வடை போச்சே.. – ஹேமா ஸ்ரீதர்


Sujatha_0

இது நடந்தது 1987 சமயம் இருக்கலாம்.. அப்பா ரிசர்வ் பேங்க் வேலையில் சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகியிருந்த சமயம்.. அப்போ வெளிநாட்டுக்கு செல்ல ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் ஒரு குறிப்பிட்ட அமவுண்டுக்கு மேல் வேணும்னா ரிசர்வ் வங்கிக்கு வந்து தான் சில பல ஃபார்ம் ஃபில் செய்து வாங்க வேண்டும். ரிசர்வ் வங்கியிலே எல்லாமே கொஞ்சம் ஜாக்கிரதையாக செய்ய வேண்டிய வேலை தானே, அது போல் தான் இதுவும், எதுவும் பிரச்சினை ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Sujatha_1

ஒரு நாள் ஒரு ஆள் வந்து அப்பாவிடம் இந்த மாதிரி இத்தனை தொகைக்கு டாலராக வேண்டும் என கேட்க, அப்பாவும் வேலையை ஆரம்பிக்க, வந்தவர் வேறு ஒருவர் டாலர் வாங்க போகிறவர் வேறு ஒருவர் என்று தெரிய வந்தது.. அப்பாவும் உடனே, அப்படி செய்ய முடியாது, யாருக்கு வேண்டுமோ அவர் தான் நேரில் வந்து கையெழுத்து போட்டு வாங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். வந்தவர் அதெல்லாம் முடியாதுங்க, அவரு ரொம்ப பிஸி 2 நாளில் யூ.எஸ் செல்ல வேண்டும் எப்படியாவது இப்போவே குடுங்க என சொல்ல ஒரு வழியாக அப்பா அவரை ரூல்ஸ் சொல்லி நாளை சம்பந்த பட்டவருடன் வந்தால் உடனடியாக முடித்து தருவதாக சொல்லி அனுப்பியாச்சு.

Sujatha_2

மறுநாள் அதே ஆள் சம்பந்தபட்டவருடன் வந்து ஒரு 2-3 மணி நேரம் எல்லா வேலையும் செய்து முடித்து அனுப்பியவுடன், பக்கத்து சீட் ஆபிசர் வந்து அப்பாவிடம் சொன்னாராம்..

Sujatha_31

“என்ன ஸ்ரீதர், இப்படி பண்ணிட்டியே, அவரை உள்ளே கூட்டி வந்து ஒரு காஃபி குடுத்து உபசரித்து இருக்கக் கூடாதா?”

“…”

Sujatha_32

“சரியா போச்சு போ, வெண்பா எல்லாம் எழுதி பரிசு வாங்கறே, அவரை ஆனா அடையாளம் தெரியலையா, அவர் தான் சுஜாதா.”

(எனக்கு அப்போ ஒண்ணரை வயசு இருந்திருக்கும் நீ பக்கத்துல இருந்து பார்த்தியான்னு எக்குத்தப்பா கேட்க கூடாது.. அப்புறமாக அப்பா அங்கலாய்த்துக் கொண்டது..)

Advertisements

One thought on “வடை போச்சே.. – ஹேமா ஸ்ரீதர்

  1. Pandian December 14, 2013 at 1:40 AM Reply

    சுவையான பதிவு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s