10-சுஜாதாவின் நாடகங்கள் – அ.ராமசாமி


இதன் முந்தைய பகுதி…

என்னென்ன அம்சங்களை சுஜாதா பாணி எனலாம்?

அ. கொஞ்சம் நக்கல் எல்லா வரிகளிலும் ஓடிக்கொண்டே இருப்பது

. வாசகரிடமே நேரடியாக உரையாடும் போக்கு

இ .சித்தரிப்புகளை சுருக்கமாக அளிப்பது.

ஈ. கதையையே சுருக்கிச் சொல்வது

. மனதைச் சித்தரிக்க விட்டுவிடுவது

நாடகம் என்ற கலைவடிவின் மூன்று முக்கியமான சாத்தியக்கூறுகளை மிகச்சிறப்பாக நிரப்பியவை அவை. ஒன்று, நாடகம் நம் கண்முன்னால் ஒரு வாழ்க்கையை நிகழ்த்திக் காட்டுகிறது. வேறு எந்த கலைவடிவத்திலும் நாம் வாழ்க்கையை அப்படியே ‘ரத்தமும் சதையுமாக’ கண்முன் காண்பதில்லை.உரையாடலின் அதிகபட்ச சாத்தியங்களை பயன்படுத்த வாய்ப்புள்ள ஒரு கலை. இலக்கியத்தில் உரையாடல்கள் மிகச்சிறந்த பங்கை வகிக்கின்றன. ஆனால் உரையாடலின் நுட்பங்கள் அங்கே ஊகிக்கத்தான் படுகின்றன. குரலும், பாவனையும் இணையும்போது உருவாகும் உரையாடலின் நுண்ணிய அழகுகள் நாடகத்தில் வெளிப்படும் அளவு எந்தக்கலையிலும் வெளிப்பட முடியாது. இந்த அம்சங்களிலும் சுஜாதாவின் நாடகங்கள் மிக வெற்றிகரமானவை.

ஓவர் டு அ.ராமசாமி… 
சுஜாதா என்னும் அறிவியல் ஆதரவாளர் இந்தியாவில் சில துறைகளில் எந்திரமயம் மற்றும் கணினி மயம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தார் என்பதை நாம் அறிவோம். அந்த ஆதரவு மனிதனின் புறவெளிகளான தொழிற்கூடங்கள், வியாபார வெளிகள் போன்ற பணியிடங்களில் உண்டாக மட்டுமே உண்டு. மனிதனின் அந்தரங்க வெளியான குடும்பத்திற்குள் நுழையும் போது கடுமையான எதிர்ப்பைக் காட்டுவேன் என்பதைச் சொல்ல சேகர் என்ற நாடகத்தை எழுதிக் காட்டியுள்ளார். சேகர் என்ற மனித ரோபாவை உருவாக்கிய ஆத்மராவ் என்ற கணினிப் பொறியாளரின் ஒருவார வாழ்க்கையை நாடகமாக்கிக் காட்டுவதன் மூலம் அந்த எதிர்ப்பைப் பதிவு செய்கிறார். மனிதனின் அன்றாட வாழ்க்கை சிறியதும் பெரியதுமான பொய்களால் ஆனது. ஆனால் எந்திரத்திற்குப் பொய் சொல்லக் கத்துத் தர முடியாது . சூழலுக்கேற்பப் பொய் சொல்ல முடியாத ரோபாக்களால் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை அந்த நாடகம் நகைச்சுவையாகக் காட்டுகிறது. இரண்டு அங்கங்கள் இருப்பதாகக் காட்டப்பட்டிருந்தாலும் அங்கத்திற்குள் காட்சிப் பிரிவுகள் இல்லை.
மனிதர்களின் சின்னச் சின்னச் செயல்களால் தான் வாழ்க்கை அர்த்தமும் சுவாரசியமும் கொள்கிறது என்பதை உணர்த்தும் நாடகம் வாசல். மாமாவின் ஒவ்வொரு வருகையின் போதும் உற்சாகத்தைக் கொண்டு வருவதாக இருந்த வாசல் இனி அந்த உற்சாகத்தைத் தராது என்ற கழிவிரக்க வெளிப்பாடாக எழுதப் பட்டுள்ளது. ஈயைச் சாகடித்துப் பிழைக்க வைத்து நாணாவைக் குஷிப்படுத்தும் மாமா, சுவர்க் கடிகாரத்தின் ஸ்பிரிங்கை வெளியில் வைத்து விட்டு, மாட்டி ஓடச் செய்யும் மாமா, பவானியின் எதிர் வீட்டுக் காதலுக்கு வழி சொல்லும் மாமா, எல்லாச் செயல்பாடுகளின் மூலமும் அப்பாவிற்கு எரிச்சல் மூட்டும் மாமா என ஒவ்வொரு வருகையின் போதும் அந்த வீட்டுக் குழந்தைகளுக்கும் மனிதர்களுக்கும் நினைவில் இருக்கும்படி செய்து விட்டுச் செல்லும் மாமா, இனி வரமாட்டார் என்பதாக முடிகிறது. மாமாவின் மீதான இரக்க உணர்வை அதிகப்படுத்த அவரது நடவடிக்கைகளில் இருந்த நகைச்சுவை மற்றும் உற்சாகத்தை உரையாடல்கள் வழி கொண்டு வருகிறது. மூன்று பாகங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அந்த வீடு என்ற ஒரே வெளியில் நடக்கும் நிகழ்வுகளே நாடகத்தின் காட்சிகள் என்பதால் இதனையும் ஓரங்க நாடகம் என்றே கூறலாம்.

தொடரும்…

சுஜாதாவின் கதைகளின் சிறப்பு என்னவென்றால் அவர் தொடர்ந்து வழக்கமான–க்ளீஷேக்களை தவிர்த்துக்கொண்டே இருந்தார்.

ஆகவேதான் அவரது நடை சம்பிரதாயமானதாக ஆகவில்லை. புதுமையை கடைசி வரை தக்கவைத்திருந்தது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s