2-Black Moon – ஹேமா ஸ்ரீதர்


இதன் முந்தைய பகுதி…

கேள்வி: கதைகளில் “கணேஷை” அறிமுகப்படுத்தி விட்டு நீங்கள் பெங்களூர் வந்தப்ப தான் “வசந்த்தை” அறிமுகப்படுத்தினீங்களா ?

கணேஷ் வந்து “நைலான் கயிறு” ல்ல வந்தான் ’68-ல்ல. வசந்த் வந்து “பிரியா” ல்ல தான் அறிமுகமானது. கணேஷ் முதல்லே “Solo”வா இருந்தான். ஆனா கதை எழுதறபோது Structure-ல்ல கஷ்டமா இருந்தது. கணேஷ் வந்து மனசில, நினைச்சுகிட்டு இருந்ததை சொல்ல Counterpoint character தேவையாய் இருந்தது. கணேஷ் வந்து matured; வசந்த் immatured childish ஆக இருக்கான். கூட்டங்களுக்கெல்லாம் போனா  “வசந்த்தை” ஏன் அழைச்சிட்டு வரல்லேன்னு கேக்கறாங்க. பஸ்லே பார்த்தேன்னு… சொல்றாங்க. பெண்கள் நிறைய -பேர் வசந்துக்கு கல்யாணம் பண்ணி வைக்காதீங்கன்னு எழுதறாங்க.. psychological ஆ அது ரொம்ப Interest ஆ இருந்தது. கல்யாணத்தை கலைச்சிடுங்க, வேண்டாம்ன்னு சொல்றாங்க.They feel they will lose something charming அது மட்டுமல்ல… One reader sent a telegram நான் அவனுக்கு வந்து என் bloodஐ கொடுக்க தயாரா இருக்கேன்னு ” They believe that Vasanth exists. எல்லோருக்கும் அவன் character பிடித்து இருக்கு. அந்த மாதிரி இருக்க ஆசைப்படறாங்க.

(ரேவதி ரபீந்திரன் பேட்டி)

“பாஸ் இங்க பாருங்க! நான் என் ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் ஒரு 7-8 பேரு கூட டச்ல இருக்கேன். இதுல 2 பேரு காண்டாக்ட்ஸ்ல ராஜேஸ்வரி தனந்ஜெயன்னு ஒரு ப்ரொஃபைல் இருக்கு.”

“Does that ring a bell?”

“இல்ல, ஆனா இந்த 2 பேரும் பழைய நண்பர்கள் எல்லாரையும் தேடி பிடிச்சு ரீயூனியன் போடணும்னு பேசிட்டு இருக்கறவங்க தான். So, இவளா தான் இருக்கும்னு நினைக்கிறேன். Unfortunately, அவ ஃபோட்டோ ஒண்ணும் போடலை.”

“ம்ம்..”

“செக்ஸ் ஃபீமேல்னு ஒரு பெரிய க்ளூ கிடைச்சுருக்கு! ராஜேஸ்வரி தனந்ஜெயன் பொண்ணுனு தெரியாதா என்ன? நல்லா தர்றாங்க டீடெயிலு..!”

“11 மணிக்குள்ள சாரதா மில் ஓனர் கேஸ்ல அப்பீல் போட்டே ஆகணும் இன்னிக்கு! நான் கிளம்பறேன், நீ என்ன பண்ணறே..”

“இதெல்லாம் நீங்க சொல்லணுமா பாஸ்? ராஜியை பத்தி அவளுக்கே தெரிந்து இருக்காத எல்லா விஷயத்தோடும் தான் வருவேன்.”

கோர்ட்டில் கால் வைத்தது முதல் கணேஷுக்கு நின்று ஒரு வாய் தண்ணீர் குடிக்க கூட நேரமில்லை. போதாக்குறைக்கு வசந்த் வேறு உடன் இல்லாதது ஏதோ கை ஒடிந்தாற் போல இருந்தது. பயலிடம் over-dependent ஆகி விட்டோமோ என எண்ணிக் கொண்டு வெளி வரும் போதே “பாஸ்” என்று குரல் வந்து விட்டது. அவனுடைய துடிப்பைப் பார்த்து கணேஷுக்கு பெருமையாகவும் பொறாமையாகவும் இருந்தது. விவரம் கேட்க ஆரம்பிப்பதற்குள் ஒரு பர்தா போட்ட பெண் இவனை நோக்கி “மிஸ்டர் கணேஷ்?” என்ற‌படி வந்தாள்.

“Yes?”

“ஹலோ கணேஷ், என் பேரு ஆண்டாள், கொஞ்சம் என் கூட வர்றீங்களா? பெரிய இக்கட்டுல இருக்கேன், உயிர் பிரச்சனைனு கூட சொல்லலாம்! உங்களால தான் என்னை காப்பாற்ற முடியும்!”

ஒரே நாளில் இரண்டாவது தடவையாக இது போன்ற வரிகளை கேட்கிறான். வினோதமாக இருந்தது. “Aandal in a purdah! இந்த பேரெல்லாம் இன்னும் கூட வெக்கறாங்களா என்ன? I’m Vasanth. நாங்க வக்கீல் தெரியுமில்லையா, உயிர் பிரச்சனைனா போலீஸிடம் தான் போகணும் நீங்க” என்றான் வசந்த் சிரித்துக் கொண்டே. அவள் பதில் சொல்லாமல், துப்பாக்கியை எடுத்து சுட்டாள்.

கணேஷிற்கு ஒரு வினாடி ஒன்றும் புரியவில்லை. சுட்டது அவனை அல்ல, 20 அடி தள்ளி இருந்த ஒரு போலீஸ்காரரை! அவன் சத்தமே போடாமல் கீழே விழுந்தான், கணேஷுக்கு ஏதோ சினிமா பார்ப்பது போல் இருந்தது. ஸைல‌ன்சர் பொறுத்திய துப்பாக்கி, யாருக்கும் சத்தம் கேட்கவில்லை.

“What the hell did you just do?” என்றவாறே வசந்த் விழுந்தவனை நோக்கி ஓட ஆரம்பிக்க, “கணேஷ், அவனுக்கு ஒண்ணும் ஆபத்தில்லை, he is just unconscious. அவன் என்னை கொல்ல வந்தவன்! இப்போ தெரியுதா நான் ஏன் போலீஸிடம் போக முடியாதுனு? ப்ளீஸ், கொஞ்சம் என் கூட வாங்களேன்! இதுக்கு மேல ஒரு நிமிஷம் இங்க நின்னா கூட எனக்கு ஆபத்து. Believe me, he is sure okay! I beg you!” என்றபடியே அவள் காரை நோக்கி ஓடினாள். விழுந்தவன் உடம்பில் இருந்து ரத்தம் ஏதுவும் வெளி வரவில்லை, பார்த்தால் குடித்து விட்டு விழுந்தவன் போலிருந்தான்.

“வசந்த், லெட்ஸ் கோ! சீக்கிரம் வா!”

“ஹ? பாஸ், என்ன அவ கூட போறோமா? துப்பாக்கி வெச்சுருக்கா பாஸ்! Are you kidding me?”

“Something tells me, நாம பாக்காத துப்பாக்கியா? வா போலாம்!”

காரில் ஏறியதும் தெரியவில்லை, கிளம்பியதும் தெரியவில்லை. மின்னல் வேகம்னு சொல்லுவாங்களே அது இதானா என வசந்த் வாயை பிளந்து கொண்டிருந்தான்.

“என்ன‌ வ‌ச‌ந்த், அவ்ளோ ஆச்ச‌ரிய‌மா பாக்க‌றீங்க‌?”

“ஏங்க‌, ஆண்டாள்னு பேரு வெச்சுட்டு ப‌ர்தா போட்டுட்டு துப்பாக்கியை எடுத்து போலீஸை சுட‌றீங்க‌! நான் தான் கண்ணு மண்ணு தெரியாம ஓட்டுவேன்னு எங்க பாஸ் சொல்லுவார், நீங்க எனக்கே அக்காவா இருப்பீங்க போல!! என்னை வேற எப்படி பாக்க‌ சொல்றீங்க‌?”

“உண்மைல இது என் செக்ரட்டரியோட கார். என்னை காப்பாத்திக்க நானும் என்னன்னவோ பண்ணிட்டு இருக்கேன்!”

“மிஸ், அந்த போலீஸ்காரரை எதுக்கு சுட்டீங்க, எதால சுட்டீங்க? would you mind explaining things? இப்போ நாம எங்க போயிட்டு இருக்கோம்?”

“சொல்றேன்” என்று பர்தாவின் முகத்திரையை விலக்கினாள். முகம் எங்கும் “நான் பணக்காரி” என்று அவளுடைய கோல்ட் ஃபேஷியல் அலறியது. பொம்மையை போன்று ரொம்ப நேர்த்தியான முகம். பொதுவாக எல்லோருக்கும் ஏதாவது ஒரு குறை இருக்குமே முகத்தில், அப்படி எதுவுமே தென்படவில்லை. எங்கோ பார்த்த முகமாக தோன்றியது. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் வந்திருப்பாளோ?

“நான் KK Industries முதலாளியோட பொண்ணு.”

“KK Industriesஆ? கேள்விப் பட்டதில்ல, என்ன பிஸினஸ் பண்றீங்க?”

“அக்ரிகல்ச்சுரல் மெஷினரி அப்புறம் ப்ராஸஸ்ட் ஃபுட்ஸ்னு நினைக்கிறேன்.. பிரச்சனையே அதான்! 20 வருஷம் முன்னாடி அப்பாவும் அம்மாவும் இத்தாலில போய் செட்டில் ஆன அப்புறமா தான் நான் பிறந்தேன். நான் இது வரைக்கும் இந்தியாவுக்கு வந்தது இல்லை, இதான் முதல் தடவை. அம்மா இத்தாலில, அப்பா இங்க பிஸினஸ். நான் அம்மாவோட இருந்தேன், அப்பா 2-3 மாசத்துக்கு ஒரு தடவை வந்து பாத்துட்டு போவார். 1 மாசம் முன்னாடி அம்மா இறந்துட்டாங்க! ஹார்ட் அட்டாக். அப்பாவை காண்டாக்ட் பண்ற நம்பருக்கு கால் பண்ணா எடுக்கலை. ஒரு தகவலும் இல்லை! அவரை பாக்கலாம்னு தான் இப்போ நான் வந்துருக்கேன், ஆனா இங்க யாருக்குமே அப்பாவை தெரியல! எனக்கு அட்ரஸ்னு ஒண்ணும் தெரியாது, ஆனா இவ்ளோ பெரிய இண்டஸ்ட்ரியை கண்டு பிடிக்கறது ஒரு கஷ்டமான்னு வந்தேன்.”

“இத்தாலி பொண்ணா? வாவ்! தமிழ் இவ்ளோ நல்லா பேசறீங்க? சரி எதுக்கு பர்தா எல்லாம் போட்டுருக்கீங்க? முஸ்லிமா என்ன நீங்க?”

“இல்ல! ஹிந்து தான். ராதா தான் பாதுக்காப்புக்காக இந்த பர்தாவை குடுத்தா! இது இல்லைனா நான் என்னிக்கோ மேலே போயிருப்பேன்! வீட்டுல தமிழ் தான் பேசுவோம். இந்தி, மலையாளம், கன்னடம் கூட தெரியும்! இப்போ புதுப் பிரச்சினை என்னனா 10 நாளா என்னை யாரோ கொல்ல முயற்சிக்கறாங்க! எங்க போனாலும் ஃபாலோ பண்றாங்க. போலீஸ்ல புகார் குடுக்கலாம்னு போனா, அங்க சப்-இன்ஸ்பெக்டரே யாருக்கோ ஃபோன் போட்டு நான் வந்துட்டதை சொல்லிட்டு இருக்கார்.. எங்க போனாலும் ஓட்டம்! அப்போ தான் நீங்க யவனிகா சிலை விவகாரத்தை தீர்த்து வெச்சதை பத்தி பேப்பர்ல படிச்சேன். அடுத்த ஓட்டம் உங்களை தேடித் தான்! ப்ளீஸ் கணேஷ், என்னை காப்பாத்துங்க, அப்பா எங்க‌னு கண்டு பிடிச்சுட்டா போதும், I’ll be safe!”

“சரி அந்த ஆளை எதால சுட்டீங்க?”

“அது சும்மா மயக்க மருந்து! இத்தாலில எல்லா பணக்காரங்க கிட்டயும் இந்த கன் இருக்கும். சுட்டா ஒரு சின்ன நீடில் உள்ள பந்து வந்து அதில் இருக்கும் மயக்க மருந்து ரிலீஸ் ஆகி, உடனடியா மயங்கிடுவாங்க! கொஞ்சம் ஹையர் டோஸ் க்ளோரோஃபார்ம்னு நினைக்கிறேன், not sure!”

“இந்த கார் ஏது உங்களுக்கு? இந்த ஊர்ல எப்படிங்க ட்ரைவ் பண்றீங்க?”

“அதான் சொன்னேனே செக்ரட்டரியோட கார்னு! பேரு ராதா. நானும் அவளும் தான் வந்தோம் இத்தாலில இருந்து. எனக்கு ஒரு ஸிஸ்டர் மாதிரி. அவளுடைய வீட்டையும் இந்த கொலைகாரங்க விடலே! இதுக்கு பயந்து நான் தினமும் ஓட்டல் ஓட்டலா பர்தாவோட அலைஞ்சுட்டு இருக்கேன். கைக்கு வந்த படி ஓட்டிட்டு இருக்கேன், நீங்க சொன்ன மாதிரி ‘கண்ணு மண்ணு தெரியாம’!”

“என்ன பாஸ் யோசிக்கறீங்க, நாமளும் எவ்வளவு நாள் தான் சாரதா மில்லையும் கன்யாலாலையும் கட்டிக்கிட்டு அழறது? கடியா இருக்கு பாஸ்! ரொம்ப யோசிக்காதீங்க, வாழ்க்கைல ஒரு சேஞ்ச் வேண்டாமா? ஆமா, உங்களுக்கு பாய் ஃப்ரெண்ட் அப்படி இப்படினு..”

“ஷட் அப் வசந்த்! மிஸ்.ஆண்டாள், எனக்கு இதை பத்தி கொஞ்சம் யோசிக்கணும். நான் நாளைக்கு காலை உங்களை காண்டாக்ட் பண்றேனே?”

“Oh..” என்று சற்று ஏமாற்றம் அடைந்தவளாக “Okay! இதை மட்டும் எனக்கு ஸால்வ் பண்ணி குடுங்க, I’ll do anything for you! இந்தாங்க என்னோட நம்பர்! I’ll be waiting for your call!”

“சரி ஆண்ட்ஸ்! நைட் எங்க தங்குவீங்க?”

“ஆண்ட்ஸ் யாரு?”

“நீங்க தான், செல்லமா கூப்பிடணும்னா சுருக்கிடுவேன்!”

“வேண்டாம், ஜஸ்ட் கால் மீ ஆண்டாள்.”

“ஓ! சரி, எங்க தங்குவீங்க?”

“ஓட்டல் தான். நாடோடி வாழ்க்கை!”

காரில் இருந்து இறங்கிக் கொண்டே “Okay ஆண்டாள்! ஏதாவது பிரச்சனைனா கூப்பிடுங்க! அடுத்த நொடி இந்த வசந்த் உங்களுக்கா அங்க நிப்பான்! எவனுக்கு என்னை எதிர்..” அவனை முடிக்க விடாமல், “Thank you Ganesh!” என்று acceleratorஐ மிதித்தாள்.

“நான் ஆண்டாளை பாத்துருக்கேன்னு பெருமையா சொல்லிக்கலாம், இல்ல பாஸ்?”

“வசந்த், காரை நாளைக்கு எடுத்துக்கலாம், இப்போ ஆட்டோல போயிடலாம் வீட்டுக்கு.”

வீட்டில் அடியெடுத்து வைத்தவுடன் முதல் கேள்வியாக, “அப்பாடா எப்போ வந்து சேருவோம்னு இருந்தேன் பாஸ்! நம்ம ராஜியை பத்தி கேக்கறீங்களா?”

“சொல்லு”

“நாம‌ ஃபேஸ்புக்கிலே பார்த்த ராஜேஸ்வரியும், இறந்த ராஜியும் ஒண்ணு தான். முழுப் பெயர் ராஜேஸ்வரி தனந்ஜெயன். 6 & 7ஆம் வகுப்பு என் கூட படிச்சுருக்கா! பிறந்து வளர்ந்து படிச்சு எல்லாமே சென்னை தான். காதல் எல்லாம் ஒண்ணுமில்லை, ஆனா அவ எங்க வேலை பார்த்தா, வீடு எங்க இருக்குனு தெரியலை. ரொம்ப நாளா ஆன்லைன் வர்றது இல்லை போலருக்கு, அவ லிஸ்ட்ல இருந்த நண்பர்கள் யாருக்கும் உருப்படியான விஷயம் தெரியலை.”

“சரி அந்த..”

“குறுக்க பேசாதீங்க பாஸ்! நெக்ஸ்ட், நாம வாக் போன ரூட்ல திருப்பி ஒரு நடை போட்டேன். நாம ராஜியை பாத்த இடத்தில் இருந்து ஒரு அரை கிலோ மீட்டர் தள்ளி ஒரு கார் அனாதையா இருக்கு. இன்னிக்கு காலைல இருந்து தான் பாக்கறதா அங்க இருக்கற இஸ்திரி கடைக்காரன் சொல்றான்! காரை அவசரமா நிறுத்திருக்காங்க, அநேகமா நம்மளை பாத்து இறங்கி இருக்கணும்னு நினைக்கறேன். காரோட ரெஜிஸ்ட்ரேஷன் திருவான்மியூர்ல இருக்கற ஒருத்தர் அட்ரஸ்ல இருக்கு. ஆனா இது அவங்க கார் இல்ல. போலி நம்பர் ப்ளேட்! மிஸ்டர்.நகுலன் கிட்ட சொல்லி காருக்குள்ள ஏதும் தடயம் இல்லனா ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் இருக்கானு பாக்க சொல்லிருக்கேன். போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்த உடனே அவரே கால் பண்றேன்னாரு. நீங்க ராஜேந்திரன் சாருக்கு ஃபோன் ஏதும் பண்ணி இருந்தீங்களா என்ன?”

“இல்லையே, ஏன்?”

“இல்ல காலைல‌ கஞ்சில நனைச்ச காட்டன் துணியாட்டம் விறைப்பா பேசின அதே நகுலன் இப்போ ரொம்ப குழைஞ்சாரு.. அதான். நாளைக்கு மார்னிங் நியூஸ்பேப்பர்ல இந்த பாடி பத்தி செய்தி போட்டு யாரும் அடையாளம் காண வர்றாங்களான்னு பாக்க போறாங்களாம்.”

“சரி, இந்த ஆண்டாள் பத்தி என்ன நினைக்கறே?”

வசந்த் ஆரம்பிப்பதற்குள் ஃபோன் அடித்தது. “ஹலோ வசந்த் ஹியர்!”

“நான் இன்ஸ்பெக்டர் பேசறேன், வசந்த். போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்தாச்சு, உங்களுக்கு ஈமெயில் பண்ணி இருக்கேன். பாருங்க!”

“Okay, thanks a lot Inspector!”

“பாஸ், ரிப்போர்ட்டை ப‌டிக்க‌றேன் கேளுங்க. The body is that of a well-developed, well-nourished woman appearing the offered age of 25 years. The body measures 66 inches and weighs 53 kilograms…”

“”டேய், முக்கியமானத மட்டும் படி!”

“மனுஷன‌ கொஞ்சம் நிம்மதியா விட மாட்டீங்களே. The manner of death is determined to be…”

தொடரும்…

சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங்கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், ஸந்த் கதையில் வஸந்த்-இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!

Advertisements

One thought on “2-Black Moon – ஹேமா ஸ்ரீதர்

  1. srinivasan (@sathishvasan) December 12, 2013 at 3:16 AM Reply

    ”க்ளீஷே” கமெண்ட்தான் ! கலக்கல் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s