4-Black Moon – ஹேமா ஸ்ரீதர்


இதன் முந்தைய பகுதி…

சுஜாதா என்றாலே ஞாபகத்துக்கு வருவது-கணேஷ் – வசந்த். அவர்களை வாசகர் கண் முன்னே உலவவிட்ட அனுபவத்தை ஜெ… நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

கணேஷ், வசந்த்இருவரையும் ஸ்கெட்ச் வரைந்து, மைலாப்பூரில் இருந்த சுஜாதாவிடம்-சென்று காட்டினேன். வாங்கிப் பார்த்த அவர், ‘இதை விட பெர்ஃபெக்ட்டாகப் போட முடியாது. இதுவே இருக்கட்டும்‘ என்று சொல்லி விட்டார். கணேஷ் கொஞ்சம் சீரியசான ஆசாமி. வசந்த் குறும்புக்கார இளைஞன். அதை நான் அந்த ஓவியத்தில் பிரதிபலித்திருந்தேன். அது எஸ்.ஏ.பி,க்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், “வசந்தை இன்ட்ரட்யூஸ் செய்ய முடியுமா, முகவரி தெரியுமா?” என்று காலேஜ் பெண்களிடமிருந்து கடிதங்கள் வந்ததுதான்.

அதே சலனமில்லாத ராஜி. தையல்களும் சில வீக்கங்களுமாக கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாள். கணேஷுக்கு பாவமாக இருந்தது, எங்கிருந்து வந்தாள், யார் இவள், ஏன் இவளைத் தேடி ஒருவரும் வரவில்லை?

“இதான சார் நீங்க கேட்ட கேசு?”

“ஆமாம். இந்தா நீ கேட்ட பணம். போய் நல்லா சாப்பிடு, நாங்க ஒரு 10 நிமிஷத்துல போயிடுவோம்.”

“பாத்தோமா போனோமான்னு இருங்க‌ சார். ஏதோ ப‌டிச்ச‌வ‌ங்க‌ மாதிரி இருக்கீங்க‌ளேன்னு தான் விட்டுட்டு போறேன். டீனுக்கு தெரிஞ்சா என் வேலையே போயிடும்!”

“அதிக‌ம் பேசினேன்னா ப‌ண‌த்தை பிடுங்கிடுவேன்! ஓடிடு!”

முன‌கிக் கொண்டே சென்ற‌வ‌னை பார்த்த‌ ப‌டி, “சீக்கிர‌ம்டா.. என‌க்கு குட‌லை புர‌ட்டுது!”

“உங்க‌ளுக்கு ஏதும் வித்தியாச‌ம் தெரியுதா பாஸ்?”

“தைய‌ல். ஒரு மாதிரி வீங்கி இருக்கு முக‌மெல்லாம்..”

“போங்க‌ பாஸ். கிட்ட‌ போய் பாருங்க‌!”

மார்ச்சுவ‌ரியில் நின்று கொண்டு பிண‌த்தை கிட்டே போய் பாருன்னு ப‌டுத்த‌றானே என ம‌ன‌திற்குள்ளே புல‌ம்பினாலும், கணேஷுக்கும் ஏதோ வித்தியாச‌மாக‌ தான் இருந்த‌து. என்ன‌வென்று உற்று பார்க்க‌ முய‌ற்சித்தான். புரிந்து விட்டது.

“ஓ காட்!”

“ஹா! ஒரு வ‌ழியா க‌ண்டு பிடிச்சீங்க‌ளா பாஸ்! சில‌ ச‌ம‌ய‌ம் என‌க்கே என் புத்திசாலித்த‌ன‌த்தை நினைச்சா பெருமையா தான் இருக்கு..”

அவ‌ளுடைய‌ புருவ‌ங்க‌ள் நேற்று வேறு மாதிரி இருந்ததாக நினைவு. ரொம்ப யோசித்தாலும் இன்ன வடிவம் என உறுதியாக சொல்ல முடியவில்லை, ஆனாலும் நிச்சயம் இப்போது இருப்பது போல் நேற்று இருக்கவில்லை. கொஞ்சம் வளைவுடன் நடுவில் மெலிதாக சேர்ந்து இருந்ததோ? இன்றைக்கு ஒரு நேர்கொடு போல இருக்கிறது. எப்படி? கண்டிப்பாக இது ஆட்டாப்ஸி விளைவில்லை.

“பாஸ், பாஸ்! நில்லுங்க! என்ன நீங்க பாட்டுக்கு வெளில வந்துட்டீங்க?”

“இன்பசேகரனை பாத்தாகணும். இது நான் நினைப்பதை விட பெரிய விவகாரம்னு தோணுது.”

“பெரிய விவகாரமே தான் பாஸ். இல்லனா நம்ம மடியில் வந்து வுழுமா?”

இன்பசேகரன் இன்று விடுமுறையாம், ஃபோன் நம்பரை வாங்கி அவரை பிடித்து விட்டாயிற்று. “ஹலோ டாக்டர், sorry to disturb your holiday, நான் தான் கணேஷ்.”

“என்ன கணேஷ், ஆஸ்பத்திரி நம்பரில் இருந்து பண்றீங்க? நான் கூட என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்.”

“செல்லுல சார்ஜ் இல்ல டாக்டர். ஒரு முக்கியமான விஷயம் கேட்டாகணும், அதான். நேத்து நீங்க போஸ்ட் மார்டம் பண்ணீங்களே, ராஜி, பாய்சனிங் கேஸ்..”

“ஆமாமா. சொல்லுங்க, அதுக்கு என்ன?”

“ஆட்டாப்ஸிக்கு அப்புறம் அவங்க முகத்தில் ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டி இருந்துதா? ஆர்ட்ஃபிஷியல் ஃபிக்ஸ் ஏதும்?”

“ம்ம்.. இல்லையே, ப்ரெயின் டேமேஜ் ஒண்ணும் பெரிசா இல்லைங்கறதால, ஸ்கல் ஃபுல்லா ஓபன் பண்ணலை. முகமெல்லாம் இருந்த படியே தான் தைச்சோம். ஏன், என்னாச்சு கணேஷ்?”

“அநேகமா நீங்க விடுமுறையை கேன்சல் பண்ண வேண்டி வரும் நினைக்கறேன். நான் இப்போ பாடியை பார்த்தேன், புருவம் நேர்க்கோடா, நேத்து இருந்ததுக்கும் இன்னிக்கும் சம்பந்தமே இல்ல. என்கிட்ட ஃபோட்டோ இல்ல, ஆனா போலீஸ் ரெக்கார்ட்ல பாத்தா தெரியும். ஏன் உங்களுக்கே நேர்ல பாத்தா நான் சொல்றது புரியும். ஐ திங்க் வேற யாரோ பாடியை தொட்டுருக்காங்க. உங்களால உடனே வர முடியுமா?”

“What!! உடனே வர்றேன். நீங்க ஒரு அரை மணி வெயிட் பண்றீங்களா?”

“கண்டிப்பா!”

டாக்டர் வந்தவுடன் அவசரமாக சில ஆய்வுகளை செய்ய உள்ளே சென்றார். அவருடைய பொறுப்பில் இருந்த கேஸ் இப்படி ஆனது என்பது போலீஸ் ஆஸ்பத்திரி மேலிடம் என விதம் விதமாக அவரை படுத்தும் வாய்ப்பு இருந்தது.

“ரொம்ப நேரமா இங்கயே இருக்கோமே, நாம வேணா போயிட்டு அப்புறமா ஃபோன் பண்ணி கேட்டுக்கலாமா பாஸ்?”

“அடடா! ஃபோன்னதும் தான் நினைவு வருது!”

“என்னது?”

“ஆண்டாள்! நான் கால் பண்றேன்னு சொல்லியிருந்தேனே..”

“என்ன பாஸ் சொல்ல போறீங்க?”

“Hello! Ganesh here, could I speak to Ms.Andal?”

“நான் தான் கணேஷ்! சொல்லுங்க நீங்க ஃபோன் பண்ணலைன்னதும் என் கேஸை எடுத்துக்கு போறது இல்லன்னு நினைச்சுட்டேன்..”

“கொஞ்சம் வேற வேலைல மூழ்கிட்டேன். ஸாரி! அப்புறம் உங்களுது ஒரு கேஸ் இல்லை! அதாவது சட்டப்படி அதுல செய்ய ஒண்ணுமில்லை. ஆனா உங்க அப்பா எங்கே, உங்களை யாரு எதுக்கு கொல்ல முயற்சி பண்றாங்கன்னு தெரிஞ்சுக்க சாதரணன் கணேஷுக்குள்ள‌ ஒரு ஆர்வம் இருக்கு.”

“இப்போ தான் கணேஷ் ரொம்ப நிம்மதியா இருக்கு! ரொம்ப தேங்க்ஸ்! அடுத்து நான் என்ன பண்ணனும்?”

“ம்ம். அதை நான் அப்புறம் சொல்றேன். நீங்க இப்போ எங்க இருக்கீங்க? பாதுக்காப்பான இடமா?”

“இன்னிக்கு ஹோட்டல் அலெக்ஸாவுல இருக்கேன். ரூமுக்குள்ளயே தான் இருக்க போறேன்.”

“ஓஹோ. ரூம் சர்வீஸ்னு கூட யாரையும் உள்ள விடாதீங்க, யூ நெவர் நோ. நாங்க நாளைக்கு வந்து பாக்கறோம், அங்கயே இருங்க.”

“சரி கணேஷ். நீங்க மட்டும் என் விலாசத்தை கண்டு பிடிச்சு குடுங்க, காலத்துக்கும் உங்களுக்கு நன்றியா இருப்பேன்!”

“என்ன பாஸ் சிரிக்கறீங்க?”

“இல்ல. இத்தாலில பொறந்து வளர்ந்தேன்னு சொல்றா.. ஆனா செண்டிமென்ட் எல்லாம் பிழிஞ்சு தள்ளறா ஆண்டாள். வித்தியாசமான பொண்ணு.”

“ஆமா பாஸ். ரொம்ப வித்தியாசம். பல் எல்லாம் அப்படியே ஏதோ மாலைக்கு கோர்த்தா மாதிரி வரீசையா இல்ல இருக்கு?? நான் அசந்துட்டேன்!”

“எப்படிறா ஒருத்தியை ஒரு தடவை பார்த்தா போதும் அப்படியே உன் மூளைல பதிஞ்சுடுது? சரி விஷயத்தை சொல்லு!”

“இப்பவாவது கேட்க மனசு வந்துதே! காலைல நகுலனை பார்க்க போனேனா, அவரு கார்ல கண்டுபிடிச்ச சில விஷயங்களை சொன்னாரு. நானும் காரை ஒரு தடவை பாக்கணும்னு சொன்னதுக்கு கொஞ்சம் கடுப்போட ஓகே சொன்னாரு. நானும் இடத்தை விசாரிச்சுட்டு போயிட்டேன். காரை ஒரு 4 சுத்து சுத்தினேன்.. ஒண்ணும் தேறலை. சரி கிளம்பலாம்னு வர்றேன், எதிர்க்க ஒரு போலீஸ்காரர் வந்தார். அவரை எங்கேயோ பாத்திருக்கேனேன்னு எனக்குள்ள ஒரு நெருடல். சரி எத்தனையோ போலீஸ் பாத்துருக்கோம் இவரும் ஒருத்தர்னு தான் முதல்ல நினைச்சேன். ஆனாலும் மனசு சமாதானம் ஆகலை. சட்டுனு அடிச்சுது ஃப்ளாஷ்! இவரை நேத்து தான் ஆஸ்பத்திரில பாத்தோம்னு!”

“அதுல என்ன பெரிய விஷயம்? ஜி.எச்ல எத்தனியோ கேச், எதெதுக்கோ போலீஸ் தேவை. வந்துருக்கலாம்..”

“அது சரி, ஆனா நான் இவரை கம்பவுண்டட்ர் ட்ரெஸ்ல இல்ல பாத்தேன்?” என்று “இதுக்கு என்ன சொல்றீங்க” லுக் விட்டான்.

“ஒரு வழியா நீ பொண்ணுங்களை மட்டுமில்ல, ஆண்களையும் நல்ல நோட்டம் விடுவேன்னு எல்லாருக்கும் ப்ரூவ் பண்ணிட்ட..”

“பின்ன‌.. ஏதோ விப‌ரீத‌ம்னு ஜி.எச்.க்கு ஓடி, இதே மாதிரி காசை அழுத்தி.. ஸ‌ப்பா.. காலைல‌ இருந்து ஒரு காபித்த‌ண்ணி கூட‌ குடிக்க‌ல‌ இன்னும்!”

“அதுக்கு எதுக்கு ரிஸ‌ப்ஷ‌னிஸ்ட் கிட்ட‌ லிஸ்டெல்லாம் வாங்கினே?”

“அது சும்மா, ரொம்ப‌ நேர‌மா அவ‌ என்னை நோட் ப‌ண்ணிட்டு இருந்தா, சும்மா என்னோட‌ பேசின‌ திருப்தில‌ இருக்க‌ட்டுமேன்னு ஒரு சான்ஸ்..”

“ஆக‌, ராஜி ஏதோ ஒரு பிர‌ச்ச‌னையை ப‌ற்றி சொல்ல‌க்கூடாதுன்னு தான் அவ‌ளை கொன்னாங்கங்கறதை த‌விர‌, வேறு ஏதோ ஆதாய‌மும் இருக்கு அவ‌ள் உட‌ம்பில்.”

இன்ப‌சேக‌ர‌ன் மிகுந்த‌ ப‌ர‌ப‌ர‌ப்போடு க‌ணேஷை நோக்கி வ‌ந்தார். “க‌ணேஷ், நான் நினைக்காத‌து எல்லாம் ந‌ட‌க்குது. Am very scared!”

முகத்தில் கேள்விக்குறியோடு இருவரும் டாக்டரை நோக்க “ராஜியின் மூளையை திருடிட்டாங்க! ரொம்ப ப்ரொஃபஷனலா ஸ்கல்லை ஓபன் பண்ணி, நரம்பு எல்லாத்தையும் கட் பண்ணிட்டு, திருப்பி ஒரு ஆர்டிஃபிஷியல் ப்ரெயின் மாடலை வெச்சு தைச்சுருக்காங்க! அந்த ப்ராஸஸ்ல, புருவங்கள் ஏதோ சேதமைடய, அதை செயற்கை முடி வெச்சு சமாளிச்சுருக்காங்க! எப்படி கணேஷ் இதை கண்டு பிடிச்சீங்க?? இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலையே..”

“நான் இல்ல. வசந்த் தான் கண்டு பிடிச்சது.”

“உயிரோட இருக்கும் போது கிட்னியை திருடறானுங்கன்னு பாத்தா செத்தாலும் விட மாட்டானுங்க போலிருக்கே பாஸ்..”

“சரி கணேஷ், நான் இதை டீனுக்கு, போலீஸுக்கு தகவல் சொல்லியாகணும், பெரிய தலைவலி. உங்களை அப்புறம் சந்திக்கறேன். மாணிக்கம், கொஞ்சம் உள்ள வாங்க, ஒரு பாடியை எடுக்கணும்..” என அவர் வேலையை கவனிக்க சென்றார்.

“சரி வா, நாம் வீட்டுக்கு போய் பேசிக்கலாம், இந்த இடம் எனக்கு சேஃபா தோணலை.”

போகும் வழியில் ஃபோன் வந்தது, நகுலனிடம் இருந்து. “ஹலோ வசந்த்? நான் நகுலன் பேசறேன்!”

“சொல்லுங்க நகுலன், நான் கணேஷ். வசந்த் கார் ஓட்டிட்டு இருக்கான்.”

“ஓ வெளில தான் இருக்கீங்களா? கொஞ்சம் அப்படியே ஸ்டேஷன் வந்துட்டு போக‌ முடியுமா? உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்துருக்கு!”

“அட.. நான் உங்களுக்கு சர்ப்ரைஸ் தரலாம்னு இருந்தா.. சரி வர்றோம். C-2 ஸ்டேஷன் தானே நீங்க?”

“ஆமா, வெயிட் பண்றேன்.”

“வசந்த், நகுலன் ஸ்டேஷனுக்கு போ.. ஏதோ ஆச்சரியம் வெச்சுருக்காராம் நமக்கு.”

-‍தொடரும்…

டி.சிவக்குமார், திண்டுக்கல்.

? ஜீனோம் மூலம் கணேஷ்-வசந்த்-தை உருவாக்க முடியுமா ?

! க.வ.வை உருவாக்க ஜீனோம் தேவையில்லை; பேனா போதும்.
டி.சிவகுமாரை உருவாக்கத்தான் ஜீனோம் வேண்டும்.
சிவக்குமார். 

?உங்கள் கதைகளில் துப்பறிவதற்கு ஒரு வக்கீல் பாத்திரத்தைப் படைத்தது ஏன்?
!சட்டம் தெரிந்தவர்கள் துப்பறியும் கதையின் சுவாரஸ்யத்திற்குத் தேவைப்படுவதால்.
நாராயணன்.
?என்ன வாத்யாரே, கணேஷ்-வசந்த் வர்ற மாதிரி கதை எழுதப் போறதில்லையா? ரொம்ப போர் அடிக்குது தலைவா?
!கணேஷ்-வசந்த் கதைகளை ஏன் எழுதுகிறீர்கள் என்று ஒரு பட்சி கேட்கிறது வாத்யாரே.
?நீங்கள் கணேஷா, வசந்தா? அல்லது ஆத்மாவா, டாக்டர் ராகவானந்தமா?
!சுஜாதா (ரங்கராஜன்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s