1-Black Moon – ஹேமா ஸ்ரீதர்


இன்றைய இளைஞர்களுக்கு ‘வசந்த்‘ என்னும் சாக்லேட் கொடுத்து தன் பக்கம் இழுத்து, ‘விஞ்ஞான‘ விருந்து வைத்தவர்-சுஜாதா.

கணேஷ்-வசந்த் என்ற கதாபாத்திரங்கள் தமிழ் வாசகர்களின் மனதில் நீண்ட காலமாக நீங்கா இடம் பெற்றவை. புத்திக் கூர்மையும், அங்கதமும் கொண்ட இப்பாத்திரங்களின் செயல்பாடுகள் பல வாசர்களின் இதயங்களில் அவர்களை நிஜ மனிதர்களாகவே உருவகம் கொள்ளச் செய்து விட்டன. சுஜாதாவின் வாசகர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு இந்தப் பெயர்களைச் சூட்டியதை தெரிவித்திருக்கிறார்கள். சுஜாதாவைப் போலவே, கணேஷ்-வசந்த்தும் வாசகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றிருப்பார்கள்.

“அதிகாலை பீச் காத்தை சுவாசிச்சுட்டே காலாற நடக்குறது ஒரு தனி சுகம் தான்டா இல்ல..?”

“..”

“என்ன‌டா நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன், சைல‌ண்டா வ‌ர்ற‌?”

“பாஸ்! இப்போ ம‌ணி 5.53. என‌க்கு இது ந‌டு ராத்திரி. ஜிகினாஸ்ரீயோட பாரிஸ்ல பாடிட்டு இருந்தேன்.. கொஞ்ச‌ம் கூட‌ ம‌ன‌சாட்சி இல்லாம‌ என்னை இழுத்துட்டு வ‌ந்த‌தும் இல்லாம‌, கேள்வி வேற‌ கேப்பீங்க‌ளா?”

“அந்த‌ ஜிகினாஸ்ரீ கிட்ட‌ அப்ப‌டி என்ன‌டா இருக்கு..? பாத்தா 10 நாள் சாப்பிடாதவ மாதிரி இருக்கா!”

“வேண்டாம் பாஸ். ஜிகு ப‌த்தி ஏதாவ‌து சொன்னீங்க‌ நான் இப்ப‌டியே திரும்பிடுவேன்!”

“அவ‌ புருஷ‌னுக்கு கூட‌ இவ்ளோ கோவ‌ம் வ‌ராது! ச‌ரி, அந்த‌ ராம்லால் கேஸ்ல நேத்து என்ன பண்ண‌? அத‌ சொல்லு!”

“ஐயோ பாஸ். ஒண்ணு வாக்கிங் ஆரோக்கிய‌ம்னு ப‌ஜ‌னை ப‌ண்றீங்க‌.. இல்ல‌னா கேஸ் ஹிய‌ரிங்னு ப்ர‌வச‌ன‌ம் ப‌ண்றீங்க‌! அப்புற‌ம் அது ராம்லால் இல்ல‌, க‌ன்யாலால்! அது ஒண்ணும் விஷ‌ய‌மில்ல‌ பாஸ், ஜ‌ட்ஜ் ந‌ம்ம‌ சுந்த‌ரேச‌ன் சார் தான், வாய்தா வாங்கியாச்சு. அடுத்த‌ ஹிய‌ரிங் 10 நாள் க‌ழிச்சு இருக்கு. அதுக்குள்ள‌ அந்தாளோட‌ த‌ம்பியை சமாதான‌ ப‌டுத்திட‌ணும்னு சொல்லியிருக்காரு..”

இப்போதெல்லாம் க‌ணேஷ் ரெகுல‌ராக‌ காலை வாக்கிங் வ‌ந்து விடுகிறான். க‌வ‌லைப்ப‌டும்ப‌டி ஏதும் இல்லையென்றாலும், கொஞ்ச‌ம் physical activity வேண்டும் என்று டாக்ட‌ர் கூறி இருக்கிறார். ஒன்றுமில்லை, தின‌ம் ஒரு அரை ம‌ணி நேர‌ம் அவ்வ‌ள‌‌வு தான்.

“மிஸ்ட‌ர் வ‌ச‌ந்த்!” தேன் குர‌லை கேட்ட‌தும் வ‌ச‌ந்த் உட‌ன‌டி ப்ரேக் அடித்து விட்டான்.

“என்ன‌டா நின்னுட்ட‌? அதுக்குள்ள‌யே மூச்சு வாங்குதா?”

“இல்ல‌ பாஸ்.. யாரோ ஒரு பொண்ணு கூப்பிட்டா மாதிரி இருந்துது!”

“அது ஏன்டா என்னிக்குமே உன்ன‌ ஒரு பைய‌ன் கூப்பிட‌ மாட்டேங்க‌‌றான்?”

“ம‌ச்ச‌ம் பாஸ். ச‌ரி வாங்க‌ போலாம்.”

“மிஸ்ட‌ர் வ‌ச‌ந்த்! கொஞ்ச‌ம் நில்லுங்க‌!”

வசந்த் திரும்பி “Excuse me? என்னையா கூப்பிட்டீங்க‌?”

“ஆமாங்க‌ உங்க‌ள‌ தான்! நீங்க‌ தானே வ‌ச‌ந்த்? என்ன‌ வேக‌மா ந‌ட‌க்க‌றீங்க‌ சார்? எவ்ளோ நேர‌ம் நானும் பின்னாடியே ஓடி வ‌ர்ற‌து? ஹ‌லோ க‌ணேஷ் சார்!”

வ‌ச‌ந்த் சிலையாகி இருந்தான். ஜிகினாஸ்ரீ எல்லாம் இவ‌ளுக்கு கால் அமுக்கி தான் விட‌ வேண்டும். அந்த‌ காலை இருட்டில் அவ‌ளை சுற்றி ஏதோ த‌னி வெளிச்ச‌ம் போல‌ ஒரு ஒளி. ஒரே க‌ண‌த்தில் அவ‌ளுக்காக‌ ராத்திரி பூராவும் கூட‌ வாக்கிங் போக‌ த‌யாராகி இருந்தான்.

“ஹ‌லோ ஆமா நான் தான் க‌ணேஷ். இது வ‌ச‌ந்த். நீங்க‌ யாருனு தெரிலியே?”

“உங்க‌ளுக்கு என்னை தெரியாது சார். ஆனா வசந்த் சாருக்கு என்னை ந‌ல்லா தெரியும்!”

“சார் எல்லாம் வேண்டாம். வ‌ச‌ந்த்னே கூப்பிட‌லாம்! செல்லமா வச்சுனு கூட கூப்பிடலாம்! என‌க்கு உங்க‌ளை தெரியுமா? நிஜ‌மாவா?”

“ஹா! நீங்க கொஞ்சம் கூட மாறவே இல்ல வசந்த்! என்னை தெரியலை? நான் தான் உங்க கூட St.Bede’sல 7ஆவது படிச்சேனே, ராஜி! ராஜேஸ்வரி!”

“ராஜியா.. அ.. நல்லா தெரியுமே. இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க? கல்யாணம் ஆகிடுச்சா?”

“இல்ல. வீட்டுல பாத்துட்டு இருக்காங்க. நான் வந்ததே உங்கள பாத்து ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு தான். நீங்க தான் இதுக்கு சரியான ஆளு.”

“அப்படியா.. நீங்க வேணா இன்னிக்கு சாயங்காலம் ஆபீஸுக்கு வாங்களேன்!” என்று க‌ணேஷ் சொன்னதும் அவள் முகம் சட்டென‌ சுருங்கி விட்டது.

“இல்லை க‌ணேஷ், ரொம்ப‌ அவ‌ச‌ர‌ம். என‌க்கு இப்போவே சொல்லியாக‌ணும். ஒரு 20 நிமிஷ‌ம் போதும். ப்ளீஸ்.”

“பாஸ், பெண் பாவ‌ம் பொல்லாத‌து. அதுவும் அழ‌கான‌ பெண் பாவ‌ம் இன்னும் பொல்லாத‌து. எவனாவது பொறுக்கி வம்பு பண்றானா? சொல்லுங்க தட்டி வெச்சிடுறேன்! வாங்க‌ ராஜி.. இது தான் எங்கள் பட்டறை. பாத்து மெதுவா காலை வைங்க, வலிக்க போவுது!” இத‌ற்குள் க‌ணேஷின் ஆபீஸே வ‌ந்து விட்ட‌து.

“ரொம்ப‌ தேங்க்ஸ் வ‌ச‌ந்த்! அதெல்லாம் இல்லை, இது வேற ஒரு விஷயம்.” என்று அவ‌ள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே உள்ளே வ‌ந்தாள்.

“காபி டீ ஏதாவது சாப்பிடறீங்களா?”

“இல்ல கணேஷ், கொஞ்சம் தண்ணி மட்டும் குடுங்க போதும்.” அவள் நீரை விழுங்கும் போது தொண்டை எல்லாம் சிவந்தது பார்த்து வசந்துக்கு கை கால் எல்லாம் விறைத்து விட்டது. இவள் எல்லாம் எப்படி சினிமாக்காரன் கண்களில் இருந்து தப்புகிறாள் என்று தீவிர ஆராய்ச்சியில் இறங்கி இருந்தான்.

“சொல்லுங்க, என்ன விஷயம்?”

“என் பேரு ராஜேஸ்வரி, கூப்பிடுறது ராஜி. நான் ஒரு பெரிய பிரச்சனைல சிக்கிட்டு இருக்கேன். தரமணில..” என்று ஆரம்பித்தவள் சட்டென நிறுத்தி விட்டாள்.

“தரமணில?”

“ராஜி! என்னாச்சு? இங்க பாருங்க? என்ன பாஸ் ஆச்சு?” அவள் சலனமே இல்லாமல் வெற்றிடத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

“தெரியலியே.. அந்த தண்ணிய குடு! எதுக்கும் நம்ம டாக்டருக்கு ஒரு ஃபோன் போட்டுரு!”

வசந்த் அவசரமாக தன் ஃபோனை எடுக்க, கணேஷ் ஏதோ முயன்று கொண்டு இருந்தான். “ராஜி, என்னை பாருங்க.. நான் பேசுறது கேக்குதா?” கணேஷ் பிடித்து உலுக்கவும் மயங்கினாற் போல் கீழே சரிந்தாள். “வசந்த்! வசந்த்! ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணு! சீக்கிரம்!”

“டாக்டர் வந்துட்டே இருக்கேன்னாரு.. ஆம்புலன்சுக்கும் சொல்லிருக்கேன்! மயங்கிட்டாங்களா என்ன?”

“தூக்கு! கொஞ்சம் சாய்வா படுக்க வைக்கலாம். ஹார்ட் பீட்டே கேக்காத மாதிரி இருக்கு!”

“தள்ளுங்க‌ நான் CPR குடுத்து பாக்கறேன்..”

அதற்குள் டாக்டர் வரவும் சரியாக இருந்தது. “என்ன கணேஷ், என்னாச்சு? யார் இவங்க?”

“தெரில டாக்டர், பேசிட்டே இருந்தவங்க திடீர்னு ஒரு மாதிரி வெறிச்சு பாத்துட்டு இருந்தாங்க, மயங்கி விழுந்துட்டாங்க! ஹார்ட் பீட் கூட கேக்கலை எனக்கு..”

டாக்டர் அவளை படுக்க வைத்து பரிசோதிக்க ஆரம்பித்து, “ஆமா, ஹார்ட்பீட் இல்லை, பல்ஸும் இல்லை.” என்று கூறிக் கொண்டே CPR செய்ய ஆரம்பித்தார்.

“ப்ச்.”

“என்னாச்சு சார்?”

“இறந்துட்டாங்க. கார்டியாக் அரெஸ்ட் நினைக்கிறேன். காப்பாத்த ஒண்ணும் வாய்ப்பு இல்ல. நெஞ்சு இல்லனா கை ஏதும் வலிக்குதுனு சொன்னாங்களா என்ன? ரொம்ப சின்ன பொண்னா இருக்காங்களே..”

“இல்லை டாக்டர், வலில இருக்கற மாதிரி ஒரு துளி கூட தெரியல! ஏதோ சொல்ல வந்தா, அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே! நம்ம வசந்த் க்ளாஸ்மேட்டாம். ப்ச்.”

“என்ன பாஸ், 5 நிமிஷம் முன்னாடி தானே நல்லா பேசிட்டு இருந்தா? என்னால நம்பவே முடியல!”

“தூக்கத்துல உங்களை எழுப்பிட்டோம், உடனே வந்து பாத்ததுக்கு நன்றி டாக்டர்.”

“சே சே.. என்ன கணேஷ் நமக்குள்ள இதெல்லாம். நெய்பர்ஸா இருந்துட்டு இது கூட பண்ணலேன்னா என்ன அர்த்தம். போலீசுக்கு சொல்லிடுங்க.”

“ஓகே, நான் சொல்லிடுறேன், தேங்க் யூ!”

அசப்பில் பார்ப்பதற்கு தூங்குகிறவள் போலத் தான் இருந்தாள். யார் இவள்? என்ன பிரச்சனையை சொல்ல வந்து உயிரை விட்டு விட்டாள்?? வசந்துக்கு வெகு நாள் கழித்து நிஜமாகவே வருத்தமாக இருந்தது. எத்தனையோ பேர் உயிரை விடுவதை பார்த்தாயிற்று.. இருந்தாலும் இதை ஜீரணிக்க கஷ்டாமாயிருந்தது.

“ஏன் வசந்த், இந்த பொண்ணு யாரு என்ன, எங்க இருக்கா ஏதாவது விபரம் உனக்கு தெரியுமா?”

“பாஸ்.. எனக்கு இவளை பத்தி விபரம் தெரிஞ்சு இருந்து இருந்தா இந்நேரம் கல்யாணம் குடும்பம்னு செட்டில் ஆகிருக்க மாட்டனா? எதுவுமே தெரியாது பாஸ், என் கூட படிச்சதா சொன்னது கூட எனக்கு நினைவுக்கு வர மாட்டேங்குது!”

“என்னடா உடனே கம்ப்யூட்டர் கிட்ட போயிட்ட?”

“இருங்க பாஸ்.. ஃபேஸ்புக்ல என் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் யாருக்காவது ராஜினு காண்டாக்ட் இருக்கா பாக்கறேன். யாருக்காவது தெரிஞ்சு இருக்கலாமே..”

இன்ஸ்பெக்டர் நகுலன் ஃபாரன்ஸிக் ஆட்களுக்கும் கூட வந்த ஏட்டுக்கும் சில பல ஆணைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். கணேஷிடம் வந்து, “மிஸ்டர் கணேஷ், யாருனே தெரியாத ஒரு இளம் பெண் உங்க ஆபீஸுக்கு இவ்ளோ காலைல வந்தாங்கன்னு சொல்றது நம்பற மாதிரியா இருக்கு? நீங்க உண்மையை சொல்லலைனு எனக்கு சந்தேகமா இருக்கு.”

“பாருங்க மிஸ்டர் நகுலன், எங்க பாஸ் யாருனு நினைச்சு பேசிட்டு இருக்கீங்க நீங்க? கமிஷனர் ராஜேந்திரனிடம் ஒரு வார்த்தை சொன்னால் போதும்..” என்று சொல்லிக் கொண்டிருந்தவனை இடைமறித்து கணேஷ், “இல்லை இன்ஸ்பெக்டர், எங்களுக்கு இந்த பெண்ணை தெரியாது, நான் நடந்ததை தான் சொன்னேன். உங்களுக்கு எங்கள் மேல் சந்தேகம் வரத் தேவையில்லை, வேணும்னா உங்க கமிஷனர் கிட்ட கேட்டு பாருங்க. We’ll definitely co-operate by all means. And am as interested in the post-mortem report as you are.” என்றான்.

இன்ஸ்பெக்டர் வெளியேறவும், கம்ப்யூட்டரில் இருந்த வசந்த் விசில் அடிக்கவும் சரியாக இருந்தது.

தொடரும்…

சுஜாதாவின் கதைகள் சொல்லப்பட்ட விதத்தாலேயே வாசகர்களுக்கு ஒரு துள்ளலான மன நிலையை அளித்தன. வசந்த்தின் சொல்லி முடிக்கப்படா ஜோக்குகளும், கண் மறைவில் சொல்லப்பட்டு ,கேட்ட பெண்ணின் எதிர்வினைகள் மட்டுமென வாசகனுக்கு அறிமுகமான சில ஜோக்குகள் என பிரசித்தம். வசந்த் சில கதைகளில் பாரதி கவிதைகளையும் உபயோகித்திருப்பார். அப்துல் ரகுமான், மேத்தா போன்றோரின்-கவிதைகளும் அடக்கம். கன்னம் வைப்பதைத் தவிர அனைத்து வேலைகளையும் வசந்த் செய்திருப்பார். ஒரு கதையில் அவரே இதைக் குறிப்பிட்டிருப்பார். சில முறை அந்த மாதிரி வேலைகளில் தாக்கப்பட்டிருப்பார். நைலான் கயிறில் கணேஷ் இம்மாதிரி வேலையைச் செய்து போலீஸிடம்-அகப்பட்டு பின்பு சமாளித்து வெளிவருவார். ஏறக்குறைய எல்லாக் கதைகளின் துப்பறிதலிலும் Mistrust the Obvious என்பதே கணேஷின் அடிப்படையாக இருக்கும்.

Advertisements

3 thoughts on “1-Black Moon – ஹேமா ஸ்ரீதர்

 1. vidya (@kalkirasikai) December 11, 2013 at 6:33 PM Reply

  இது ஹேமா ஸ்ரீதரின் கதையா? அவரது வேறு படைப்புகள் பற்றி அறிய விருப்பம்.

  • BaalHanuman December 12, 2013 at 2:30 AM Reply

   ஆமாம். இது ஹேமா ஸ்ரீதரின் கதைதான்…அவரது மற்ற படைப்புகள் பற்றி விரைவில் அவரே கூறுவார்…

 2. Hema Sridhar December 13, 2013 at 5:30 AM Reply

  “இங்கயும் பொறுமையா பப்ளிஷ் பண்ற உங்க ஆர்வத்துக்கும் பொறுமைக்கும் பெரிய சல்யூட் தான் வைக்கணும் ஸ்ரீநிவாசன் சார்!

  முன்னயும் பின்னயும் ஃபோட்டோ, துணுக்கெல்லாம் வேறயா, பின்றீங்க!!!!

  வித்யா: நான் வேறே எதுவும் எழுதலை இன்னும், இதுவே சில வருஷங்கள் முன்னாடி எழுதினது தான்.. ஆனா இனிமே எழுதினா(!), அதுக்கு இவரை தான் நான் பப்ளிசிட்டி ஆபீசரா வெச்சுக்க போறேன் (அவருக்கே விருப்பம் இல்லேன்னாலும்.. ஹிஹி)!”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s