓடிக் கொண்டிருந்த அருமையான கஜல்லை நிறுத்தவும் வசந்த் திடுக்கிட்டு “பாஸ்! பாஸ்! என்னோட ஃபேவரிட் அது.. எதுக்கு நிறுத்துனீங்க?”

“கொஞ்சம் யோசிக்கணும். அப்புறமா கேளு!”

“ஏன் நீங்க அப்புறமா யோசிக்க கூடாதா?” கணேஷ் முறைக்கவும் வேறு பக்கம் திரும்பி கொண்டான்.

“அங்க 2 பேரு அநியாயமா செத்து கிடக்கறாங்க.. உங்க 2 பேராலயும் எப்படி இப்படி பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்க முடியுது?”

“அது சரி.. பாருங்க சௌம்யா.. நீங்க ஒரு நாளைக்கு சைலன்ஸ்னு எத்தனை தடவை கத்துவீங்க?”

“என்னது?!”

“சரி விடுங்க, அவ்ளோ இல்லனாலும், கொலை அடிதடி எல்லாம் வக்கீல் வாழ்க்கைல சகஜம்ங்க.. இப்படிலாம் இர்ரிடேட் ஆனா நாளைக்கு ஒரு வக்கீல் மனைவியா உங்க வாழ்க்கை ரொம்ப கஷ்டமாகிடும்!”

“வசந்த்! சும்மா இருக்க மாட்டே? சொல்லுங்க சௌம்யா, நீங்க எதுக்கு இங்க?”

“அதான் கான்ஸ்டபிள் கிட்ட இவ்ளோ நேரம் சொன்னேனே! என்னத்துக்கு சொந்த பொண்ணை இல்லைன்னு சொல்லிட்டு வந்தாருன்னு 4 கேள்வி கேக்கலாம்னு வந்தேன்.. பாத்தா இவரு இப்படி விழுந்து கிடக்காரு! போட்ட‌ ச‌த்த‌த்துல‌ அக்க‌ம் ப‌க்க‌ம் ஆளுங்க‌ எல்லாம் வ‌ந்துட்டாங்க‌..”

“ம்ம்.. என்ன‌ கார‌ண‌த்துக்காக‌ சொல்லிருப்பாரு? யாரு எதுக்கு எதை வெச்சு மிர‌ட்டி இருப்பாங்க‌?”

“ராஜியை கொன்னவங்க சொன்னதால தானே இவரு தன் பொண்ணு இல்லைன்னு சொல்லிட்டு வந்தாரு..? அப்புறமும் எதுக்கு கொல்லணும்?”

“காட்டிக் கொடுத்துருவார்னு பயமா இருந்துருக்கலாம்!”

“பாஸ் இன்னொண்ணு க‌வ‌னிச்சீங்க‌ளா? அவள் அமெரிக்கால‌ இருந்து இங்க வந்த மாதிரியும் தெரியலை. அக்கம் பக்கம் ஆளுங்க யாரும் பொண்ணை பாத்ததும் இல்லை! வீடு பூரா ஒரு ஃபோட்டோ கூட‌ இல்லை! ரெண்டு பேருக்கும் பேச்சு வார்த்தை இல்லாம இருந்துருக்குமோ?”

“இருக்கலாம்.”

“ஆனா ராஜி ஒரு விஷயம் சொன்னாளே..”

“அவ எங்க சொன்னா, அதான் அதுக்கு முன்னாடியே..”

“கல்யாணத்துக்கு வீட்டுல பாத்துட்டு இருக்காங்கன்னு சொன்னாளே?”

“அது உன் ஜொள்ளுல இருந்து தப்பிக்க சொல்லிருக்கலாமே?”

சௌம்யா அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பிக்க, “ஏங்க அங்க 2 பேரு அநியாயமா செத்து கிடக்கறாங்க, உங்களால மட்டும் இப்போ சிரிக்க முடியுதா? ஏங்க இப்படி இருக்கீங்க?” என்று வசந்த் கடலையை தொடங்கினான்.

“சாரி வசந்த்! கன்ட்ரோல் பண்ண முடியலை, தப்பா நினைச்சுக்காதீங்க!”

வசந்தின் செல்லுக்கு ஃபோன் வரவும் “பாஸ் எனக்கு ஒரு ஹாட் சாக்லேட் சொல்லிடுங்க.. இதோ வந்துர்றேன்” என்று வெளியே சென்றான்.

சொன்ன ஹாட் சாக்லேட் வருவதற்குள் திரும்பியவன் “பாஸ்! கடலைக் கலையை பத்தி கிண்டல் பண்ணுவீங்களே? பாருங்க‌ என்னோட ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட் நானோசாஃப்ட்ல தான் இருக்கான். எச்.ஆர் கிட்ட கடலை சாகுபடி திறமையா பண்ணதால தான் இப்போ ஒரு முக்கிய க்ளூ குடுத்துருக்கான். ராஜி நானோசாஃப்ட்ல இருந்து எங்க போனான்னு தெரிஞ்சுருச்சு!”

“எங்கன்னு கேட்டா தான் சொல்லுவியா?”

“வனிலாபேஸ்”

“ஓ! புளியங்கொம்பா தான் பிடிச்சுருந்து இருக்கா!”

“நானோசாஃப்ட் விட வனிலா எப்படி மேல்னு சொல்றீங்க?”

“என்ன கணேஷ் இப்படி கேள்வி கேக்கறீங்க? இப்போ எதுல வனிலாபேஸ் முன்னணில இல்ல? வொர்க் கல்சர் கூட ரொம்ப அபாரம்னு கேள்வி பட்டுருக்கேன்.”

“ஆனா..” கடையில் இருந்த டிவியில் காண்பித்த செய்தி கணேஷின் கவனத்தை கலைத்தது. பர்தா அணிந்த முஸ்லிம் பெண்ணை மானபங்க படுத்த முயன்றதாக ஒரு கும்பல் இன்னொன்றை சாத்திக் கொண்டிருந்ததை திரும்ப திரும்ப காண்பித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பூக்காரப் பெண்ம‌ணி “நால‌ஞ்சு பேரு ரொம்ப‌ சோக்கா ட்ரெஸ் போட்டுக்கிட்டு திடீர்னு அந்த‌ பொண்ணு ப‌ர்தாவை தூக்கிட்டானுங்க‌! ஒருத்த‌ன் கைல‌ துப்பாக்கி மாதிரி ஏதோ..”

“வ‌ச‌ந்த்! ஆண்டாள்! ஆண்டாள்!” என்று க‌ல‌வ‌ர‌மாக‌ அவ‌ளுடைய‌ எண்ணுக்கு ஃபோன் போட்டான்.

“நீங்க‌ள் ட‌ய‌ல் செய்த‌ எண் த‌ற்போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்ப‌ட்டுள்ள‌து.”

தொடரும்…

 கொலை அரங்கம்

கொலை அரங்கம்’ – கணேஷ் – வசந்த்-நாவலின் முதல் அத்தியாயத்தில் இருந்தே, தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் ஒன்று. இந்த நாவலில் இருவரையும், மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறார்-சுஜாதா.

இது குண்டுகள் வெடிக்கும் காலம். சென்னை விமான நிலையத்தில் வெடித்த குண்டு பல உயிரை மாய்த்தது.

இலங்கையில் இருந்து, வாழ்விழந்த பல தமிழர்கள் புகலிடம் தேடி தமிழகம் வருகின்றனர். இதற்கெல்லாம், கணேஷ்-வசந்த் மூலம் இந்தக் கொலை அரங்கத்தில் நம்மை சிந்திக்க வைக்கிறார் சுஜாதா.

குங்குமம்’ வார இதழில் இந்த கதை வெளிவந்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s