9-சுஜாதாவின் நாடகங்கள் – அ.ராமசாமி


இதன் முந்தைய பகுதி…

சுஜாதாவின் முன்னுரை…

எனக்கு நாடகங்கள் மூலம் கிடைத்த மிகப் பெரிய சந்தோஷம், நான் எழுதிய வார்த்தைகளுக்குப் பரிமாணம் கிடைக்கும்போது மக்கள் சிரிப்பதும் தங்கள் வீட்டு நாடகங்களை மறந்து அல்லது நினைவு கொண்டு கண்ணீர் சிந்துவதும் வெறுப்பதும் நெகிழ்வதும் அவர்களுடன் வீற்றிருந்து பார்க்கும்போது எழுத்துக்கு இத்தனை சக்தியா என்பதைக் கண்டு அடுத்தடுத்து இன்னும் சிறப்பாக எழுதலாம் என்ற உந்து சக்தி கிடைத்து, நிறைய எழுதி விட்டேன்.

இவைகளை உயிர்மை பதிப்பகத்தார் ஒரே புத்தகத்தில் தொகுத்திருப்பதைப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. ஏராளமான சிறுகதை, நாவல்களுக்கு இடையே இத்தனை சேர்ந்து விட்டதா என்று. Deadlines என்னும் கெடுவுக்குள் எழுதியாக வேண்டும் என்று இருந்தால் ஒவ்வொரு எழுத்தாளரும் நிறைய சாதிக்க முடியும் என்பதையே இது உணர்த்துகிறது.

ஓவர் டு அ.ராமசாமி… 
நேர்கோட்டில் நிகழ்வுகளை நகர்த்திச் செல்லும் எளிய வடிவத்தைக் காட்சி மாற்றம் என்ற உத்தியைப் பயன்படுத்தி இரண்டு குறுநாடகங்களை எழுதியுள்ளார் சுஜாதா. ஆகாயம் என்ற வானொலி நாடகத்திலும், முயல் என்ற சிறுவர் நாடகத்திலும் அவ்வுத்தியைக் காணலாம். காட்சி மாற்றம் என்ற குறிப்பு இல்லை என்றால் இவ்விரண்டும் சிறுகதை வடிவத்தைப் பெற்று விடும் வாய்ப்புகள் கொண்டவை.
நெருக்கடியான தருணங்களில் மனிதர்கள் எடுக்கும் முடிவு தர்க்கங்கள் சார்ந்ததல்ல; தீர்மானமற்ற முடிவுகள் தான் மனிதர்களை வழி நடத்துகின்றன எனச் சொல்லும் இந்த நாடகம் அதற்கு மாறான தன்மையை வாசிப்பிலும் மேடை ஏற்றத்திலும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்று. அறிவியல் புனைவு போலத் தோற்றம் தரும் ஆகாயம் அறிவியல் பார்வை அற்ற மனவியல் தர்க்கத்தை முன் மொழியும் நாடகம்.
முயல் நாடகமும் கூட மனிதர்களின் மனவியலின் முடிவை முக்கியப்படுத்தும் நாடகம் தான். பணம் சார்ந்த உலகம் வேலைக்கும் அதிகாரத்திற்கும் கட்டுப்பட்ட வாழ்க்கைக்கு மனிதர்களைத் தள்ளி விடும் நிலையைச் சொல்லும் முயல், அதிலிருந்து விலகி, இந்த உலகம் பிற உயிரினங்களுக்கும் உரியதாக இருக்கிறது என்பதை உணரும் போதே மனித வாழ்வின் இருப்பு அர்த்தம் உடையதாக ஆகும் என்பதை வலியுறுத்திக் காட்டுகிறது. தாமோதரனின் வீடு, தாமோதரனின் பூங்காடு கிராமம், தாமோதரனின் அலுவலகம் எனக் காட்சிகளை மாற்றி மாற்றி நிகழ்த்திக் காட்டும் முயல் நாடகத்தின் நிகழ்வின் கால அளவு இரண்டு நாள்கள் மட்டுமே. முயல் நாடகத்தில் தூக்கலாக இருக்கும் சிறுகதை அம்சம் மந்திரவாதி, சேகர் என்ற இரு குறுநாடகங்களில் வெளிப்பட வாசல் நாடகத்தில் ஒரு குறுநாவலின் அம்சம் வெளிப்பட்டுள்ளது.
ஆண் – பெண் உறவில் இருக்கும் ஆதிக்க மனநிலை, வக்கிர உணர்வு, சந்தேக வெளிப்பாடு என்பனவற்றைச் சிறுகதையாக எழுதியுள்ள சுஜாதா, காட்சி வழி நகரும் நாடகத்திலும் மையப்படுத்திக் காட்டியுள்ளார். மந்திரவாதம் என்ற தொழில் மேல் கொண்ட பிடிப்புக்குப் பின்னால், மந்திரவாதி என்னும் ஆணின் அந்தரங்க ஆசையாகத் தன்னால் வளர்க்கப்பட்ட தங்கை மகளை அடைய விரும்பும் குரூரம் இருந்தது என்பதை மந்திரவாதி நாடகத்தில் காட்டியுள்ளார்.தனது தங்கை மகள் மரகதத்தை விரும்பும் இளைஞன் சந்திரசூடனின் விருப்பத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் மந்திரவாதி ராஜாவின் அந்தரங்க ஆசையின் குரூரத்தை உடைத்துக் காட்டுவதன் மூலம் மந்திரவாதம் என்பது தந்திரங்களின் தொகுதி எனக் காட்டியுள்ளார் சுஜாதா. காட்சிகளாக இந்த நாடகம் பிரிக்கப்படவில்லை என்றாலும் காட்சிக் கூடம், பேருந்து நிறுத்தம், மந்திரவாதியின் வீடு என வேறு வேறு இடங்களில் நடைபெறுவதால் காட்சிகளாகப் பிரித்துக் காட்ட காட்சி மாறுகிறது என்ற குறிப்புகளைத் தந்துள்ளார்.

தொடரும்…

முயல்
உலகப் பிரசித்தி பெற்ற டெலிவிஷன் நாடகங்களில் ஒன்றான Rabbit Trap என்கிற ஜெ.பி.மில்லரின் நாடகத்தை ஒட்டி எழுதப்பட்டது இந்த நாடகம்.

ஆகாயம்  (ரேடியோ நாடகம்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s