3-Black Moon – ஹேமா ஸ்ரீதர்


இதன் முந்தைய பகுதி…

God is in the details. எதையும் நுட்பமா கவனிக்கணும்… தெரியுதா ? எனக்கு ஒரு கேள்விக்கு விடை கிடைச்சாதான் நிம்மதியா தூங்குவேன்.”  (வசந்த்துக்கு-கணேஷின் அட்வைஸ்)

“இயற்கைல ஒரு டீப் சிம்ப்ளிசிட்டி இருக்கும்பாங்க. ஒரு சம்பவம் நிகழ்ந்ததுக்கு இரண்டு மூன்று விளக்கங்கள் இருந்தால், அதில் மிகவும் எளிமையானதைத்தான் எடுத்துக்கணும்”  (Ganesh on Acoms Razor which says that : ’the simplest answer is usually the right answer’  )

“The manner of death is determined to be MURDER.

Pathological Analysis:

Acute Combined Lethal Drug Intoxication (resulting in asphyxiation and fatal cardiac arrest)

1.Pancuronium: 400mg

2.Sodium thiopental 11g

3.Potassium chloride: 250 mEq

Other non-contributory drugs present (atropine, topiramate, ciprofloxacin, acetaminophen)”

“என்ன பாஸ் ஒரு ஃபார்மஸி கடையே உள்ள இருந்து இருக்கும் போலிருக்கே..!”

“மடையா! இதெல்லாம் என்னனு புரியலியா? பல நாடுகள்ல குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க இந்த ட்ரக்ஸ் தான் தருவாங்க!! வா உடனே ஜி.எச் போய் பேசிட்டு வரலாம்!”

ஆஸ்பத்திரி கம்பவுண்டரிடம் “நாங்க டாக்டர்.இன்பசேகரை பாக்க வந்துருக்கோம், கணேஷ்னு சொல்லுங்க தெரியும்.” எனக் கூற, டாக்டர் உள்ளிருந்த படியே, “கணேஷ் உள்ள தான் இருக்கேன், வாங்க” என்றார்.

“ஹலோ டாக்டர்!”

“ஹலோ கணேஷ்.. என்ன அந்த பொண்ணு போஸ்ட் மார்ட்டம் பாத்த அதிர்ச்சில வந்துருக்கீங்களா?”

“ஆமா டாக்டர். அதிர்ச்சி, குழப்பம்னு ஒரு கலவையா இருக்கோம்.”

“Very strange. இந்த மாதிரி ஒரு காம்பினேஷன்ல நான் இங்க பாக்கற முதல் டெத் இதான். அமெரிக்காவுல மரண தண்டனை கைதிகளுக்கு குடுக்கற அதே ட்ரக்ஸ், ஆனா அதை போல 2-3 மடங்கு டோஸ். Cruel! என்ன தான் நடந்துது?”

நடந்ததை சொல்லவும், டாக்டரின் முகமெங்கும் குழப்ப ரேகைகள் ஓடத் துவங்கின. “தெளிவான கொலைன்னு நினைச்சேன், நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்களே..”

“என்ன குழப்பம்னு சொன்னா நாங்களும் சேர்ந்து குழம்புவோம் டாக்டர்..”

கணேஷ் வசந்தை பார்த்து எப்படி இவனால் நேரம் காலம் இல்லாமல் கடிக்க முடிகிறது என பல்லைக் கடித்தான்.

“இந்த மருந்துகள் ஓரளவு வலியில்லா மரணம் நிகழ குடுக்கறது. வலியில்லைன்னா வலியை உணர்ற அளவு நேரமோ மூளைக்கு சமிக்ஞை போறதுக்குள்ள கதை முடிஞ்சுடும். அதுவும் இந்த பொண்ணுக்கு வழக்கத்தை விட 2 3 மடங்கு டோஸ் ஜாஸ்தி குடுத்துருக்காங்க, எக்காரணம் கொண்டும் பிழைக்க கூடாதுன்னு. இந்த அளவுக்கு, 2 நிமிஷம் கூட தாக்கு பிடிச்சுருக்க முடியாது.”

“ச‌ரி தான் டாக்ட‌ர், எல்லாமே ஒரு ஒண்ண‌ரை நிமிஷ‌த்துல‌ முடிஞ்சாப்ப‌ல‌ தான் இருந்துது.”

“அது வரை ச‌ரி, ஆனா அந்த‌ பொண்ணு உங்க‌ கிட்ட‌ அதுக்கு முன்னாடி 20 நிமிஷ‌ம் போல‌ பேசியிருக்கா. இந்த மருந்தை எல்லாம் வாயாலோ தானாவோ உட்கொள்ள முடியாது. சிரிஞ்ஜ் தான் போட்டாகணும், அதுவும் வெயின் பாத்து I.V தரணும். ஆனால் அந்த பொண்ணோ உங்களோடு ஆபீஸ்ல இருந்துருக்கா. அதான் குழப்பம்.”

“என்ன டாக்டர், என்னோட வேலைக்கு உலை வெச்சுருவீங்க போலிருக்கே. நான் அம்பேல்!”

“ஹாஹா.. கவலைப் படாதீங்க வசந்த், என்னால் கணேஷை ஒரு நாள் கூட தாக்கு பிடிக்க முடியாது. நீங்க தான் சரி அவருக்கு.”

“சரி டாக்டர், அப்புறம் பாக்கலாம்!”

வரும் வழியெல்லாம் கணேஷ் எதுவும் பேசவில்லை. அவனுடைய மூளை விதம் விதமாக ப்ராசஸ் செய்துக் கொண்டிருக்கிறது என வசந்த் அறிவான். வழக்கத்தை விட மெதுவாகவே ஓட்டினான். ஆஃபீஸிற்குள் நுழைந்த‌தும், வ‌ச‌ந்த் வேக‌மாக‌ உள்ளே சென்று த‌ரையை பெருக்க‌ ஆர‌ம்பித்தான். க‌ணேஷ் சிரித்துக் கொண்டான்.

“என்ன‌ பாஸ், என்ன‌ செய்ய‌ற‌ன்னு கேக்க‌ மாட்டீங்க‌ளா, நான் என்ன‌ தின‌முமா துடைப்ப‌க‌ட்டையோட‌ காட்சி த‌ர்றேன்?”

“என‌க்கு தெரிய‌ல‌ன்னா தானே கேக்க‌ணும். சிரிஞ்ஜ் நீடில் எதுவும் கீழே இருக்கோன்னு தேட‌றே..”

“அட‌ச்சை. உங்க‌ளை ஆச்ச‌ர்ய‌ ப‌டுத்தவே முடியாது என்னால‌!”

“என்ன நீடில் ஏதும் கிடைச்சுதா?”

“லேது! நம்ம ஆஃபீசுக்குள்ள ஒரு கொலை நடந்துருக்கு. இங்க இருக்கவே பயமா இருக்கு போங்க!”

“ஏன் அந்த ஸ்தபதி கூட தான் இங்க வந்து உயிரை விட்டார். ஓடியா போயிட்டோம்.. சரி நான் தூங்க போறேன்.”

“நானும் தூங்க தான் போறேன். காலைல முத வேலையா அந்த காரை பத்தி நகுலனை கேக்கணும்.”

மறுநாள் நகுலனை சந்திக்க ஸ்டேஷன் சென்ற போது, ஏட்டு தான் இருந்தார். அன்றை நாளிதழை எடுத்துக் கொண்டு அமர்ந்தான். 3ஆவது பக்கத்தில் ஓர் ஓரமாக அவளுடைய முகம் அரைகுறையாக தெரிந்த‌படி படம் போட்டு அறிவிப்பு போட்டிருந்தார்கள். வசந்துக்கு கடுப்பாக இருந்தது. ஒரு பெண்ணின் நண்பர்கள் எவருக்கும் அவளுடைய விபரம் தெரியவில்லை. இத்தனைக்கும் அழகான பெண் வேறு. இவர்களெல்லாம் எதற்கு தொடர்பில் இருக்கணும்? சும்மாவேனும் லிஸ்டில் சேர்த்துக் கொண்டால் நணபர்கள்னு அர்த்தமா என்ன? உலகத்தின் எல்லா ஆண்களும் திருந்தி விட்டார்களா? என எண்ணிக் கொண்டிருக்கும் போது நகுலனின் குரல் கவனத்தை கலைத்தது.

“வாங்க வசந்த். ஃபாரன்ஸிக்ல இருந்து தான் வர்றேன். உள்ள வந்து உக்காருங்க.”

“ஏதாவது தடயம் கிடைச்சுதா?”

“சில க்ளூஸ் கிடைச்சுருக்கு. கேளுங்க. முதல், அந்த கார்ல தான் ராஜி வந்துருக்காங்க. அவங்க முடி ட்ரைவருக்கு பக்க‌த்து சீட்ல சாம்பிள் எடுத்தோம். மேட்ச் ஆகுது. அவங்க துப்பட்டாவோட ஒரு சின்ன துண்டு கார் இடுக்குல சிக்கி சீட்டுக்கு கீழே இருந்துது. அங்கங்க‌ ராஜியின் கை ரேகை மட்டும் தான் இருக்கு, ஸ்டியரிங் வீலில் இல்லை. சொல்லப் போனா, ஸ்டியரிங் வீலில் எந்த ரேகையுமே இல்லை, யாரோ க்ளவுஸ் போட்டு ஓட்டியிருக்காங்கன்னு நினைக்க வேண்டியிருக்கு.”

“நீடில் ஏதும்?”

“இல்லை.”

“நான் அந்த காரின் உள்ளே ஒரு தடவை பாக்கலாமா?”

“பாருங்க வசந்த், நீங்க பெரிய ஆளு தான் ஒத்துக்கிறேன். அதுக்காக என்னை அவமான படுத்தறது கொஞ்சமும் நல்லாயில்ல!”

“என்ன நகுலன், உங்களுக்கு என்ன இதுல அவமானம்? எனக்கு ஒரு ஆர்வம் அவ்வளவு தான். ப்ளீஸ்!”

“அது சரி வக்கீலுக்கும் போலீசுக்கும் என்னிக்கு ஆகியிருக்கு.. ஃபோன் பண்ணி வெக்கறேன், போயி பாருங்க.”

“தேங்க்ஸ்!”

திடீரென செல்ஃபோன் அலறவும் விழுந்து அடித்து எழுந்தான் கணேஷ். விடிந்து வெகு நேரமாகி இருந்தது போலிருந்தது.

“ஹலோ..”

“பாஸ்! என்ன குரல் ஒரு மாதிரி இருக்கு? நான் தான்!”

“ம்ம்.. என்ன சொல்லு.”

“சரியா போச்சு! இன்னுமா தூங்கிட்டு இருக்கீங்க? மணி 11! நீங்க உடனே கிளம்பி ஜி.எச் வாங்க.”

“இப்போவே வரணுமா? நீ எங்கருக்க?”

“நான் இங்க தான் ஆஸ்பத்திரி எதிர்த்தாப்புல ஒரு கடைல இருக்கேன். நீங்க வாங்க முதல்ல..”

மொட்டையாக எதிர்த்த கடைன்னா எந்த கடை என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த கணேஷை நோக்கி ஓடி வந்தான் வசந்த்.

“என்னாச்சு?”

“இருங்க. நம்ம அழகான இந்த ரிசப்ஷனிஸ்ட் கிட்டருந்து ஆரம்பிக்கறேன்.. மிஸ் கலா, நேத்து இங்க வந்த டெட் பாடீஸ் லிஸ்ட் தர்றேன்னு சொன்னீங்களே, ரெடியா?”

“இந்தாங்க வசந்த். நீங்க கேட்டீங்களேன்னு மெனக்கெட்டு பிரிண்ட் எடுத்தேன்!”

“ஐ! ஏதோ நீங்களே வரி வரியா உக்காந்து ப்ரிண்ட் பண்ணா மாதிரி தான் சொல்றீங்க! ஈவ்னிங் ஃப்ரீயா இருந்தா வீட்டுக்கு வாங்க, ஒரு காபி சாப்பிடலாம்?”

“இதுக்கு தான் என்னை இழுத்துட்டு வந்தியாடா?”

“ஓ சாரி நீங்க இருக்கீங்கல்ல, மறந்துட்டேன். இந்த லிஸ்டை படிங்க. நேத்து இங்க மார்ச்சுவரிக்கு வந்த கேஸுங்க இதெல்லாம்.”

“இதுக்கு என்ன? சட்டுனு விஷயத்துக்கு வர மாட்ட?”

“லிஸ்ட்ல ஆறாவது இடத்துல என்ன இருக்கு, ராஜேஸ்வரி தனந்ஜெயன். கரெக்டா? இப்போ பாருங்க, ஏம்பா த‌ம்பி, நேத்து இங்க‌ ஒரு 25 வ‌ய‌சு போல‌ ஒரு பொண்ணோட‌ பாடி வ‌ந்துதே, காமிக்க‌ முடியுமா?”

“பேரு என்ன‌ங்க‌?”

“ராஜேஸ்வ‌ரி, டாக்ட‌ர் இன்ப‌சேக‌ர‌ன் போஸ்ட் மார்ட்ட‌ம் ப‌ண்ண‌ கேஸ்”

“அப்ப‌டியா, இருங்க‌ பாத்துட்டு வ‌ர்றேன்! கொஞ்ச‌ம் டீக்கு காசு த‌ந்தீங்க‌ன்னா..”

“போயிட்டு வா, டீயோட‌ ப‌ன்னும் வாங்கி த‌‌ர்றேன்.”

உள்ளே போய் 10 நிமிட‌ம் க‌ழித்து வ‌ந்த‌வ‌ன், “இருக்கு, என்ன உள்ள வந்து பாக்கறீங்களா?”

“வாங்க பாஸ் போலாம்!”

“என்னது மார்ச்சுவரிக்குள்ள போய் புதுசா என்ன பாக்க போறோம்?”

“வாங்களேன், பார்ப்போம்..”

வார்டு பாய் துணியை விலக்கினான்.

தொடரும்.

 கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் கொலையுதிர் காலம் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.

Advertisements

One thought on “3-Black Moon – ஹேமா ஸ்ரீதர்

  1. ரெங்ககசுப்ரமணி December 13, 2013 at 8:29 AM Reply

    படிக்க சுவாரஸ்யமாக இருந்தாலும்.. என் மனதில் இருக்கும் கணேஷ் வசந்துடன், இவர்கள் ஒத்து போக மாட்டேன் என்கின்றார்கள் ;(

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s