வெற்றிக்கு வித்திடும் விடியல் பொழுது!


காலைப் பொழுதின் உன்னதத்தைச் சொல்கிறது இந்தப் புத்தகம். சாதாரணமாக நாம் ஒருநாளில் என்ன செய்கிறோம்? காலையில் அரக்கப்பரக்க எழுந்து பிள்ளைகளுடன் சண்டைபோட்டு கிளப்பி, டிராஃபிக்கில் டென்ஷனாகி (சில சமயம் சண்டையும் போட்டு), ஆபீஸுக்குள் நுழைந்தவுடன் பெர்சனல் இ-மெயிலையும், ஃபேஸ்புக் அப்டேட்டையும் தலையாய கடமையாக முதலில் செய்கிறோம். ஏதாவது ஒரு மீட்டிங்கோ, பாஸிடம் இருந்து அழைப்போ, விசிட்டரோ, வேலை குறித்த போன் காலோ வரும்வரை இந்தநிலை தொடருகிறது என்கிறார் ஆசிரியர்.

கொஞ்சம் காலையில் நீங்கள் தூங்கி எழும் நேரத்தினை முன்னோக்கி நகர்த்தினால் குழந்தைகள் குதூகலத்துடன் பள்ளிக்குப் போகும்; உங்கள் குடும்பத்தை இன்று கவனிக்கும் தேவையான அளவைத் தாண்டி இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனிக்க முடியும்; உங்களை நீங்களே கவனித்துக்கொள்ள முடியும் என்று வாதிடுகிறார் ஆசிரியர்.

இன்றைய வேகமான உலகில் விடிந்துவிட்டது என்றால் உங்களது நேரத்தை எல்லோருமாக கூறு போட்டு எடுத்து பகல்பொழுதை வேகமாக கரைத்துவிடுவார்கள். அதிகாலைதான் நம்முடைய நேரம். யாரும் கூறுபோட்டு எடுக்க முடியாது என்றாராம் ஒருவர். மதியம் ரெண்டு மணிக்கு ஒரு ரெஸ்டாரன்டில் ஒரு மணிநேரம் ஜாலியாக உட்கார்ந்திருக்க முடியாது. கூட்டத்தில் நம்மைத் துரத்திவிட்டுவிடுவார்கள். அதே காலை ஐந்துமணிக்கு ஜாலியாக ஒரு மணிநேரம் அமர்ந்து ரிலாக்ஸ் பண்ணி நம்முடைய நேரத்தை என்ஜாய் பண்ணலாம் என்றாராம் மற்றொருவர். காலையில் சீக்கிரம் எழுந்தால் நிதானமாக டிபன் சாப்பிடலாம். அடிக்கொருதரம் வாட்சைப் பார்க்க வேண்டியதில்லை, என்பவர் மற்றொரு ரகம்!

எப்படி பெர்சனல் ஃபைனான்ஸில் உங்களுக்கான பணத்தை உங்கள் வருமானத்தில் இருந்து முதலில் ஒதுக்குங்கள் (பே யுவர் செல்ஃப் ஃபர்ஸ்ட்) என்று சொல்கிறார்களோ, அதேதான் நேரத்திலும். ஒருநாளின் பொழுதில் முதலில் உங்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள் என்கிறார் ஆசிரியர். வாழ்க்கையில் ஒருநாளில் அர்ஜென்டாக செய்யவேண்டாத பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன.

உதாரணத்துக்கு, உடற்பயிற்சி, பிரார்த்தனை, புத்தகம் படித்தல், வேலையில் முன்னேறுவது குறித்து யோசித்தல், பிசினஸை எப்படி வளர்ப்பது என்று யோசித்தல், குடும்பத்துக்குச் செய்யவேண்டியது என்ன என்று சிந்தித்தல் போன்றவை. இவை அர்ஜென்டாக செய்ய வேண்டியதில்லை என்பதனாலேயே இவை செய்யப்படாமலேயே போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. இவை நடக்கவேண்டும் என்றால் ஒருநாளில் முதலில் இவை நடக்கவேண்டும். ஏனென்றால், விடிந்துவிட்டால் உங்கள் டைம் உங்கள் கையில் இல்லை என்கிறார் ஆசிரியர்.

அதிகாலையில் எழுவது வில்பவர் சம்பந்தப்பட்ட விஷயம் என்று சொல்லும் ஆசிரியர், வில்பவர் என்பது காலையில் அதிகமாகவும் நாளின் பொழுது போகப்போக எப்படி குறைகிறது என்பதையும் தெளிவாக விளக்குகிறார். மாலையில் ஜிம்முக்குப் போகிறேன் என்று சொல்பவர்கள் யாரும் தொடர்ந்து சென்றதாக சரித்திரமில்லை என்று சொல்லும் ஆசிரியர், ஏனென்றால் மாலையில் உங்கள் டைம் உங்கள் கையில் இல்லை என்கிறார்.

காலையில் செய்யும் உடற்பயிற்சியே தொடர்ந்து செய்யப்பட்டுவரும். ஒவ்வொருநாளும் தூங்கி எழுந்தவுடன் காலையில் மனிதனிடம் முழு ரீசார்ஜ் செய்யப்பட்ட வில்பவர் இருக்கிறது. விடிந்துவிட்டாலோ ஒழுங்கில்லாத டிராஃபிக்கில் ஆரம்பித்து, கடித்துக்குதறும் பாஸ், கலகம் செய்யும் குழந்தைகள் போன்ற எரிச்சலூட்டும் விஷயங்களும், இன்டர்நெட், ஃபேஸ்புக், பிட்சா, பர்கர் போன்ற டெம்ப்ட் பண்ணும் விஷயங்களும் சேர்ந்து வில்பவரை கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டு ஸ்வாகா செய்துவிடுகிறது என்கிறார் ஆசிரியர்.

அதேபோல், காலையில்தான் நாம் தளராத மகிழ்ச்சியுடன் கூடிய நம்பிக்கையில் திகழ்கிறோம் என்று சொல்லும் ஆசிரியர், ட்விட்டரில் இது குறித்து ஆராய்ந்தபோது காலை ஆறு மணிக்குமேல் ஒன்பது மணிக்குள்தான் ‘ஆஹா’, ‘சூப்பர்’ போன்ற கமென்ட்கள் அதிகம் வருகின்றது என்ற சான்றைச் சொல்கிறார். மற்ற நேரங்களில் இந்த வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை என்று சொல்லும் ஆசிரியர், அதனால் முக்கியமான விஷயங்களை அதிகாலைக்குக் கொண்டு சென்றுவிடுங்கள் என்று வாதிடுகிறார்.

அதிகாலைக்கு முக்கிய விஷயங்களைக் கொண்டு சென்று விட்டால் நாளடைவில் அது ஒரு பழக்கமாகிவிடும். அதனால் வில்பவரு டைய உபயோகமும் காலையில் செய்யப்படும் விஷயங்களில் குறைவாக இருக்கும். எனவே, நாள்முழுவதும் உபயோகிக்க வில்பவர் உங்களிடம் கொஞ்சம் அதிகமாகவே ஸ்டாக் இருக்கும் என்று சொல்லும் ஆசிரியர், முக்கிய விஷயங்களை அதிகாலைக்கு கொண்டு சென்றுவிட்டால் முடிவெடுப்பதை ஆட்டோ-பைலட் மோடிற்கு போய்விடும் என்கிறார்.

காலையில் எழுந்தவுடன் பிரஷ்ஷை எடுத்து பேஸ்ட்டைப்போட்டு பல் துலக்க ஆரம்பிக்கிறீர்களே தவிர பல் துலக்கலாமா, வேண்டாமா என்ற முடிவெடுக்க யாரும் யோசிப்பதில்லையோ, அதேபோல், அதிகாலைக்கு நகர்த்தப்படும் முக்கிய முடிவுகளும் சுலபத்தில் எடுக்கப்படும் என்கிறார் ஆசிரியர். ஆனால், எந்தெந்த விஷயங்களை காலைக்கு நகர்த்த வேண்டும் என்பதில் கவனம் தேவை என்பதையும் சொல்கிறார்.

பகல் பொழுதில் எப்படியும் நடந்துவிடும் என்ற விஷயங்களை அதிகாலைக்கு நகர்த்தக்கூடாது என்று சொல்லும் ஆசிரியர், மூன்றுவிதமான காரியங்களை அதிகாலைக்கு நகர்த்த வேண்டும் என்கிறார்.

ஒன்று, வேலையில் முன்னேற்றம் அடைவதற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்திப்பது மற்றும் செயல்படுவது. இரண்டாவதாக, குடும்பம் மற்றும் நண்பர்களிடம் நெருக்கமாக உறவாடுவது. மூன்றாவதாக, நம்மை நாமே செப்பனிடுவது – உதாரணத்துக்கு உடற்பயிற்சி, தியானப் பயிற்சி, க்ரியேட்டிவாகச் சிந்திப்பது.

இந்த மூன்று விஷயங்களையும் வெகுவிமரிசையாக விளக்கியுள்ளது இந்தப் புத்தகம்.

உங்கள் வேலை என்ன என்பதைப் புரிந்துகொண்டு திட்டமிட்டு செலவிடும் நேரத்தின் மீது கவனம் செலுத்தி உற்சாகமாகச் செயல்பட்டால் வெற்றி என்பது உங்கள் மடியில் தவழும் என்பதை விளக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

வெற்றிபெற ஆசையில்லாத மனிதர்கள் உண்டா என்ன? அனைவரும் இந்தப் புத்தகத்தை ஒருமுறையேனும் படித்தால் நிறைய விஷயங்களைக் கற்றுகொண்டு முன்னேற முடியும்!

–நன்றி நாணயம் விகடன்

About the Book

Laura Vanderkam has combined her three popular mini e-books into one comprehensive guide, with a new introduction. It will help readers build habits that lead to happier, more productive lives, despite the pressures of their busy schedules. Through interviews and anecdotes, she reveals:

  • What the Most Successful People Do Before Breakfast—to jump-start the day productively.
  • What the Most Successful People Do On the Weekend—to recharge and prepare for a great week.
  • What the Most Successful People Do at Work—to accomplish more in less time.
Advertisements

One thought on “வெற்றிக்கு வித்திடும் விடியல் பொழுது!

  1. Krishnapranav Moorthy December 18, 2013 at 4:16 AM Reply

    அற்புதமான பகிர்வு . உடற்பயிற்சி, தியானம், புத்தகம் படித்தல் இதெல்லாம் கடந்த ஒரு வருடம் தொடர் பழக்கமாகிய பிறகு உலகம் வேறு மாதிரியாக தெரிகிறது .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s